பசுமை பேச்சாளர்கள் 16 அர்னால்டு அல்கோர் ஜூனியர் ச.அன்பரசு




பசுமை பேச்சாளர்கள் 16
அர்னால்டு அல்கோர் ஜூனியர்.அன்பரசு


அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் 1948 ஆம் ஆண்டு பிறந்த ஆல்பெர்ட் அர்னால்ட் ஜூனியர், முன்னாள் துணை அதிபர், எழுத்தாளர், சூழலியலாளர், வழக்குரைஞர், பேச்சாளர் என தூள் கிளப்பிய மல்டிடாஸ்க் மாஸ்டர்.

 டென்னிஸி மாநிலத்தின் செனட்டராக 18 ஆண்டுகள் பணியாற்றிய அல்கோர், தன் 24 ஆண்டு அரசியல் வாழ்வு கடந்து சூழலியல் நேயராக உலகிற்கு அறிமுகமானவர். சிறுவயதில் பெரும்பாலும் கார்டேஜ் பண்ணை நிலத்தில் விலங்குகளை, புகையிலை ஆகியவற்றை விளைவிப்பதில் ஆர்வமாக இருந்தார். ஸ்காட்- ஐரிஷ் வம்சாவழியைச் சேர்ந்தவர் படிப்பில் படு சுட்டி என்பதே, பள்ளிக்குப் பிறகு ஹார்வர்டில் விண்ணப்பித்த உடனே படிக்க அனுமதி கிடைக்க ஒரே காரணம்.

1976 ஆம் ஆண்டிலிருந்து அல்கோரின் இயற்கை மீதான செயல்பாடுகள் தூய நீர், காற்று, பசுமை இல்ல வாயுக்கள் ஆகியவற்றுக்கு எதிராக மாநாடு நடத்துவதிலிருந்து தொடங்கின. An Inconvenient Truth என்ற சூழல் நூல் அல்கோரின் பெருமையை வேறு லெவலுக்கு மாற்றியது. மேலும் பல புத்தகங்களை எழுதிய அல்கோர் 2007 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர். ஆப்பிள் இன்க் மற்றும் கூகுள் நிறுவனத்தின் மூத்த ஆலோசகராக பணியாற்றியவர். டென்னிசி பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கௌரவ பேராசிரியர் அங்கீகாரமும் பெற்றவர் இவர். 1993-2001 வரை கிளிண்டன் அரசில் துணை அதிபராக பதவி வகித்தவர், 2000 அதிபர் தேர்தலில் தோற்றபிறகு, அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. 2005 ஆம் ஆண்டு கிளைமேட் ரியாலிட்டி ப்ராஜெக்ட் என்ற தன்னார்வ அமைப்பை தொடங்கி, சூழலை காப்பதற்கான பயிற்சிகள், உலகளாவிய ஊடக நிகழ்வுகள், தொடர்புகள், போராட்டங்கள் ஆகியவற்றை செய்யத்தொடங்கிய அல்கோர் அதன் தலைவராக இருந்து நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார்.

இவ்வாண்டு தனது Inconvenient Truth படத்தின் இரண்டாம் பாகமாக Truth to the Power என்ற படத்தை வெளியிட்டார். சுற்றுச்சூழலுக்கான அல்கோரின் போராட்டம் பற்றியதுதான் படம். "பணம் ஜனநாயகத்தை அழித்துவிடும் என்பதை உறுதியாக நம்புகிறேன். போராட்டத்திற்கான பணத்தை மக்களிடமிருந்து பெறுகிறேன். கார்ப்பரேட்டுகளிடமிருந்து அல்ல. விழிப்புணர்வுக்கு சமூகவலைதளங்கள் உதவுகின்றன" என்கிறார் அல்கோர்.

நன்றி: முத்தாரம் வார இதழ்