பசுமை பேச்சாளர்கள் 17 மைக்கேல் ப்ரான்கர்ட் ச.அன்பரசு
பசுமை பேச்சாளர்கள் 17
மைக்கேல் ப்ரான்கர்ட்ச.அன்பரசு
ஜெர்மனியில் Schwäbisch Gmünd நகரில்
1958 ஆம் ஆண்டு பிறந்த மைக்கேல் ப்ரான்கர்ட் வேதியியலாளர் என்பதோடு, தொழிற்சாலைகளை சூழலுக்கேற்ப நன்முறையில் கழிவுகளை குறைப்பவர், மிகச்சிறந்த சூழலியல் சிந்தனையாளர்.
"குறைந்தபட்ச கார்பன்" என்ற பேச்சே கேலிக்கூத்தானது. மரம் கார்பன்டை ஆக்சைடை செரித்து,
ஆக்சிஜனை நமக்கு தருகிறது.
கார்பன் குறைந்த மரம் எங்கேனும் வளர்ந்திருக்கிறதா? உற்பத்தி மூலமாக பெருகும் கார்பன் பிரச்னையில்லை. அந்தக்கழிவை சரியானமுறையில் நமக்காக பயன்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம். ஒரு தொழிலில் கழிவு உருவாகினால் நாம் சரியாக செயல்படவில்லை என்றே அர்த்தம் என
அழுத்தம் திருத்தமாக பேசுகிறார் மைக்கேல். இவரின் C2C கான்செப்ட்டும் இதுதான்.
தற்போது
ஸூடர்பெர்கிலுள்ள அப்ளைடு சயின்ஸிலுள்ள ப்ரோசஸ் எஞ்சினியரிங் பேராசிரியராக பணியாற்றும் மைக்கேல், 1982 ஆம் ஆண்டு க்ரீன்பீஸ் அமைப்பில் இணைந்தார்.
1985 ஆம் ஆண்டு ஹனோவர் பல்கலையில் முனைவர் பட்டம் வென்ற மைக்கேல்,
1987 ஆம் சூழல் ஏஜன்சியான EPEA வை தொடங்கினார். அதோடு கார்னகி மெலன், டார்டன் வணிகப்பள்ளி, பாஹாஸ் யுனிவர்சிட்டி, வேல்ஸ் யுனிவர்சிட்டி என
பல்வேறு பல்கலைகளிலும் தளராமல் பேராசிரியாக பணிசெய்தார். 2002 இல் தன் நண்பர் மெக்டோனஹ் உடன் சேர்ந்து சூழல் கட்டிடங்களுக்கான நிறுவனத்தை தொடங்கினார்கள். "ஒப்பீட்டில் எறும்புகள் நம்மைவிட அதிகம். ஆனால் அவற்றுக்கு உணவு கிடைக்கையில் மனிதர்களில் குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டும் எப்படி கிடைக்காமல் போகும்?
டிவி, வாஷிங்மெஷினை வாங்காமல் குறிப்பிட்ட தொகை கொடுத்து அதனை பயன்படுத்தினால் உங்களுக்கும் செலவு மிச்சம்தானே! இதுதான் எங்கள் பிளான்.
மாற்றவேண்டியது பொருட்களை அல்ல, மனதை" என புதிய தத்துவம் பேசும் மைக்கேல்
Cradle to Cradle என்ற
கான்செப்டின் மூலம் ஆலோசனை சொல்கிறார்.
ஐடியாவை சாதித்ததால் ஏராளமான பரிசுகளையும் பெற்றிருக்கிறார். "ஐரோப்பாவில் பெண்கள் வாக்குரிமையைப்பெற 150 ஆண்டுகள் தேவைப்பட்டது. உண்மையான மாற்றங்களுக்கு அதிக காலம் தேவை.பூமியில் தடைகளில்லை. பிற உயிர்களையும் மதித்தால் பூமியில் நாம் நெடுங்காலம் வாழமுடியும்" என உற்சாகமாக பேசுகிறார் மைக்கேல் ப்ரான்கர்ட்.
நன்றி: முத்தாரம் வார இதழ்