பசுமை பேச்சாளர்கள் 19 கார்லோஸ் கர்பெலோ ச.அன்பரசு



பசுமை பேச்சாளர்கள் 19
கார்லோஸ் கர்பெலோ.அன்பரசு


கார்லோஸ் லூயிஸ் கர்பெலோ அமெரிக்காவைச் சேர்ந்த சூழலியல் பிரசாரகர்.
1980 ஆம் ஆண்டு பிறந்த கார்லோஸ் குடியரசுக்கட்சி உறுப்பினர். ப்ளோரிடாவின் 26 மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர். ட்ரம்பின் கட்சியில் இருந்தாலும் பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகல், பெண்களின் கருத்தடை, அகதிகள் பிரச்னை, அரசின் நிதிபயன்பாடு என பல விஷயங்களிலும் தனக்கு சரி என்று தோன்றுவதை தயங்காமல் பேசும் சூழலியல் நேசர் கார்லோஸ்.

கியூப வம்சாவழியைச் சேர்ந்த கார்லோஸ், பொது நிர்வாக பட்டதாரி படிப்பை மியாமி பல்கலையில் நிறைவு செய்தார். அரசு மற்றும் தனியார் உறவை மேம்படுத்தும் அமைப்பான கேபிடல் கெய்ன்ஸை நிறுவினார். சிறுவயதிலிருந்தே கக்குவான்இருமல் பிரச்னை இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் தன் மாவட்டத்தின் பிரதிநிதியாக காகஸ் என்ற அமைப்பை தொடங்கி கடல்நீர் மட்டம் அதிகரிப்புக்க பிரச்னைக்கான தீர்வுகள், புயல்களை சமாளிப்பதற்கான திட்டங்களை தீட்டியது இவரின் அரும்பணி.

"அரசு சூழலியலுக்கு எதிராக எந்த திட்டத்தை முன்னெடுத்தாலும் நான் அதை தீர்க்கமாக எதிர்ப்பேன். அது என் கடமையும் கூட" என எஃகு பேச்சில் ஈர்க்கிறார் கார்லோஸ். பாரீஸ் சூழல் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதற்கு ட்ரம்பை கண்டனம் செய்து பேசியதில் முக்கியக்குரல் கார்லோஸூடையது. தன்னுடைய மக்கள் நேய பணிகளால் 2016 ஆம் ஆண்டு அதிக ரேட்டிங் பெற்றவரும் இவர்தான். இன்று குடியரசு கட்சியில் சூழலியலுக்காக, பசுமை ஆற்றலுக்காக பேசும் குரல்களில் கார்லோஸ் முக்கியமானவர். சூழலியல் முயற்சிகளை பொருளாதார அறிவுடன் செயல்படுத்துவது என்பது கார்லோஸின் சூழல் ஐடியா

பாரீஸ் ஒப்பந்தத்தில் அதிபருக்கு கண்டனம் விடுப்பதிலிருந்து கார்லோஸின நடவடிக்கைகள் அனைத்தும் அதிரடிதான். ராணுவத்தில் திருநங்கைகளுக்கு தடா சொன்ன ட்ரம்பின் கட்சியைச் சேர்ந்த கார்லோஸ் LGBT யினரை ஆதரித்தது இவரின் கேரக்டரை உங்களுக்கு புரிய வைக்கும். "பாரீஸ் ஒப்பந்தம் என்பது நாட்டிற்கான வளர்ச்சி என்பதை புரிந்துகொண்டு அதிபர் புத்திசாலித்தனமாக முடிவெடுத்திருக்க வேண்டும். அரசு தடாலடியாக முடிவெடுப்பது துரதிர்ஷ்டமான ஒன்று" என ஆன் தி ஸ்பாட்டில் நேர்மையாக பேசிவிடும் தங்க நெஞ்சம் கார்லோஸ் கர்பெலோவுடையது.
  நன்றி: முத்தாரம் வார இதழ்


பிரபலமான இடுகைகள்