ஆணா, பெண்ணா யார் பெஸ்ட்? நேர்காணல்:மெல்வின் கானர்,மானுடவியலாளர் தமிழில்:ச.அன்பரசு




ஆணா, பெண்ணா யார் பெஸ்ட்?

நேர்காணல்:மெல்வின் கானர்,மானுடவியலாளர்தமிழில்:.அன்பரசு






மனிதர்கள் இரு பாலினமாக உருவானதிலிருந்து மனதுக்குள் குறுகுறுக்கும் ஒரே கேள்வி, ஆணா, பெண்ணா யார் பெஸ்ட் என்பதுதான். பெண்தான் வலிமையானவள் என ஆணித்தரமாக பேசும் மெல்வின் கானரிடம் பேசினோம்.

பாலினம் குறித்த ஆராய்ச்சியில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

எனது சிறுவயதிலிருந்தே பாலினம் குறித்த விரிவான விஷயங்களை தெரிந்துகொள்ள ஆசை. உயிரியலில் ஆண்,பெண் என இரு பாலினத்தவருக்கும் பெரியளவில் பங்கு கிடையாது என்பதே எனது கருத்து. பின்னாளில் போஸ்ட்வானா, புஸ்வான் ஆகிய குழந்தைகளோடு லண்டனிலுள்ள குழந்தை ஒப்பிட்டபோது, பால் வேறுபாட்டோடு பிற குழந்தைகளுடன் பழகுவது, அடிப்பது, உதைப்பது, சண்டைபோடுவது என பலவிஷயங்கள் வேறுபட்டன. அப்போதுதான் ஆண், பெண் ஆகியோருக்கிடையேயான மரபணு, ஹார்மோன் ஆகியவற்றைப் பற்றி ஆராய முடிவெடுத்தேன். இதில் சில இடங்களை ஆராய உயிரியல் துணை செய்தது.

சில உதாரணங்களை சொல்லுங்களேன்.

ஆண் மற்றும் பெண்ணின் உடலில் குறிப்பிட்ட வயதில் டெஸ்டோஸ்ட்ரோன் உருவாகிறது என்றாலும் ஆணின் உடலில் அதன் அளவு அதிகம். ஆண்களின் மூளையை ஆளுமை செய்வதும் இதே ஹார்மோன்தான். நவீன முறைப்படி டெஸ்ட்டோஸ்ட்ரோனை உள்வாங்குவது மூளையிலுள்ள ஏமிதலா என்ற பகுதி. இது பெண்ணை விட ஆணுக்கு பெரிது. ஆக்கிரமிப்பு, வன்முறை சிந்தனைகளுக்கு ஊற்று இதுவே. வன்முறை போக்கை தடுக்கும் மூளையின் முன்புற மடல்களின் செயல்வேகம் பெண்களுக்கு அதிகம். உயிரியல்ரீதியாக யார் வலிமையானவர்கள் என்பதை நீங்களே தேர்ந்தெடுங்கள்.

உங்களுடைய நூலில் பரிமாண வளர்ச்சியில் ஆணின் ஆதிக்கம் என்பது முரண்பாடுடையது. பெண்கள்தான் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்று கூறியுள்ளீர்களே எப்படி?

முன்னர் கூறிய உதாரணங்களில் ஆண்களின் உடல்ரீதியான ஆதிக்கம் பற்றி அறிந்திருப்பீர்கள். இன்றைய பல்வேறு கலாசாரங்களிலும் கூட ஆண்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆனால் அந்த கலாசாரங்களில் பெண்களின் பங்கே கிடையாது என்பதை கவனிக்க வேண்டும். சிக்கலான சூழலில் தப்பி உயிர்வாழ ஆண், பெண் என இருதன்மைகளும் இன்றியமையாதவை. நம் முன்னோர்கள் இந்த வழியில் பயணித்தவர்கள்தான்.

விலங்குகள் குறித்து நிறைய உதாரணங்களுடன் விளக்கியுள்ளீர்கள். உண்மையில் விலங்குகள் நமக்கு ஏதேனும் உணர்த்து விரும்புகின்றனவா?

விலங்குகளில் ஆண்கள் அனைத்திலும் முன்னணி வகிப்பதில்லை. பல விலங்கினங்களில் ஆண்களை விட பெண்களே ஆபத்தானவை. மாண்டிஸ் என்ற பூச்சி இனத்தில் பெண் பூச்சி, உறவு நிகழும் நிலையில் ஆணின் தலையை துண்டித்துவிடுகிறது பின் விந்தணு பெண்ணின் உடலுக்குள் சென்றவுடன் ஆண்பூச்சியை முழுவதுமாக தின்றுவிடுகிறது. ஆண்,பெண்ணாக உள்ள உயிரிகளும் இயற்கையில் உண்டு. ஓர் பாலினத்தின் முரண்பாடுகள் அதனை அழித்துவிடும் என்று பயப்பட அவசியமில்லை.

ஆண்களின் தேவையின்றியே மனித இனம் பயணிக்குமா?

நிச்சயமாக. நான் யாருக்கும் ஆதரவாக பேசவில்லை. இன்று தோல் செல்களை வைத்தே கருக்களை உருவாக்கமுடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதனால் ஓரினச்சேர்க்கையாளர்கள் கூட தங்களின் செல்கள் மூலம் பிள்ளைகளை பெற்று வளர்க்க முடியும். ஆனால் ஆணுக்கு தன் விந்தணுவை கருவாக்க பெண்ணின் கருப்பை தேவை. பெண்ணுக்கு இந்த இந்த சிக்கல் கிடையாது. எதிர்காலம் இப்படியே அமையும்.

நன்றி: முத்தாரம் வார இதழ்