ஆல் நியூ அறிவியல் - தொகுப்பாசிரியர்: விக்டர் காமெஸி





ஆல் நியூ அறிவியல் - தொகுப்பாசிரியர்: விக்டர் காமெஸி

ஒளியை கன்ட்ரோல் செய்யும் ப்ரீலைட்!

வீட்டில் ஒவ்வொரு லைட்டிற்கும் ஒவ்வொரு ஸ்விட்சை போட ஸ்பைடர் மேனாக தாவிக்கொண்டிருந்தால் மற்ற வேலைகளை எப்படி பார்ப்பது? அனைத்து லைட்டுகளையும் ஒரே கன்ட்ரோலில் இணைத்தால்.. எப்படியிருக்கும் அதுதான் ப்ரீலைட்.


பிளக் பாயிண்டில் ஃப்ரீலைட் ட்ரான்ஸ்மீட்டரைப் பொருத்தி, ரிசீவரை லைட்டுகளுள்ள இடத்தில் பொருத்தி இணைத்துவிட்டால் வேலை முடிந்தது. ஒரே ஸ்விட்சில் அறையிலுள்ள அனைத்து லைட்டுகளையும் சிம்பிளாக கன்ட்ரோல் செய்யலாம். ப்ரீலைட் பயன்படுத்த எந்த மொபைல் ஆப்பும் பயன்படுத்த அவசியமில்லை. அதிக செலவு செய்து ஸ்மார்ட் டிவைஸ் வாங்கவேண்டியதில்லை. ஏன் இதனைப் பொருத்த எலக்ட்ரீஷியனைக் கூட அழைக்க அவசியமில்லை. எளிதாக எடுத்து பொருத்தி லைட்டோடு இணைத்தால் போதும், ரிசீவரை மற்றொரு பிளக்கில் பொருத்தி லைட்டோடு இணைத்தால் சிம்பிளாக அனைத்து விளக்குகளையும் திருவண்ணாமலை ஜோதியாக ஜொலிக்க வைக்கலாம் ஒரே ஸ்விட்ச்சினால். விலை ரூ. 2,573. 

மனிதர்களுக்கு கழுகுப்பார்வை சாத்தியமா?

மனிதர்களைவிட கழுகுகள் மற்றும் பிற பறவைகளுக்கு பார்வைத்திறன் 5 மடங்கு அதிகம். கழுகுகளின் பார்வைத்திறன் பற்றி மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லியம் ஹோடோஸ் என்ற ஆராய்ச்சியாளர் 1970 ஆம் ஆண்டிலிருந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.

 கழுகின் கண்களில் ரெட்டினாவைச் சுற்றி கோட்டிங் போட்டதுபோல உள்ள கோன்களே அதன் அடர்த்தியான கண்பார்வைக்கு காரணம். அதன் நடுவிலுள்ள ஒளியை உள்வாங்கும் அமைப்பு, டெலிபோட்டோ லென்ஸ் போல செயல்பட்டு பார்வையில் அனைத்தும் கிறிஸ்டல் கிளியராக துல்லியமாகும். பறவைகள் நம்மைவிட துல்லியமாக நிறங்களை அடையாளம் காணுவதோடு அக்கசிவப்புகதிர்களையும் காணும் திறன் கொண்டவை. வேவ்ஃபிரண்ட் சென்சார் மூலம் வில்லியம் குழு, கண்களின் குறைபாட்டை நீக்கி கழுகு போல தெளிவு கிடைக்க போராடி வருகிறது. இதன் மூலம் கண்ணில் பார்வைத்தெளிவுக்கு அறுவை சிகிச்சை செய்வது இன்னும் துல்லியமாகலாம்.   


 குட்பை பெயிண்ட்!

மைக்ரோசாஃப்டில் வேலை செய்யும் யாருக்கும் நான் ஒரு ஓவியர் என்ற எண்ணம் வந்தவுடன் செய்யும் வேலை, உடனே எம்எஸ் பெயிண்டை ஓபன் செய்வதுதான். தற்போதைய விண்டோஸ் 10 அப்டேட் பேக்கில் எம்எஸ் பெயிண்ட் மட்டும் மிஸ்ஸிங். 1985 ஆண்டிலிருந்து விண்டோஸ் ஓஎஸ்ஸில் இடம்பெற்று வந்த பெயிண்டுக்கு விண்டோஸ் 10 பதிப்பில் மைக்ரோசாஃப்ட் விஆர்எஸ் கொடுத்துள்ளது.

1985 ஆம் ஆண்டு ரிலீசான விண்டோஸ் 1.0 பதிப்பில் இருந்தே இமேஜ் எடிட்டரான பெயிண்ட் மைக்ரோசாஃப்டுடன் இணைந்து பயணிக்கிறது. தற்போதைய 10 பதிப்புடன் பெயிண்ட் 3D கிடைக்கிறது. ஆனால் இது முந்தைய பெயிண்ட் போன்றதல்ல. படங்களை வேகமாக கட் செய்து பயன்படுத்த பெயிண்ட்தான் வசதி என்றாலும், இதன் மாற்று சாப்ட்வேர்களை விட வசதிகள் குறைவு என்பதால் பெயிண்டை தன் ஓஎஸ்லிருந்து  மைக்ரோசாஃப்ட நீக்கியுள்ளது.  ஆனால் விண்டோஸ் ஸ்டோரில் பெயிண்ட் ப்ரீதான் பாஸ். பயன்படுத்துங்க பாய்ஸ்!


. பிரேக் இல்லாத எலக்ட்ரிக் கார்!

கார் நிறுவனங்களிலேயே நிஸான் முதன்முறையாக ஒரே பெடலைக் கொண்டுள்ள காரை விரைவில் ரிலீஸ் செய்யவுள்ளது. பெடலை அழுத்தினால் கார் முன்னகரும், பெடலில் அழுத்தத்தை குறைத்தால் காரின் வேகம் குறைவதோடு, முழுக்க நிறுத்தவும் முடியும். மலைப்பாதையில் கார் கீழே உருண்டோடுவதை இதன் மூலம் தடுக்கலாம்.

"எலக்ட்ரிக் கார்களில் இது புது முயற்சி" என்கிறார் பொறியியல் பேராசிரியரான ஜெப்ரி மில்லர். வேகம் குறைப்பதை நவீனமாக டச் ஸ்கீரின் மூலம் டெஸ்லாவும், செவர்லே போல்டில் கியரின் மூலமும் செய்வதுபோலவும் அமைத்திருக்கிறார்கள். நிஸான் வேறுபடுவது, பிரேக் என்பதற்கு தனி பெடலே தேவையில்லை என்று உறுதியோடு இருப்பதுதான். பிரேக் பயன்படுத்தாதன் மூலம் காற்று மாசுபடுவது குறைவதோடு, காரின் பராமரிப்பு செலவும் பலமடங்கு மிச்சமாகும்.
இளமை தரும் மூளை செல்கள்!

ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக்கல்லூரியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூளையின் ஹைப்போதாலமஸிலுள்ள ஸ்டெம்செல்கள் உடலின் முதிர்ச்சியடைதலுக்கு காரணம் என்பதை  கண்டுபிடித்துள்ளனர்.

எலிகளிடம் நடத்திய ஆராய்ச்சியில் உடல் முதிர்ச்சி குறித்த உண்மையை கண்டுபிடித்துள்ளனர்.
மூளையின் ஹைப்போதாலமஸ் பகுதியிலுள்ள நியூட்ரல் ஸ்டெம்செல்கள், புதிய நியூரான்களை உருவாக்குவதன் ஆதாரம்."இந்த ஸ்டெம்செல்கள் அழியத்தொடங்கும்போது விலங்குகளுக்கு வயதாகி அவை இறக்கின்றன. எனவே வயது முதிர்ச்சியை ஏற்படுத்துவது இச்செல்கள்தான். இழக்கப்படும் செல்களை தடுக்கமுடியாது. ஆனால் அந்த இடத்தில் நீங்கள் ஸ்டெம்செல்களை நிரப்பினால் வயதாவதைத் தடுக்கலாம்" என்கிறார் பேராசிரியர் டாங்செங் காய். 2 வயது எலிக்கும், ஸ்டெம்செல்களை மூளையில் செலுத்தி இந்த உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உலகின் நெ.1 பணக்காரர்!

பில்கேட்ஸை லெப்டில் ஒதுக்கி ரேஸில் 90.9 பில்லியன் டாலர் சொத்துமதிப்போடு No.1 இடத்தில் தன் ராஜாங்கத்தை தொடங்கியிருக்கிறார் அமேஸான் தலைவர் ஜெஃப் பெஜோஸ். Whole Foods உணவு தயாரிப்பு நிறுவனத்தை அண்மையில் அமேஸான் கையகப்படுத்தியுள்ள வேளையில்தான் ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

பில்கேட்ஸ், ஸூக்கர்பெர்க், வாரன் பஃபெட் ஆகியோர் ஒன்றிணைந்து சமூக திட்டங்களுக்கான நிதியை செலவிட்டு வருகின்றனர். ஜெஃப் பெஜோஸ் தான் சம்பாதித்த பணத்தை சமூகத்துக்கு செலவிடுகிறார் என்றாலும் அதை தன் பெற்றோர் தொடங்கிய பெஜோஸ் பவுண்டேஷன் மூலம் செய்கிறார். அமெரிக்க செனட்டரான பேட்டி முர்ரேவின் அமைப்புகளுக்கு நிதியுதவி செய்திருக்கிறார். கடந்த மேயில் சுதந்திர பத்திரிகையாளர்களுக்கான அமைப்புக்காக 1 பில்லியன் டாலர்கள், ஃப்ரெட் ஹச்சின்ஸன் புற்றுநோய் கழகத்திற்கா 35 மில்லியன், சியாட்டில் மியூசியத்திற்காக 10 மில்லியன், ஆதரவற்றோர் மையத்திற்காக 1 மில்லியன் என நன்கொடை அளித்துள்ளார். இது பில்கேட்ஸ், ஸூக்கர்பெர்க் அளித்துள்ள நன்கொடைகளை விட குறைவு என பலரும் பேசத்தொடங்கியுள்ளார். இந்த சலசலப்புகளை தாண்டி பில்கேட்ஸின் நம்பர் 1 கிரீடத்தை தன் ஐடியா பிளஸ் உழைப்பு மூலம் பெஜோஸ் கைவசப்படுத்தியது பெருமைதான்.


தூக்கத்தில் நடக்கும் கொலைகாரர்கள்!- .ஜோஸபின்

தூக்கத்தில் நடக்கும் மனிதர்களால் நடைபெறும் கொலைகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. 2008 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிரைன் தாமஸ் நடுராத்திரி திடீரென எழுந்து அருகில் படுத்திருந்த தன் மனைவியின் கழுத்தை கொடூரமாக நெறித்துக்கொன்றார். விசாரணையில் 2010 டிசம்பர் மாதம், விபத்து என பிரைன் விடுதலை செய்யப்பட்டார். கொலைக்கு காரணம் யார்? தூக்கத்தில் நடக்கும் பிரையனின் நோய்தான் கொலைக்கு காரணம்.

சிலநாட்களுக்கு முன்பு விடுமுறையில் இளைஞர்கள் தாமஸ் மற்றும் கிரிஸ்டன் தம்பதிகளை அச்சுறுத்திய சம்பவம் நிகழ்ந்தபிறகுதான் தாமஸின் தூக்கத்தில் எழும் பழக்கம் தொடங்கியது. தூக்கத்தில் தன் மனைவியிடம் கொள்ளையடிப்பவனின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, ரிலாக்ஸானவின் கையில் நிஜமாக இருந்தது உயிரிழந்த மனைவி கிரிஸ்டைனின் உடல்தான். "சிறையில் சென்சார்களை பொருத்து தூக்க ஆய்வுகளை செய்தோம். அதில் மூளையின் அலைகள், கண்களின் அசைவு, மூச்சு, உடலின் ஆக்சிஜன் அளவு ஆகியவற்றை அளவிட்டோம். மூச்சுத்திணறல் ஏற்படுகிறதா, கைகால்களின் அசைவு ஆகியவற்றை பிரையனின் உடலில் கவனித்தோம். அவை நேரடியாகவே இருந்தன." என்கிறார் எடின்பர்க் மருத்துவ மையத்தைச் சேர்ந்த டாக்டர் கிறிஸ் இட்ஸிகோவ்ஸ்கி. தற்போது பிரையன் தனது தூக்க நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

என்னிடம் 60 வயதில் போலீஸ் டிடக்டிவ் ஒருவரின் தூக்க பிரச்னையை சரிசெய்தேன். அவர், தூக்கத்திலேயே தான் அறியாமலேயே கொலையை செய்துவிட்டார். அவருக்கு தண்டனையாக வேலையில் எப்போதும்போல தொடரலாம் என்று கூறிய நீதிமன்றம், இரவில் மட்டும் சிறையில் தூங்க உத்தரவிட்டது. இது ஒன்றும் அரிதான பாதிப்பல்ல. ஒருவர் 20 கி.மீ காரில் பயணித்து தன் மாமியாரை கொன்று, மாமனாரை குற்றுயிராக்கியதை தன் தூக்கத்திலேயே நிகழ்த்தியிருக்கிறார் என்பதை நம்புகிறீர்களா? டாக்டர் மைக்கேல் கிராமர் போர்னிமன் உலகின் முதல் தூக்கத்திற்கான தடயவியல் மையத்தை உருவாக்கியிருக்கிறார். இதில் தூக்கத்தில் நடப்பவர்களுக்கு ட்ரீட்மெண்ட் செய்கிறார்.

தூக்கத்தில் இருப்பவர்களின் மூளையில் REM நிலைக்கும், REM அற்ற நிலையில் ஏற்படும் மாற்றங்களே பாதிப்புகளுக்கு காரணம். ரெம் நிலையில் தினசரி மூளையில் படமாய் ஓடும்போது உடல் அதற்கு எதிர்வினையாற்றுவதை மூளையின் தண்டுவடம் தடுக்கிறது. ரெம் அற்ற நிலையில் மூளையின் மேற்சொன்ன நிலை தடைபடும் நிகழ்வு, சாதாரணமாக ஒருவருக்கு 6 முறை ஏற்படுகிறது. இது ஏன் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. ஊசலாட்டத்தில் மூளையின் சிலபகுதிகள் இயங்குவதால் ஏற்படும் சிக்கலாக இருக்கலாம். சரி, நடக்கிறீர்கள். எங்கேனும் செல்கிறீர்கள்? கிரைம்கள் நிகழ்வது எப்படி? "மூளையின் ஹைப்போதாலமஸ் பகுதி மூளையின் நடுப்பகுதியிலுள்ள நடத்தை பற்றிய பகுதிகளை செயலாக்குகிறது. மூளையின் மின் தூண்டல்கள், அற நடத்தை பகுதிகளை விட்டு பிறபகுதிகளை தூண்டுகிறது. பாலியல் மற்றும் உணவு தேடுவது உள்ளிட்ட பிழைக்கும் யுக்திகள் கொண்ட பகுதி." என்கிறார் டாக்டர் கிராமர் போர்னிமன். 2% நபர்கள் தூக்கத்தால் நடக்கும் வியாதியுள்ளவர்கள் என்றும், குழந்தைகளாக தூக்கத்தில் நடப்பவர்கள் 50% பெரியவர்களாக வளர்ந்தபின்னும் தூக்கத்தில் நடக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறது ஆய்வு.

எப்படி தப்பிப்பது?

நள்ளிரவில் தூங்குவது, சோபாவில் ஒருக்களித்து படுப்பது கூடாது.

விளக்குகளை அணைத்து தொந்தரவு இல்லாமல் தூங்கவேண்டும்.

ஆல்கஹால் பயன்பாடு தூக்கத்தை சிதைக்கும்.

 புத்தகங்களை வாசிப்பது நல்ல தூக்கத்திற்கு கேரண்டி

நன்றி: முத்தாரம் வார இதழ்