பசுமை பேச்சாளர்கள் 18 (கேப்டன் பால் வாட்ஸன்)- ச.அன்பரசு




பசுமை பேச்சாளர்கள் 18
கேப்டன் பால் வாட்ஸன்
.அன்பரசு

பால் ஃபிராங்க்ளின் வாட்ஸன் கனடாவை சேர்ந்த முக்கியமான கடல்வாழ் உயிரி செயல்பாட்டாளர், டிவி நிகழ்ச்சி இயக்குநர்.
 கனடாவில் 1950 ஆம் ஆண்டு பிறந்த வாட்சன், இன்று உலகளவில் இயற்கை பிரச்னைகளுக்கு கொடி பிடித்து அரசுகளை அலறவைக்கும் க்ரீன்பீஸ் அமைப்பின் துணை நிறுவனர். திமிங்கலவேட்டையை தீவிரமாக எதிர்க்கும் இவர், நேரடியாக கடலில் ரோந்து சென்று வேட்டையாளர்கள் மீது ஆன் தி ஸ்பாட் ஆக்சன் எடுத்து பன்னாட்டு அரசுகளின் கோபத்தை சம்பாதிப்பது இவரின் பாணி.

டொரன்டோவின் அணுஆயுத சோதனைக்கு எதிராக 1969 ஆம் ஆண்டு வாட்ஸன் கலந்துகொண்டதே போராட்ட வாழ்வின் முக்கியமான தொடக்கம். 1977 ஆம் ஆண்டு க்ரீன்பீஸ் அமைப்பின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியவர், அதேவேகத்தில் Sea Shepherd Conservation Society அமைப்பைத் தொடங்கினார். இதன்மூலம் திமிங்கல போர் என்ற டிவி நிகழ்ச்சியை தயாரிக்கத் தொடங்கினார் வாட்ஸன். கடலில் நடைபெறும் இதற்கான நிகழ்வில் பங்கேற்றவரை கைது செய்ய கனடா, நார்வே, ஜப்பான் உள்ளிட்ட ரெட் நோட்டீஸ் கொடுக்குமளவு நிலை தீவிரமானாலும் வாட்சன் செம கூல். ஆனாலும் சிறைதண்டனை, அபராதம் என உலகமெங்கும் உள்ள அத்தனை கோர்ட்டுகளில் தன் கையெழுத்தை பதித்து கடல்வாழ் உயிரிகளுக்காக பாடுபட்டது வாட்ஸன் ஸ்பெஷல்.

இரு சகோதரிகள், மூன்று சகோதரர்கள் சூழ பிறந்த பால் வாட்ஸன், சிறுவயதிலேயே காருண்ய கிளப் ஒன்றில் மெம்பர். பின்னாளில் கடல்வாழ் உயிரிகளுக்காக போராடியதற்கு இது முக்கிய காரணம். 1970 களில் நியூக்ளியர் சோதனை போராட்டத்திற்கு பின் துணிந்து நின்ற பல்வேறு போராட்டங்களினால்தான் வேவ் எனும் போராட்டக்குழு க்ரீன்பீஸ் என்ற பெயருடன் புத்தம் புதிதாக மாறியது. "எனது அமைப்பின் அனைத்து செயல்பாடுகளுக்கும் நானேதான் காரணம்" என்பவர் டைம் இதழின் உலகின் 20 சூழல் நாயகர்களின் லிஸ்டில் இடம்பிடித்த பெருமைக்குரியவர். சூழல் குறித்த புத்தகங்களை எழுதியுள்ளதோடு வாட்ஸன் குறித்து டாகுமெண்ட்ரி படங்களும் வெளியாகியுள்ளன. ஈகோப்ரண்ட்லி தீவிரவாதியாக செயல்படும் வாட்ஸன், எனது நிகழ்ச்சியை திமிங்கல வேட்டைக்காரர்கள் பார்த்து கைதட்டவேண்டிய அவசியமில்லை என்பார். ஆம் அதுதான் அவர் பசுமை சூழலியலாளராக நிலைபெறச்செய்திருக்கிறது.
 
நன்றி:முத்தாரம் வார இதழ்