ஆல் நியூ அறிவியல் - விக்டர் காமெஸி




ஆல் நியூ அறிவியல் - விக்டர் காமெஸி 


2050 இல் உலகின் சவால்கள்!

எதிர்காலத்தில் உலகம் எப்படியிருக்கும்? என்னென்ன சவால்களை சந்திப்போம் என்று ஷார்டாக பார்ப்போம்!

நகரங்கள் அழிவு
கடல்நீர்மட்டம் தொடர்ந்து புவிவெப்பமயமாதலால் ஏற்படும் விளைவு இது. மியாமி, வங்காளதேசம் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

சோஷியல் தளங்களின் எழுச்சி
பிரைவசி இருக்காது. அனைத்து செய்திகளையும் தெரிந்துகொள்வது சமூக தளங்களின் மூலமாக நிகழும்.

அரசியல் அழுத்தம்
அமெரிக்காவின் முரட்டுத்தனம், சீனாவின் மூர்க்கம், வடகொரியாவின் ஆணவம், பாகிஸ்தானின் துரோகம் என பாலிடிக்ஸ் பத்திக்கொள்ளும் நெருப்புதான். என்ன? வேகம் ஜாஸ்தி.

முதியவர்கள் அதிகரிப்பு, போக்குவரத்து துரிதமாவது, மனிதர்களின் மூளை வேகம் கூடுவது உள்ளிட்டவைகளும் 2050க்குள் நடைபெறக்கூடும்.

ரஷ்யாவின் லைட்ஹவுஸ்!

ரஷ்யாவில் ரோஸ்காஸ்மோஸ் ஏஜன்சி மூலம் கடந்த ஜூலை 14 அன்று வானில் ஏவப்பட்ட  சாட்டிலைட்டின் பெயர்தான் மாயக்(கலங்கரைவிளக்கம்!) பைக்கோனூர் ஏவுதளத்திலிருந்து சோயுஸ் 2.1a ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சென்றது.

மாயக் செயற்கைக்கோளின் சூரிய பிரதிபலிப்பு உறையின் நீளம் 3 மீ. பிரமிட் வடிவத்தில் பளபளவென மின்னுவதைப் பார்க்கவே கொள்ளை அழகு. நிலவுக்கு பின்னே மறைந்து முகம் காட்டும் இந்த மாயக் செயற்கைக்கோள், பூமியிலிருந்து ஏவப்படும் செயற்கைக்கோள்களின் உயரம், கோணம், திசை ஆகியவற்றை துல்லியமாக கவனிக்க உதவுகிறது. பிரமிடு வடிவமும், சூரியனின் கதிர்களை உடனே பிரதிபலிக்கும் தன்மையும் வட்டப்பாதையில் சுற்றும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கிறது. இந்த செயற்கைக்கோள் மக்களிடம் க்ரவுட்ஃபண்டிங் முறையில் பெறப்பட்ட பணத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

ஸ்மார்ட் துப்பாக்கியில் சுடலாமா?

ஜெர்மனியைச்சேர்ந்த Armatix IP1 துப்பாக்கியும் பிற துப்பாக்கிகளைப்போலத்தான் தோட்டாக்களைப் போட்டால் சுடும்தான். ஆனால் அதற்கு நீங்கள் உங்கள் கையில் வாட்ச் கட்டியிருக்க வேண்டும். யெஸ்! துப்பாக்கி கையில் கிடைத்தால் உடனே யாரும் சுடமுடியாது. இது அப்படி ஒரு பாதுகாப்பு வசதி இது.

துப்பாக்கி தோட்டாக்களை துப்ப அர்மாட்டிக்ஸ் வாட்ச் தேவை. துப்பாக்கிக்கும் வாட்சிற்கும் இடையில் ரேடியோ சிக்னல்கள் கனெக்ட்டானால் துப்பாக்கி வெடிக்கும். தற்போது தொழில்நுட்ப வல்லுநர், அர்மாட்டிக்ஸ் வாட்சின் ரேடியோ சிக்னல் அளவை அதிகரித்து, துப்பாக்கியின் சிக்னலை ஜாம் செய்தால், துப்பாக்கி வெடிக்காது. மேலும் துப்பாக்கியின் லாக்கிங் சிஸ்டத்தில் சில காந்தங்களை வைத்து, தோட்டாக்களை சுட முடியாமல் தடுக்க முடியும். இதனை டெஃப்கான் மாநாட்டில் ப்ளோர் என்ற தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் செய்து காட்டி ஆச்சரியப்படுத்தினார். இவரது கண்டுபிடிப்பு பற்றி அர்மாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு தெரிவித்தும் அவர்களிடம் ரெஸ்பான்ஸ் இல்லையாம்.

 ஊழியர்களின் உடம்பில் சிப்!

உலகில் முதல்முறையாக அமெரிக்காவின் 32எம் என்ற நிறுவனம், தனது பணியாளர்களின் உடலில் RFID சிப்புகளை பொருத்தியுள்ளது.
அரிசி மணி போன்ற டிசைனில் இந்த சிப் ஊழியர்களின் விரலில் பொருத்தப்பட்டுள்ளது. எதற்கு? "கதவு திறக்க, பர்ச்சேஸ் செய்ய, கம்ப்யூட்டர்களை பயன்படுத்த, தம்மைப்பற்றிய தகவல்களை பிறருக்கு கூற, சேமிக்க உள்ளிட்ட ஆகியவற்றுக்கு RFID(Radio frequency Identification) முறையே இன்று அதிகம் பயன்படுகிறது" என்கிறார் 32எம் நிறுவனத்தின் இயக்குநரான டாட்ஸி வெட்ஸ்பை.

கிரடிட், டெபிட் கார்டு போலவே  NFC(near field communication) முறையில் செயல்படுகிறது. 85 ஊழியர்களின் உடலில் அவர்களின் விருப்பத்தின்பேரில் இந்த சிப் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு சிப்பின் விலை 300 டாலர்களாம். ஊழியர்களின் பயத்தை போக்க, நிறுவனத்தின் இயக்குநரும் அவர் குடும்பத்தினரும் இந்த சிப்பை உடலில் அடுத்த வாரம் பொருத்திக்கொள்ள போகிறார்களாம். தொழிலாளர்களின் முதலாளி!  

டாலர்களாம். ஊழியர்களின் பயத்தை போக்க, நிறுவனத்தின் இயக்குநரும் அவர் குடும்பத்தினரும் இந்த சிப்பை உடலில் அடுத்த வாரம் பொருத்திக்கொள்ள போகிறார்களாம். தொழிலாளர்களின் முதலாளி!   

 பிரேக் இல்லாத எலக்ட்ரிக் கார்!

கார் நிறுவனங்களிலேயே நிஸான் முதன்முறையாக ஒரே பெடலைக் கொண்டுள்ள காரை விரைவில் ரிலீஸ் செய்யவுள்ளது. பெடலை அழுத்தினால் கார் முன்னகரும், பெடலில் அழுத்தத்தை குறைத்தால் காரின் வேகம் குறைவதோடு, முழுக்க நிறுத்தவும் முடியும். மலைப்பாதையில் கார் கீழே உருண்டோடுவதை இதன் மூலம் தடுக்கலாம்.

"எலக்ட்ரிக் கார்களில் இது புது முயற்சி" என்கிறார் பொறியியல் பேராசிரியரான ஜெப்ரி மில்லர். வேகம் குறைப்பதை நவீனமாக டச் ஸ்கீரின் மூலம் டெஸ்லாவும், செவர்லே போல்டில் கியரின் மூலமும் செய்வதுபோலவும் அமைத்திருக்கிறார்கள். நிஸான் வேறுபடுவது, பிரேக் என்பதற்கு தனி பெடலே தேவையில்லை என்று உறுதியோடு இருப்பதுதான். பிரேக் பயன்படுத்தாதன் மூலம் காற்று மாசுபடுவது குறைவதோடு, காரின் பராமரிப்பு செலவும் பலமடங்கு மிச்சமாகும்.

நன்றி: முத்தாரம் வார இதழ்

பிரபலமான இடுகைகள்