ஆல் நியூ அறிவிய்ல - சைமன்ஸ்கி
ஆல் நியூ அறிவியல் - சைமன்ஸ்கி
மின்சார உணவு சாப்பிட
ரெடியா?
கரண்டைத் தொட்டால்
சாவுதான் வரும்.
சோறு வருமா? ஏன் வராது என்கிறார்கள் பின்லாந்தைச்
சேர்ந்த லாப்பீன்ரன்டா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் VTT தொழில்நுட்ப ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள்.
என்ன தேவை? தேவையான
அளவு மின்சாரம், தேவையான அளவு நீர், சிறிது
கார்பன்டை ஆக்சைடு, கொஞ்சம் நுண்ணுயிரிகள்.
பயோரியாக்டரில்
மேற்சொன்ன பொருட்களை கொட்டினால் சில நிமிடங்களில் பவுடர் (50% புரதம்
25% கார்போஹைட்ரேட்) கிடைக்கும். அதில் நுண்ணுயிரிகள் இதன் தன்மையை மாற்றினால் உணவு ரெடி. "நாங்கள் தற்போது ரியாக்டர், டெக்னாலஜி ஆகியவற்றை அப்டேட்
செய்துவருகிறோம்" என பெருமிதமாகிறார் ஆராய்ச்சி தலைவரான
ஜூகா பெக்கா பிட்கானன்(VTT). உடனே எங்கே எங்கே என பறக்காதீர்கள்.
இந்த மின்சார உணவு விவசாயமே இல்லாத பாலைவனம் உள்ளிட்ட இடங்களில் மக்களுக்கு
வழங்கப்படவிருக்கிறது. மூலப்பொருட்கள் அதிகளவு தேவஐ என்பதால்
கமர்ஷியல் உணவாக பத்து ஆண்டுகள் தேவை.
கிஸ்மோ ரவுண்ட்
அப்!
Sen.se SleepPeanut
5செ.மீ நீளமுள்ள ஸ்லீப்பீநட் என்ன செய்யும்? நீங்கள் தூங்குவதை,
உங்கள் உடலின் வெப்பத்தை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கண்காணிக்கும்.
தகவல்களை ப்ளூடூத் வழியாக உங்கள் போனுக்கு அனுப்பும். மொபைல் ஆப் பிளஸ் அலாரக்கடிகாரத்தின் அனுகிரகமும் உண்டு. விலை ரூ. 2,197
Volterman Smart
Wallet
கூட்டத்தில் ஒருத்தனாக
பம்மிக்கொண்டு இருக்கும் லட்சணத்தில் நமது கந்தல் பர்ஸ், ஸ்மார்டாக
இருந்து என்னாகப்போகிறது? என நினைப்பீர்கள். போனை சார்ஜூக்கு பவர்பேங்க், வைஃபை ஹாட்ஸ்பாட்,
அலாரம், ஜிபிஎஸ்,கேமரா என
ஜேம்ஸ்பாண்ட் வகையறா உபகரணமாக மிரட்டுகிறது வால்டர்மேன் வாலட். போனை வேறுயார் எடுத்து திறந்தாலும் அவர் முகம் போட்டோ எடுக்கப்பட்டு உங்கள்
போனின் கதவைத்தட்டும். நம்மைவிட செம ஸ்மார்டான வால்டர்மேன் பர்ஸின்
விலை ரூ. 8,261
சாக்லெட்டின் குஷி
சீக்ரெட்!
தன் டெடிபியரைக்
கூட கடன் கொடுக்கும் குட்டீஸ்கள் உண்டு. ஆனால் சாக்லெட் மேட்டரில் பங்கு கேட்டால் வெட்டுக்குத்துதான். சாக்லெட் ஃபுல்லா எனக்கே வேணும் என அப்படியே பஞ்சாமிர்தமாக வாயில் வழிய வழிய
குட்டீஸ் சாப்பிடும் ரகசியம் என்ன?
Tryptophan,Phenylethylalanine,Theobromine
இந்த மூன்று மும்மூர்த்திகள்தான் சுட்டி டிவி பார்த்தபடி சமயத்தில் வாங்கிக்கொடுத்த
நமக்கே பீஸ் கொடுக்காமல் சாக்லெட்டை வாண்டுகள் தாம்பூலமாய் வாயில் குதப்பி அப்படியே
சாப்பிடக்காரணம்.
சாக்லெட்டில் கொஞ்சமே
கொஞ்சம் ட்ரைப்டோபன் மூளையில் மேக்சிமம் அளவில் செரடோனை சுரக்கச்செய்து சந்தோஷம் தருகிறது. பீனிலெதிலானைன்
வேதிப்பொருள், காதல் உங்களுக்கு வரும்போது உங்கள் உடம்புக்குள்
வரும் எதிர்பார்ப்பு, சந்தோஷம், பதட்டம்
அத்தனையும் ஏற்படுத்துவதோடு, மன அழுத்தத்தையும் நசுக்குகிறது.
தியோப்ரோமைன் காபீனோடு காம்பினேஷன் அமைத்து மகிழ்ச்சி உணர்வை ஏற்படுத்துகிறது.
11 கிலோவுக்கு லிமிட் தாண்டி சாக்லெட் தின்றால் கஞ்சா பயன்படுத்தியதற்கு சமம். டார்க் சாக்லெட்டிலுள்ள ப்ளேவ்னாய்டுகள் மனஅழுத்தம், ரத்த ஓட்டம், புற்றுநோய் எதிர்ப்பு என அத்தனைக்கும் நல்லது
என மருத்துவர்கள் சத்தியம் செய்கின்றனர்.
ஃபேஸ்புக்கின்
AI ஆராய்ச்சி விதையா? விபரீதமா? -ப.அனுஷா
ஃபேஸ்புக் நிறுவனர்
ஸூக்கர்பெர்க் நடத்திய செயற்கை அறிவு ஆராய்ச்சியில் ரோபாட்டுகள் தமக்குள் உரையாடியதால்
அந்த ஆராய்ச்சி நிறுத்தப்பட்டுவிட்டதா திடீரென பிரேக்கிங் நியூஸ்! செய்தி
உண்மையா?
மிரர்,சன்,
இன்டிபென்டண்ட், டெலிகிராப் உள்ளிட்ட அனைத்து பத்திரிகைகளில்
ரோபாட் ஆபத்து என்ற ரீதியில் எக்கச்சக்க கட்டுரைகள், எக்ஸ்பர்ட்டுகளில்
ஆலோசனைகள். இதில் உச்சமாக சன் பத்திரிகை, ஆண்ட்ராய்டுகளின் படத்தையும் பிரசுரித்து பீதி கிளப்பியிருந்தது.
ஜூனில் ஃபேஸ்புக்
தனது புதிய சாட்பாட் பற்றிய செய்தியை எக்ஸ்க்ளூசிவ்வாக வெளியிட்டதுதான் ரோபாட் சர்ச்சைகளுக்கு
பிள்ளையார் சுழி.
சாட்பாட்டுகளில் மொழி குறித்த ஆராய்ச்சியை ஃபேஸ்புக் செய்து வந்தது.
அப்படி ஒரு சோதனை சாம்பிள் ஒன்று வெளியானது. உடனே
ரோபாட்டுகள் தங்களுக்கென புதியமொழியை கண்டுபிடித்துவிட்டன என்று செய்திகளில் ஆரவாரம்
கிளம்பியது. டெர்மினேட்டர் பட ரோபாட் போல மனிதர்களின் கபாலத்தை
துப்பாக்கியால் அடித்து பிளக்கும் கற்பனை வேண்டாம். ஆங்கிலமொழியை
பிறரோடு தொடர்புகொள்ள ஏதுவாக சாட்பாட் தன்னை தொடர்ந்து அப்டேட் செய்வது இயல்பான ஒன்றே.
கூகுளின் ஆல்பாகோ இந்தவகையைச் சேர்ந்ததே. ஆப்பிளின்
சிரி, அமேஸானின் அலெக்ஸா ஆகிய அசிஸ்டெண்டுகள் மனிதர்களுடன் உரையாடுவது
பிராக்டிக்கலுக்கு எதிரானதா?
ஆனால் இந்த செய்தியை
புரிந்துகொள்ளாமல் பல ஊடகங்களும் கைநடுங்கி பிரேக்கிங் நியூஸ் போட்டுவிட, எலன் மஸ்க்,
மார்க் ஸூக்கர்பெர்க் இடையே செயற்கை அறிவு தொடர்பான வார்த்தை மோதல்கள்
தொடங்கிவிட்டன. ஆனால் செயற்கை அறிவு கட்டுப்படுத்தும்படி ஆயுதங்களை
ஒப்படைப்பதில்தான் சிக்கல் இருக்கிறதே ஒழிய, செயற்கை அறிவு கொண்டி
இரு கருவிகள் தமக்குள் உரையாடுவதால் ஆபத்து இல்லை. சாட்பாட்டுகள்
என்பவை குறிப்பிட்ட சில செயல்பாடுகளை மட்டுமே செய்யக்கூடியவை என்பதை புரிந்துகொண்டால்
பீதியடைய அவசியமில்லை. ஆனால் எதிர்காலத்தில் செயற்கை அறிவு ஆராய்ச்சிக்கான
வரைமுறைகளை ஏற்படுத்துவது மிக அவசியம்.
பிரான்சில் தொன்மை
இடம் கண்டுபிடிப்பு!
பிரான்ஸ் நாட்டின்
வியன்னாவில் பழமையான ரோம நாகரிகத்தின் தொல்லியல் நகரத்திலுள்ள வீடுகள், இடங்கள்
பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது அங்கே லிட்டில் பாம்பெய்
என்ற இடம் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. "நாங்கள் அதிருஷ்டசாலிகள்.
கடந்த 50 ஆண்டுகளில் எங்களுக்கு கிடைத்த முக்கியமான
கண்டுபிடிப்பு இது" என சுறுசுறுப்பாகிறார் பெஞ்சமின் கிளமண்ட்.
லியோன் நகரிலுள்ள ரோன் ஆற்றின் படுகையில் 30கி.மீ தோண்டி இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்கிறது.
தற்போது கண்டறியப்பட்டுள்ள
இடம் பிரமாண்டமாக
7 ஆயிரம் ச.அடி பரப்பு கொண்டது என்பதால்,
ஆராய்ச்சியாளர்கள் இதனை முக்கியமாக கவனப்படுத்துகின்றனர். கட்டப்பட்ட காலம் கி.பி 1 என்றும்,
மக்கள் இங்கு 300 ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம் என்றும்
ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். லிட்டில் பாம்பெய்(இத்தாலியின்
தொன்மை நகரம்)
இந்த கண்டுபிடிப்பை
அடையாளப்படுத்துகிறார்கள்.
மாடி, மார்பிள் கல், பால்கனி
என வீடு இருப்பதால் அதில் வாழ்ந்தவர் வணிகராக இருக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
அடுத்து வரும் நாட்களில் கிளமண்டின் 20 கொண்ட குழு
நகரை முழுமையாக அகழ்ந்தெடுக்ககூடும்.
நன்றி: முத்தாரம் வார இதழ்