சயின்ஸ் பிட்ஸ்! - ஆலன் வான்கா& சைமன்ஸ்கி
சயின்ஸ் பிட்ஸ்! - ஆலன் வான்கா& சைமன்ஸ்கி
பிட்ஸ் ஸ்பாட்!
1912 ஆம்
ஆண்டு பாரீசைச் சேர்ந்த ஆதரவற்றோர் இல்லம் நன்கொடையைப் பெற நடத்திய போட்டியில் பரிசு
என்ன தெரியுமா? குழந்தைகள்தான்.
2010 ஆம்
ஆண்டு கொரிய மனிதர் ஒருவர், தன் Dakimakura என பெயரிடப்பட்ட தலையணையை திருமணம் செய்துகொண்டார். ஜப்பானின் பிரபல அனிமேஷன் கதாபாத்திரத்தின் படம் அதில் அச்சிடப்பட்டிருந்தது.
தென்கொரியாவில்
ஒற்றர்களைப் பற்றி தகவல்களைக் கூற உதவும் எண் 113
பசுவைப் போல தன்னைக்
கருதிக்கொண்டு வாழும் மனநோய்க்கு Boanthropy என்று பெயர்.
பிரான்சில் விற்கப்படும்
கழிப்பறை தாளின் நிறம் பிங்க்.
பிட்ஸ் பாய்ண்ட்!
உலகில் 2% நபர்கள்
ABCC11 என்னும் ஸ்பெஷல் ஜீனை பெற்றிருக்கிறார்கள். என்ன பிரயோஜனம்? அக்குள் வியர்வை மணம் வராதாம்.
உலகில் மிக அமைதி
நிலவும் அறையில் கேட்கும் ஒலி அளவு 9 டெசிபல். இந்த அறையில் உங்கள் உடலில் பாயும் ரத்த ஓட்டத்தின் ஒலியையே கேட்கமுடியும்.
பறக்கும் வேகத்தில் 12 நொடிகள்
பிரேக் எடுத்து தூங்கும் Frigatebird இதன் மூலம் பல மாதங்களுக்கு
தொடர்ந்து சோர்வின்றி பறக்கிறது.
வெள்ளை ஸ்ட்ராபெரி, அன்னாசிப்பழத்தின்
சுவை கொண்டது.
இருளுக்கு கண்கள்
பழகவும்,
சூரியன் அஸ்தமனமாகவும் தேவைப்படும் நேரம் ஒன்றுதான் எவ்வளவு?
15 நிமிடங்கள்.
காட்டிலுள்ள ஒட்டகச்சிவிங்கிகள்
தினசரி
30 நிமிடங்கள் மட்டுமே ஸ்டேண்டிங்கில் தூங்குகின்றன. ஏன்? பிற விலங்குகளின் அட்டாக்கிற்கு பயந்துதான்.
நீர்நாயின் பற்கள்
வாழ்நாள் முழுவதும் வளர்....ந்துகொண்டே இருக்கும் என்பதால் அவை மரங்களை நான்ஸ்டாப்பாக கொறித்து தள்ளுகின்றன.
ஆண் வரிக்குதிரைகள்
ஏன் தனியாக தூங்குவதில்லை ஏன் தெரியுமா? பெண் இணைகளை ரோமியோ வரிக்குதிரைகளிடமிருந்து
பாதுகாக்கத்தானாம்.
ஒரே கேங்காக கூடியுள்ள
நீர்யானைகளுக்கு
'Crash' என்றும், கரடிகளுக்கு
'Sleauth' என்றும், காக்கைகளுக்கு
'Murder' என்றும் பெயர்.
விலங்கின் உடல்
வாசனையை
29 கி.மீ தொலைவுக்கு முன்னதாகவே கரடிகள் அறிந்துவிடும்.
கூகுள் நிறுவனத்தில்
புதிதாய் சேர்பவர்களுக்கு
'Noogles' என்று பெயர். வேலைக்கு சேர்ந்த வாரத்தின்
முதல் வெள்ளியன்று, புதியவர்கள் ஹெலிகாப்டரின் இறக்கை வைத்த
(புரோபெல்லர் பீனி) தொப்பி அணிந்து வரவேண்டும்
என்பது கூகுள் ரூல்.
மூங்கில், தாவரங்கள்,
சிறுபூச்சிகளை சாப்பிடும் கொரில்லாவின் சராசரி வாழ்நாள் 50 ஆண்டுகள்.
காட்டிலுள்ள புலிகளை
விட வளர்ப்பு விலங்காக வளர்க்கப்படும் புலிகளின் எண்ணிக்கை அதிகம்.
இன்று நாம் சப்புக்கொட்டி
சாப்பிடும் கெட்ச் அப் முதன்முதலில் மருந்தாக எந்த நோய்க்கு பயன்பட்டது தெரியுமா? வயிற்றுப்போக்கு
இருட்டில் வைத்தாலும் கோலா தெளிவாக தெரியவேண்டும்
என்பதுதான் கொக்ககோலா பாட்டில் டிசைன் சீக்ரெட்.
பிட்ஸ் ஸ்பாட்!
ஜப்பானில் 39 என்பதை
எப்படிச்சொன்னாலும் நம் காதில் தேங்க்யூ என்றுதான் விழும் ஏன்? 3(San),
9(Kyu) என்பது ஜப்பான் ஸ்பெல்லிங்.
லண்டனில் கட்டப்பட்ட
ஐஸ்பெர்க் மேன்ஷன் என்ற கட்டிடத்தின் ஸ்பெஷல் என்ன தெரியுமா? இவை அனைத்தும்
பூமிக்கு கீழே கட்டப்பட்டவை.
அமெரிக்காவின்
முதல் பெண் கோடீஸ்வரி Sara
Breedlove. எப்படி ஜெயித்தார்? தலைமுடிக்கான காஸ்மெடிக்ஸ்
பிஸினஸ்தான் காரணம். எக்ஸ்க்ளூசிவ்வாக கறுப்பின பெண்களுக்கானவை.
பாகிஸ்தானின் பாஸ்போர்டில்
நீக்கமற நிறைந்திருக்கும் வார்த்தை என்ன தெரியுமா? உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும்
இந்த பாஸ்போர்ட் செல்லும் இஸ்ரேலைத்தவிர.
பர்பிள் நிறத்திற்கு
ராயல் நிறம் என்ற அந்தஸ்து உண்டு. ஏன்? கடல் நத்தையிடமிருந்து
அரும்பாடுபட்டு அரச குடும்பத்திற்கென முன்னர் பிரித்தெடுக்கப்பட்டதால்தான் இந்த கௌரவம்.
நன்றி: முத்தாரம் வார இதழ்