தெரிஞ்சுக்கோங்க! - தொகுப்பு: முகமது மத்தின்
தெரிஞ்சுக்கோங்க! - தொகுப்பு: முகமது மத்தின்
விண்வெளியில் அதற்கான
விசேஷ உடை இல்லாமல் நடமாட முடியுமா?
நிச்சயம் முடியாது. பெரும்
வலி வேதனையோடு இறப்பை சந்திக்க வேண்டியிருக்கும். ஏன் இப்படி?
முதல் காரணம் காற்று
பற்றாக்குறை.
நீங்கள் உயிர்பிழைக்க அணுவளவு காற்றும் விண்வெளியில் இருக்காது.
பின் எதை சுவாசிப்பீர்கள்? மற்ற பிரச்சினைகளை விட
முதலில் உங்களை சிரமத்திற்குள்ளாக்குவது காற்று இல்லாமைதான்.
அடுத்த சிக்கல்
சோடாவை திறக்கும்போது எழுமே குமிழ்கள் அதுபோல நமது உடலின் ரத்தத்தில் வாயுக்குமிழ்கள்
பணியாரம் அளவு தோலில் படபடவென உருவாகத் தொடங்கும் வேதனையான நிகழ்வு தொடங்கும். இது விண்வெளியில்
உள்ள அழுத்தத்தினால் ஏற்படும். விண்வெளியில் அணியும் விசேஷ ஆடை
நமது உடலின் தட்பவெப்பத்தை நிலைப்படுத்தும் தன்மை கொண்டது. விண்வெளி
ஓடம் இருந்தால் மேற்கண்ட ஆபத்திலிருந்து நீங்கள் தப்பிக்கலாம். இல்லையெனில் சாமி சத்தியமாக மோட்சம் நிச்சயம்.
பெண்களுக்கு மாதவிலக்கு
ஏற்படுவது போல ஆண்களுக்கு ஏற்படுவது உண்டா?
பெண்களுக்கு ஏற்படுவது போல மாதாமாதம் ஏற்படும் அந்த
மூன்று நாட்கள் சமாச்சாரம் ஆண்களுக்கு அப்படியே
ஏற்படுவதில்லை. ஆனால் ஹார்மோன் சுழற்சி மாற்றங்கள் தினமும் நடைபெறுகிறது என்று கூறி அதிர
வைக்கின்றனர் மருத்துவர்கள். ஆண்களின் உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன்
ஹார்மோன் சுரக்கும் எஸ்ராடியல் எனும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பொருளாக மாறி எலும்புகளின்
எடை, விந்து மற்றும் ரத்த அணுக்கள் பெருக்கம், உடல் முழுக்க கொழுப்பு விநியோகம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தும் இன்சார்ஜாக
பணியாற்றுகிறது. ஆண்களின் உடலில் காலையில் உச்சமாக இருக்கும்
டெஸ்டோஸ்டிரோன் அளவு மாலை ஆகும்போது குறைவதை சோதனையில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஆண்களுக்கு 30 வயதுக்கு பின் ஒவ்வொரு ஆண்டும் டெஸ்டோஸ்டிரோன்
அளவு 0.5 சதவிகிதம் குறைந்துகொண்டே வரும். மன அழுத்தம் உடல்நலக்குறைபாடுகள் டெஸ்டோஸ்டிரோனை பெருமளவு குறைக்கின்றன.
இதற்கு ஹார்மோன் சிகிச்சை எடுத்தால் 85 வயதிலும்
சும்மா ஜம்மென பவர் ஸ்டாராக இருக்கலாம் என நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் ஆய்வு
முடிவுகளை வெளியிட்டு ஆண்களின் வயிற்றில் பாயாசத்தை வார்த்திருக்கிறது. இலக்கை நோக்கி பாயும் தோட்டா!
கனடாவில் மட்டும்
சீஸ் அதிக விலைக்கு விற்கப்படுவது ஏன்?
ஒரே காரணம் கனடா
அரசுதான்.
எப்படி? ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில்
சீஸ் விலை குறைவு என்பது உண்மைதான். அதற்கு காரணம் அமெரிக்க அரசு
மற்றும் ஐரோப்பிய நாடுகள் விவசாயிகளுக்கு தரும் அளவற்ற மானியங்கள்தான். ஆனால் கனடாவில் அரசு விவசாயிகளுக்கு(முட்டை மற்றும் பண்ணை)
எந்த மானியத்தையும் தருவதில்லை. எனவே விவசாயிகளே
அதை தங்கள் விளைபொருள் விற்பனை மூலம் லாபம் ஈட்டவேண்டிய தேவை உள்ளது. கனடா அரசு நேரடியாக மானியம் தரவில்லை என்றாலும் விவசாயிகளுக்கு வேறு விதங்களில்
உதவுகிறது. உள்ளூர் பால் தொடர்பான பொருட்களுக்கு குறிப்பிட்ட
நிலையான விலை வைத்து விற்பக உதவுவதோடு வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களுக்கு அதிக வரி
விதித்து சந்தையில் அதன் பரப்பை குறைத்து வைத்திருக்கிறது. இதனால்
கடைகளில் எப்பாடுபட்டு பிரான்ஸ் இத்தாலி என சீஸ் பாக்கெட் தேடினாலும் அப்போது நிச்சயம்
கிடைக்காது. எனவே உள்நாட்டு பொருட்களையே மக்கள் அதிகம் வாங்குவார்கள். இந்த முறையில்
வியாபாரிகளுக்கு கிடைக்கும் சுயமான விலை கொள்கை நீடிக்கும் வாய்ப்பு குறைவு.
கனடாவில் நிலைமை இப்படியே இருக்க
விடுவார்களா பால் வியாபார பெருந்தலைகள்? இதோ கடந்த ஆண்டு பால்பொருட்களுக்கான
இறக்குமதி ஒப்பந்தம் ஒன்றில் கனடா கையெழுத்திட்டிருக்கிறது. ஓஎல்எக்ஸ்
விளம்பரம் நினைவுக்கு வருதே!
விமானத்தில் கிழக்குப்புறமாக
பயணிக்கும்போது ஜெட்லாக் அதீதமாக ஏற்படுவது ஏன்?
விமானம் குறிப்பிட்ட
வரையறுக்கப்பட்ட வழித்தடத்தில் எப்போதும் செல்லும். பகல் இரவு என வேளை மாறுபட்ட
நாடுகளை கடக்கும் பயணிகளின் உடல் அந்த சூழலுக்கு ஏற்ப மாறமுடியாமல் தடுமாறும் நிலையே
ஜெட் லேக் எனும் விண் பயணக்களைப்பு என எளிமையாக இதனை விளக்கலாம். ஆனால் இந்த விண்பயணக்களைப்பு மேற்கு நோக்கி பயணிப்பதைவிட கிழக்கு நோக்கி பயணிக்கும்போது
ஆழமானதாக இருப்பதன் காரணம் என்ன என மேரிலாண்ட் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்துள்ளது.
பல்வேறு கணித வடிவங்களின் வழியே விளக்கப்படும் இதன் விரிவான விளக்க முடிவுகள்
சாவோஸ் எனும் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இரவு பகல் வேளைகளை
கணித்து உறக்கம் உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ள உதவுவது மூளையிலுள்ள சிர்காடியன்
எனும் உயிரியல் கடிகாரமாகும். மூளையிலுள்ள ஹைப்போதாலமஸ் பகுதியில் உள்ள செல்கள்
உடலின் சமநிலையை பாதுகாக்க உதவுகின்றன. விமானத்தில் வெவ்வேறு
காலநிலைகள் கொண்ட நாடுகளை கடக்கும்போது உடல் அந்த சூழலுக்கு உடனே மாற முடியாமல் தடுமாறுகிறது.
விண்பயணக்களைப்பு ஏற்படுவதன் காரணம் ஹைப்போதாலமஸ் பகுதியிலுள்ள செல்கள்
குறிப்பிட்ட வட்டவடிவில் தமது இயக்கத்தை தொடங்கி நிறைவு செய்கின்றன. நிறைவு செய்ய ஆகும் தாமதத்தை ஒருநாள் கழிந்தது என புரிந்துகொள்ள முடியாமல்
திகைக்கிறது. இதுவே உடலை தடுமாற்றம் கொள்ள வைக்கிறது என்கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள். உடல் தன் ஒருநாள் கணக்கு என்பதை
24 மணி நேரம் தாண்டி 30 நிமிடங்களை கூடுதலாக எடுத்துக்கொள்கிறது
என்பது தோராயக்கணக்கு. கிழக்கு நோக்கி செல்லும் விமானப்பயணத்தில்
உடல் தன் ஒருநாள் கணக்கை அடைவது சிறிது முன்னதாகவே சமமாகிறது. விண்பயணக்களைப்பு என்பது ஒவ்வொருவரின் உடல்நிலைக்கு ஏற்ப மாறுபடும் என்கிறார்
ஆராய்ச்சியாளர் மிச்செல் கிர்வென்.
மேற்குப்புறமாகவே
நாம் தொடர்ந்து பயணப்பட்டால், விரைவில் நமது உடல் ஓர் ஒழுங்குக்கு மாறிவிடும்.
வெளிப்புறத்தில் நாம் இருந்தால் இரவு பகல் வேறுபாட்டினை உடல் எளிதில்
உணர்ந்துகொள்ளும். ஆனால் அதுவே இருட்டு அறையில் இருந்தால் இரவு
பகல் என இரண்டையும் உடலுக்கு பழக்க வேண்டி இருக்கும். நாசாவில்
விண்வெளி வீரர்களுக்கு குளிர்கண்ணாடிகள் அணிவித்து இரவு பகலை அடையாளம் கண்டு உடல் சோர்வடையாமல்
தடுக்க விமானப் பயணத்தின் மூலம் பயிற்சி அளிக்கிறார்கள். விண்வெளியில்
பகல் இரவு என்பது கிடையாது என்பதுதான் இதற்கு காரணம் ஆகும்.
நன்றி:
ச.அன்பரசு,கா.சி.வின்சென்ட்