சீனாவின் மூர்க்கமான குணம்தான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம்!
சீனாவின் மூர்க்கமான
குணம்தான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம்!
நேர்காணல்: முன்னாள்
வெளியுறவுத்துறை செயலாளர் ஷியாம் சரா
தமிழில்: ச.அன்பரசு
இந்தியாவுக்கு
விசா நெருக்கடி தந்ததிலிருந்து பாரீஸ் சூழல் ஒப்பந்தத்திலிருந்து விலகியதுவரையிலான
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவு பற்றி என்ன கூறுகிறீர்கள்?
இதில் ஆச்சரியம்
ஏதுமில்லை.
ஏனெனில் அமெரிக்க அதிபரான ட்ரம்ப் இதற்கு முன்பும் இதுபோல ஏராளமான மூர்க்கத்தன
அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். நாம் நம்முடைய முந்தைய வரலாற்று
உண்மைகளின் அடிப்படையில் செயல்படுவதுதான் நல்லது.
இந்தியா தன் வெளியுறவுக்கொள்கை
தோல்வி என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்துவிட்டது. சரி,
இந்தியா தன் இத்தனை ஆண்டுகளாக
கையாண்ட வெளியுறவுக்கொள்கையில் சாதித்தது என்ன?
இந்தியா - அமெரிக்க
உறவு என்பது விரிவானது என்பதோடு விளக்குவதும் கடினம். ஐடி வேலைவாய்ப்புகளில்
ட்ரம்பின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு ஆதரவாக இல்லையென்றாலும், பாதுகாப்பு ஆயுதங்கள், தீவிரவாத எதிர்ப்பு, தொழில்நுட்ப கூட்டுறவு போன்றவற்றில் அமெரிக்க உதவி வருவது உண்மை.
தலாய்லாமா, அருணாச்சல
பிரதேசத்திற்கு சொற்பொழிவாற்ற வந்தது, இ்ந்தியா சீனாவின் ஒரு
பாதை ஒரு மண்டலம் விழாவை புறக்கணித்தது ஆகிய நிகழ்வுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
இந்தியா - சீனா,
இருநாடுகளுக்குமான உறவு என்பது போட்டியும், ஒத்துழைப்புமாகவே
சென்று கொ்ண்டிருக்கிறது. குறிப்பிட்ட நிலப்பரப்பு சார்ந்து இந்த
தன்மை மாறுபடுகிறது. குழப்பமான, உணர்ச்சிகரமான
உறவு நிலைதான் இருநாடுகளுக்குமிடையே நீடித்து வருகிறது.
இந்த பிரச்னைக்கு
காரணம் என்ன?
சீனா தன் பெரும்
பொருளாதார பலம்,
அசுர ராணுவத்தின் மூலம் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளின் உரிமைகளை புறக்கணித்து
ஆதிக்கம் செய்ய நினைக்கிறது. இந்தியா சீனாவின் மாநாட்டை புறக்கணித்தது
சீனாவின் இந்த மூர்க்கமான குணத்தினால்தான். இந்தியா எப்போதுமே
சீனாவை ஆதிக்கம் செய்யவோ, கட்டுப்படுத்தவோ நினைத்ததில்லை.
ஆனால் சீனா அப்படி நினைக்கவில்லை என்பதுதான் பிரச்னை.
இந்தியா- பாகிஸ்தான்
நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெறுமா?
இந்தியா- பாகிஸ்தான்
ஆகிய இருநாடுகளிடையே இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளால் பாகிஸ்தானின் தீவிரவாதப்போக்கில்
எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதே உண்மை. எனவே
பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும், ராணுவ பதிலடி என்பதை நாம்
நடத்திவருவதே பாகிஸ்தானின் துரோகத்தை எதிர்கொள்ள ஒரே வழி. ஆனால்
பேச்சுவார்த்தை முறிவு என்பது இந்திய வெளியுறவுக்கொள்கைக்கு தோல்வி என்பதோடு,
பிற நாடுகளும் இதில் உள்ளே வருவதற்கு வாய்ப்புள்ளது.
நன்றி: Pranoy Sharma,
Outlook