புத்தகம் புதுசு! - ஹென்றி சைமன்ஸ்கி



புத்தகம் புதுசு!


BRAIN FITNESS
The Easy Way of Keeping Your Mind Sharp Through Qigong
by Aihan Kuhn
P.192
YMAA

மூளை, மனம்,ஆன்மா என மூன்றுக்குமான பயிற்சிகளைக் கொண்ட நூலிது. கிழக்கு மரபில் மேற்குலக மருந்துகளைப் பயன்படுத்துவதுதான் இந்த நூலின் டெக்னிக். taiji, qigong என இரு முறைகளின் மூலம் உடலின் முதிர்ச்சி வேகத்தை கட்டுப்படுத்தி மூளை, மனதின் ஆற்றலை மேம்படுத்துவதைப்பற்றி விவரிக்கிறது. டாய்ஜி, க்யூகாங் எனும் இரு முறைகளைப் பற்றி ஆதி முதல் அந்தமாய் படங்களோடு விவரிக்கும் நூல் மூலமாக உடல், மனதை ஆற்றலுடன் வைத்திருக்க முடியும்.

GASTROPHYSICS
The New Science of Eating
by Charles Spence
P336
Viking

உணவுக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை பற்றி நீங்கள் அறிய படிக்க வேண்டிய நூலிது. உணவகத்தின் சூழலுக்கும் அங்கு பரிமாறப்படும் உணவுகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆழமாக பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்குவது அழகு. அறிவியல் மற்றும் கலாசாரத்தை மிக்ஸ் செய்து உளவியல் சுவையுடன் படைத்துள்ள இந்நூலில் உணவை எப்படி கிளாமராக மக்களை தயாரிக்கிறார்கள், எப்படி உணவகங்களின் சூழலை டிசைன் செய்கிறார்கள் என்பதுவரை டீடெய்ல்கள் பக்கா. உணவு விரும்பிகள் மற்றும் செஃப்களுக்கான அழகிய கையேடு இந்நூல்.



THE DARKENING WEB
The War for Cyberspace
Alexander Klimburg
432pp, Rs. 1,281
Penguin Press

இலவச இணையம், அதன் பிரச்னைகள், இதில் ஆளுமை செலுத்தும் நிறுவனங்கள் குறித்த நூல்தான் தி டார்க்கனிங் வெப். அமெரிக்க அரசுக்காக பணியாற்றிய ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புதான் இணையம். பின்னாளில் அதனை தன்னார்வ தொழில்நுட்ப வல்லுநர்கள், இணைய வல்லுநர்கள் சிலந்தி வலைபோல நுணுக்கமாக உறுதியாக்கினர். இணையத்தை ஏகபோகமாக்கும் நிறுவனங்கள் பிறந்தன. ஏன் இன்று அமெரிக்க அதிபர் அரசியலில் ரஷ்யா, இணையத்தில் செய்த தில்லுமுல்லுகள்தான் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளன என்பதுவரை பேசுவதற்கான காரணம், இணையத்தின் சுதந்திரம், அதன் வரையறை, அதிலுள்ள மர்ம நபர்களின் செயல்பாடுகள் என பல்வேறு விஷயங்களை விளக்கமாக அலசியுள்ளார் ஆசிரியர் அலெக்ஸாண்டர் கிளிம்பர்க்.

JUNK RAFT
An Ocean Voyage and a Rising Tide of Activism to Fight Plastic Pollution
by Marcus Eriksen
224pp, Rs. 1,737
Beacon

லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து ஹவாய் வரை சென்று வந்த ஆசிரியரின் கடல் பயணக்குறிப்புகளே ஜங்க் ராஃப்ட் என்ற பெயரில் புத்தகமாகியிருக்கிறது. 88 நாட்கள் நடைபெற்ற கடல் பயணத்தில் கடலில் அதிகளவு தேங்கும் பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேர்த்தியாக எழுதியுள்ளதோடு, அதனை மறுசுழற்சிக்கு பயன்படுத்த என்ன செய்யவேண்டும் என்பதையும் எழுதியுள்ளது சிறப்பு. தன் நண்பரோடு பயணித்த எரிக்சென், கடலின் மாறுபட்ட சூழ்நிலை, புயல் ஆகியவற்றை நுட்பமான மொழியில் எளிமையாக எழுதியுள்ளது வாசகரை காந்தமாய் ஈர்க்கிறது.  

புத்தக அலமாரி!

CAESAR'S LAST BREATH
Decoding the Secrets of the Air Around Us
by Sam Kean
Page count: 384pp Rs.
Publisher: Little, Brown

நாம் சுவாசிக்கும் காற்றைப் பற்றிய அறிவியல் தகவல்களை விவரிக்கும் நூல் இது. காற்றிலுள்ள பல்வேறு பகுதிப்பொருட்களை அமெரிக்காவின் ஹெலன்ஸ் என்ற எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட சூழலியல் பாதிப்போடு தொடர்புபடுத்தி பேசுகிறார். பின் இரண்டாவது பகுதியில் காற்றிலுள்ள நைட்ரஜன், ஹீலியம் உள்ளிட்ட வாயுக்களோடு மனிதர்கள் உருவாக்கும் வாயுக்களைப் பற்றிய சுவாரசிய கதைகள் அருமை. .கா:அனஸ்தீஸியா, பலூன். மூன்றாவது பகுதியில் பூமியில், பிற கோள்களில் உள்ள வாயுக்களைப் பற்றிய சுவாரசியங்கள் குவிந்துகிடக்கின்றன. அறிவியலை தன் தொழிலாக தேர்ந்தெடுப்பவர்களுக்கு கிஃப்டாக நீங்கள் வழங்கவேண்டிய அவசிய நூல் இது.



HEALING CHILDREN
A Surgeon's Stories from the Frontiers of
Pediatric Medicine
by Kurt Newman
272pp Rs.1,351
Publisher: Viking


குழந்தைநல சிகிச்சை மருத்துவரான நியூமேன், தன் அனுபவங்களை விவரிக்கும் நூல் இது. அமெரிக்காவில் வலிநிறைந்த, மதிப்பளிக்காத, குறைவான தொகை செலவழிக்கப்படும் துறை குழந்தைநலத்துறைதான் என பொட்டில் அறைந்தது போன்ற உண்மைகளை முன்வைக்கிறார் 40 ஆண்டுகால குழந்தைநல வல்லுநரான  கர்ட் நியூமேன். பொருளாதாரத்திற்கு உகந்த, பொருத்தமான, நேர்மையான குழந்தைநல சிகிச்சையே பின்னாளில் வரும் நோய்களை தீர்க்க உதவும் எனும் நியூமேன், மரபணுபாதிப்பு, புற்றுநோய், குறைமாத குழந்தைகள் என பலருக்கு சிகிச்சையளித்த அனுபவத்தை கூறுபவர்,குழந்தைகள்தான் என் ஆசிரியர் என நெகிழ்கிறார். குழந்தைமருத்துவம் குறித்த அறிய வாசிக்கவேண்டிய வழிகாட்டி நூல் இது.

THE ONE DEVICE
The Secret History of the iPhone
by Brian Merchant
352pp Rs.1,290
Publisher: Little, Brown

உலகையே பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு வெர்ஷனுக்கும் காத்திருக்க வைத்து ஆச்சர்யப்படுத்தி,  ஐபோனை ஒவ்வொருவரின் கனவாக விதைத்ததில் இருக்கிறது ஸ்டீவ் ஜாப்ஸின் வெற்றி. அதகள ஐபோனின் வரலாற்றை நேர்மையாக பதிவு செய்யும் நூல் இது.  
ஐபோனில் படிப்படியாக ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், அதனை நம்பர் 1 எலக்ட்ரானிக் பொருளாக ஸ்டீவ் ஜாப்ஸ் மாற்றியது எப்படி என கூறும் மெர்ச்சன்ட் அதே நேரத்தில் ஐபோன் நிறுவனத்தின் இருள் பக்கங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டத்தவறவில்லை எ.கா. சீனாவில் ஐபோனை குறைந்த கூலியில் தயாரித்துதரும்  அடிமை தொழிலாளர்கள்.  ஒளியும் இருளுமான ஐபோன் வரலாற்றில், சமூகத்தில் அது ஏற்படுத்திய தாக்கத்தை நேர்த்தியாக கூறிச்செல்லும் நூலின் தன்மை வசீகரம்.


The Accidental Universe
ALAN LIGHTMAN
Rs.432 

இயற்பியல் ஆராய்ச்சியாளரும், நாவலாசிரியருமான லைட்மேன் தினசரி வாழ்க்கை வழியாக பால்வெளியை புரிந்துகொள்ளும்படி எட்டு அற்புத கட்டுரைகளை செய்திருக்கிறார்கள். அறிவியல் கண்டுபிடிப்புகளை உணர்ச்சிகரமாகவும், தத்துவரீதியிலும் கேள்விகளை எழுப்பி அறியும் நூலின் தன்மை வாசிக்க சுவாரசியம்.

Asap Science
M. MOFFIT & G. BROWN
Rs. 1,018

யூட்யூப் சேனலான AsapSCIENCE இல் ஜாலி,கேலி, கலாய்க்கவென அறிவியல் குறித்து கேட்ட கேள்விகளின் தொகுப்பு இது. இந்நூலில் கேட்டிருக்கும் கேள்விகளை வகுப்பில் கூட நீங்கள் கேட்டிருக்க முடியாது. அருமையான தொகுப்பாக அறிவியல் கருத்துகள் மனதை வசியம் செய்கின்றன.


Natural History - Smithsonian
DK PUBLISHING
Rs. 1,993

இயற்கையின் வரலாறு பற்றி பேசும் முக்கிய நூல். இயற்கையின் வரலாற்றோடு 6 ஆயிரம் உயிரிகளை தொகுத்தளித்திருப்பது நூலை ஆர்வத்துடன் படிக்கத் தூண்டுகிறது.
;text-autospace:none'> 
உலகையே பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒவ்வொரு வெர்ஷனுக்கும் காத்திருக்க வைத்து ஆச்சர்யப்படுத்தி,  ஐபோனை ஒவ்வொருவரின் கனவாக விதைத்ததில் இருக்கிறது ஸ்டீவ் ஜாப்ஸின் வெற்றி. அதகள ஐபோனின் வரலாற்றை நேர்மையாக பதிவு செய்யும் நூல் இது.  
ஐபோனில் படிப்படியாக ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், அதனை நம்பர் 1 எலக்ட்ரானிக் பொருளாக ஸ்டீவ் ஜாப்ஸ் மாற்றியது எப்படி என கூறும் மெர்ச்சன்ட் அதே நேரத்தில் ஐபோன் நிறுவனத்தின் இருள் பக்கங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டத்தவறவில்லை எ.கா. சீனாவில் ஐபோனை குறைந்த கூலியில் தயாரித்துதரும்  அடிமை தொழிலாளர்கள்.  ஒளியும் இருளுமான ஐபோன் வரலாற்றில், சமூகத்தில் அது ஏற்படுத்திய தாக்கத்தை நேர்த்தியாக கூறிச்செல்லும் நூலின் தன்மை வசீகரம்.

புத்தகம் புதுசு!

THE SKY BELOW
A True Story of Summits, Space, and Speed
by Scott Parazynski with Susy Flory
336pp Rs. 1,589  Little A

தன் வாழ்நாள் முழுவதும் பயணம் கண்டுபிடிப்பு என திரிந்த மனிதரின் சுயசரிதை இது. பராஸின்ஸ்கி படு ரிஸ்க்கான விண்வெளி பயணம் முதற்கொண்டு இமயமலைப் பயணம் வரை அற்புத சாகசமாக அனுபவங்களை விவரிக்கிறார். நாஸாவில் செலவழித்த 17 ஆண்டில் ஏழுமுறை விண்வெளிக்கு சென்றிருக்கும் அனுபவங்களை சுடச்சுட எழுதியிருக்கிறார் ஆசிரியர். தன் வானியல் அனுபவங்களோடு ஆட்டிச மகளோடு அன்பு செய்வதையும் எழுதியிருப்பது நெகிழ்ச்சியான அனுபவம்.


A MIND AT PLAY
How Claude Shannon Invented the Information Age
by Jimmy Soni & Rob Goodman
 384pp Rs.1,241  Simon & Schuster

அ கம்ப்யூட்டரின் உருவாக்கம், இமெயில், வீடியோ இணையதளம் வரை அனைத்தின் மூலமாக இருந்தவரான கிளாட் ஷனோன் குறித்த நூல் இது. ஷனோன் யுனிசைக்கிள், நெருப்பைத்துப்பும் ட்ரம்பெட் உள்ளிட்டவற்றை கண்டுபிடித்த ஐன்ஸ்டீனுக்கு நிகரான திறமைசாலி. மிச்சிகனைச் சேர்ந்த சிறுவன் எப்படி முக்கியமான Alan Turing, John von Neumann, Vannevar Bush, and Norbert Wiener ஆகியோரோடும் இணைந்து எப்படி 20 ஆம் நூற்றாண்டின் முக்கிய கண்டுபிடிப்பாளரானார் என்பது பற்றிய கதை இது.  
��ேலாக ஒவ்வொரு வெர்ஷனுக்கும் காத்திருக்க வைத்து ஆச்சர்யப்படுத்தி,  ஐபோனை ஒவ்வொருவரின் கனவாக விதைத்ததில் இருக்கிறது ஸ்டீவ் ஜாப்ஸின் வெற்றி. அதகள ஐபோனின் வரலாற்றை நேர்மையாக பதிவு செய்யும் நூல் இது.  

ஐபோனில் படிப்படியாக ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள், அதனை நம்பர் 1 எலக்ட்ரானிக் பொருளாக ஸ்டீவ் ஜாப்ஸ் மாற்றியது எப்படி என கூறும் மெர்ச்சன்ட் அதே நேரத்தில் ஐபோன் நிறுவனத்தின் இருள் பக்கங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டத்தவறவில்லை எ.கா. சீனாவில் ஐபோனை குறைந்த கூலியில் தயாரித்துதரும்  அடிமை தொழிலாளர்கள்.  ஒளியும் இருளுமான ஐபோன் வரலாற்றில், சமூகத்தில் அது ஏற்படுத்திய தாக்கத்தை நேர்த்தியாக கூறிச்செல்லும் நூலின் தன்மை வசீகரம்.

நன்றி: முத்தாரம் வார இதழ்