இடுகைகள்

வனவாசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வெளியே வெயில், உள்ளே புழுக்கம்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
        இயற்கை நேசனின் அற்புத காட்சி அனுபவம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? சில நாட்களுக்கு முன்னர் வெயில் குறைந்தது போல தெரிந்தது .. இப்போது வெயில் மீண்டும் தன் இயல்பான நிலையில் சுட்டெரித்தது . ஒருமுறை சட்டை போட்டு மதியம் சாப்பிட் அறைக்கு சென்றாலே எனக்கு வியர்வையால் குளித்தது போல ஆகிவிடுகிறது . குங்குமம் தோழியில் வேலை பார்த்த அன்னம் அரசு இப்போது ஜூனியர் விகடன் இதழுக்கு ப் போய்விட்டார் . இந்த தகவலை நான் தாமதமாகவே தெரிந்துகொண்டேன் . நான் இந்த வாரமும் குங்குமம் இதழை வாங்கவில்லை . முன்பு போல அதன் கட்டுரைகள் சிறப்பாக இல்லை . உள்ளடக்க விஷயங்களில் தடுமாறுவது போல தோன்றியது . எங்கள் நாளிதழ் வேலைகளை ஓரளவுக்கு நிறைவு செய்துவிட்டேன் . ஜூலை மாதம் வரை எழுதிவைத்தாயிற்று . ஆகஸ்ட் மாத கட்டுரைகளை இனிமேல்தான் எழுதி தயாரித்து வைக்க வேண்டும் . இன்ஃபோகிராபி வேலைதான் அதிக நாட்களை இழுத்துக்கொள்ளும் என நினைக்கிறேன் . அதையும் அவ்வப்போது தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும் . வனவாசி - விபூதிபூஷன் பந்தோபாத்யாய நாவலைப் படித்தேன் . கோவையிலுள்ள விடியல் பதிப்பக வெளியீடு . கல்கத்

நகர இளைஞரை மயக்கும் இயற்கையின் பேரழகு! வனவாசி - விபூதிபூஷன் வந்தோபாத்யாய

படம்
  வனவாசி விபூதிபூஷன் வந்தோபாத்யாய விடியல் ரூ.270 மொழிபெயர்ப்பு - த.நா.சேனாபதி நகரவாசி ஒருவர், எப்படி வனத்துக்குள் வேலை செய்ய வந்து வனவாசி ஆகிறார் என்பதே கதை.  தினந்தந்தி போல ஒருவரியில் கதையை இப்படி சொன்னாலும் படிக்கும்போது நாம் பார்க்கும் மனிதர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நாவல் முடியும் வரை புதிய மனிதர்கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கிறார்கள். நாவலின் புதிய பாணி என கொள்ளலாம்.  கல்கத்தாவில் விடுதி ஒன்றில் தங்கி வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்தான் கதை நாயகன். விடுதி மெஸ்சில் அக்கவுண்ட் வைத்து சாப்பிடுபவருக்கு, வேலை கிடைத்தால் தான் சாப்பாட்டுக்கடனை அடைக்க முடியும். இந்த நிலையில் நண்பர் அழைத்தார் என விழா ஒன்றுக்கு செல்கிறார். அங்கு நிம்மதியாக சாப்பிட்டுவரும்போது கல்லூரி நண்பர் ஒருவரைப் பார்க்கிறார்.  அவர் செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் மூலம் பூர்ணியா எனும் காட்டுப்பகுதியில் உள்ள நிலங்களை கவனித்துக்கொள்ளும் வேலைக்கு செல்கிறார். நகரில் இருக்கத்தான் இளைஞருக்கு விருப்பம். ஆனால் வேலை வேண்டுமே என்பதற்காக ஜமீன் காரியாலயத்திற்கு செல்கிறார். அங்கு செல்வதற்கான பயணமே காரியாலய வாழ்க்கை