இடுகைகள்

அறிவியல்- மருத்துவம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ட்ரைக்ளோசன் ஆபத்து!

படம்
ட்ரைக்ளோசன் ஆபத்து ! தினசரி பயன்படுத்தும் பற்பசை , சோப் , சமையல்பொருட்கள் முதற்கொண்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களில் பயன்படும் பாக்டீரிய எதிர்ப்பு வேதிப்பொருள் ட்ரைக்ளோசன் , குடல் புற்றுநோயை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் . ட்ரைக்ளோசன் குடல் அழற்சி மற்றும் புற்றுநோயை எலிகளுக்கு ஏற்படுத்துவது கண்டறியப்பட்டதால் இதன் பயன்பாட்டை கட்டுப்படுத்த விதிகள் உருவாக்கப்படுவது அவசியமாகியுள்ளது . அமெரிக்காவில் 75 சதவிகித மனிதர்களின் சிறுநீரில் ட்ரைக்ளோசன் கண்டறியப்பட்டுள்ளதோடு , ஆறுகளை மாசுபடுத்தும் டாப் 10 பட்டியலிலும் இந்த வேதிப்பொருள் இடம்பிடித்துள்ளது . மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகம் உட்பட 13 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் ட்ரைக்ளோசன் பயன்பாடு குடல் புற்றுநோயை ஊக்குவிப்பதை கண்டறிந்தனர் . மனிதர்களுக்கு ரத்தக்கசிவு , வயிற்றுவலி , பிடிப்பு , வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படுகின்றன .

ரத்தம் போதாது!- இழப்புகளும் விளைவுகளும்

படம்
ரத்ததான பற்றாக்குறை ! இந்தியாவில் ரத்ததான தேவை 1.9 மில்லியனாக உயர்ந்துள்ளது . இதன் மூலம் 3 லட்சத்து 20 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகள் , 49 ஆயிரம் உறுப்புமாற்று சிகிச்சைகளை செய்ய முடியும் . 2015-16 காலகட்டத்தில் பற்றாக்குறையின் அளவு 1.1 மில்லியனாக இருந்தது . கடந்தாண்டில் 13 மில்லியன் யூனிட் அளவில் 11.1 மில்லியன் மட்டுமே பெற முடிந்தது என்ற தகவலை சுகாதாரத்துறையின் துணை அமைச்சரான அனுபிரியா படேல் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் . உலகெங்கும் 112 மில்லியன் யூனிட் (1 யூனிட் =350 மி . லி ) ரத்தம் தானமாக பெறப்படுகிறது . இதில் 80 சதவிகித மக்கள் வாழும் வறுமை , நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு 50 சதவிகித ரத்தம் அளிக்கப்படுவதை ஆய்வு மூலம் உறுதிபடுத்தியுள்ளது உலக சுகாதார நிறுவனம் . இந்திய மாநிலங்களில் சண்டிகர் (74,408 யூனிட் )  அதிகளவு ரத்தம் சேகரித்தும் , பீகார் (9,85,015), உத்தரப்பிரதேசம் (61% பற்றாக்குறை ) ஆகியவை இலக்கில் சறுக்கியுமுள்ளன . " சண்டிகர் மாநிலம் தன்னார்வமாக முன்வந்து ரத்த தானம் அளித்ததால்தான் தேவையையும் மிஞ்சி சாதித்துள்ளது . தன்னார்வ ரத்ததான

உடல் உறுப்புகள் சிப்களாக!

படம்
சிப் வடிவில் உடலுறுப்புகள் ! மருந்துகளை சோதித்து பார்க்க மனிதர்கள் , விலங்குகள் பயன்படுத்தப்பட்டு இதற்கு பல்லாயிரக்கணக்கான கோடி செலவிடப்பட்டன . தற்போது சிப்வடிவில் உடல் உறுப்புகள் தயாரிக்கப்படுவதால் ஆய்வுகளை செய்வது எளிதானதாக மாறியுள்ளது . மனித செல்களை வைத்து சிப் வடிவில் உடலுறுப்புகள் ரெடியாவதால் இனி விலங்குகளை ஆய்வுக்கு பயன்படுத்தும் தேவை இல்லை . லேபில் செய்யப்படும் மனித செல்களின் மீது மருந்தை செலுத்தி ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன . பத்தின் ஒன்பது மருந்துகளின் உறுதியான பின்விளைவுகள் இவ்வாய்வுகளில் தெரியவில்லை . தற்போது விரல் நகமளவு சைசிலுள்ள சிப்பில் இதயம் , மூளை , எலும்பு , சிறுநீரகம் , குடல் , தோல் , நுரையீரல் உள்ளிட்ட மனிதர்களின் செல் சாம்பிள் சேகரிக்கப்பட்டு உள்ளன . உடலில் செல்களுக்கு ஆக்சிஜனும் சத்துக்களும் அளிக்கப்படுவதைப்போலவே சிப்பிலும் அளிக்கப்படுகிறது . அமெரிக்காவில் 15% சிறுநீரக நோயாளிகள் உள்ளனர் . சிறுநீரக நோய்களுக்கு அறிகுறிகள் கிடையாது என்பதால் பலரும் நோயை அறிவதேயில்லை . சிறுநீரகத்தை சிப் வடிவில் உருவாக்கி வாஷிங்டன் பல்கலைக்கழகம

பரபரப்பும் தூக்கமின்மையும் அல்சீமரை உருவாக்குமா?

படம்
அல்சீமர் அபாயம் ! - விக்டர் காமெஸி வீட்டைப்பூட்டிவிட்டு தெருவில் இறங்கியபின்பும் சரியான பூட்டினோமா , கேஸ் ஸ்டவ்வை அடைத்தோமா என்ற தவிப்பு , முந்தையநாள் பார்ட்டி கொடுத்த நண்பரின் பெயரை மூளையில் ஆடும் கபடி என தடுமாற்றங்கள் இருந்தால் நியூரோடாக்டரை பார்த்துவிடுங்கள் என தகவல் கூறுகிறது அமெரிக்க நேஷனல் இன்ஸ்டிடியூட் . இந்தியாவிலுள்ள தற்போதைய அல்சீமர் ( டிமென்ஷியா எனும் நினைவுத்திறன் குறைபாட்டில் ஒருவகை ) நோயாளிகளின் எண்ணிக்கை 4 மில்லியன் , 2030 ஆம் ஆண்டுக்கள் 7.3 மில்லியனாக உயரும் என்கிறது ஆய்வு முடிவுகள் . வயதாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில் அல்சீமரின் தாக்கமும் உக்கிரமாவது அபாய அறிகுறி என்பதில் சந்தேகமில்லை . குணப்படுத்த முடியாத மர்ம மறதிநோயான அல்சீமர் , F-actin எனும் மூளையிலுள்ள புரதம் உடைவதால் ஏற்படுகிறது என நியூரோசயின்ஸ் இதழ் தகவல் கூறியுள்ளது . நிகழ்வு குறித்த தகவலை மூளை சேகரித்து வைத்து தேவைப்படும் போது தருவதுதான் நினைவுத்திறனாக கூறுகிறோம் . இதனை engram என்று 1904 அன்றே பெயரிட்டு அழைத்தார் ஜெர்மனி உயிரியலாளரான ரிச்ச

இரும்பை கரைக்கும் பாக்டீரியா!

படம்
பாக்டீரியாக்களை கட்டுப்படுத்தும் இரும்பு ! இயற்கையில் விலங்கு , மனிதர்களின் உடம்பில் மறைந்திருந்து நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது தாக்குவதில் பாக்டீரியா , வைரஸ்களுக்கு பேதம் கிடையாது . இதில் நம் குடலில் காணப்படும் இ - கோலி (Escherichia coli ) பாக்டீரியாக்கள் முன்னணி வகிக்கின்றன . இவை சிறுநீரகத்தொற்று , வயிற்றுப்போக்கு , குடல் அழற்சி ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன . சவுத் டகோடா பல்கலைக்கழக மாணவர் பெங் டாய் கழிவு இரும்புகள் மூலம் இ - கோலி பாக்டீரியாவை கட்டுப்படுத்த முடியும் என்ற ஆய்வில் கண்டறிந்துள்ளார் . 2 மில்லிமீட்ட m ் சுற்றளவு கொண்ட இரும்பு , பாக்டீரியாக்களை அழித்து வளர்ச்சியை கட்டுப்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இரும்பு ஆக்ஸைடின் pH அளவு குறைந்தும் , அதிகரித்த நிலையிலும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி குறைந்துள்ளது ஆராய்ச்சியின் ஸ்பெஷல் . இ - கோலி பாக்டீரியா உயிரியல் ஆராய்ச்சிகளில் தொடரந்து பயன்படுத்தப்பட்டு வருகிற ஒன்று . 

சூப்பர் மனிதன்!

படம்
சூப்பர் மனிதன் ! எலும்பு வலிமை எக்ஸ்மேன் படத்தில் ஹ்யூஜாக்மனின் காயம் விரைவில் ஆறும் ஆற்றலும் , உடையாத எலும்புகளும் பார்வையாளர்களை கவர்ந்தன . இதில் எலும்புகளின் உறுதிக்கு LPR5 என்ற மரபணு காரணம் . இதில் மாறுபாடு ஏற்படுத்தியபோது கனெக்ட்டிகட்டைச் சேர்ந்த குடும்பத்தினரின் உடலில் எலும்புகள் அதிஉறுதியாயின . யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆராய்ச்சி மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் நோயை தீர்க்க முயற்சித்து வருகின்றனர் . லேசர் பார்வை ! ஒரு மில்லியன் நிறங்களை காண முடியும் மனிதன் நூறு மில்லியன் பார்க்க முடிந்தால் எப்படியிருக்கும் ? இதற்கு ஆப்ஸின் மரபணு உதவுகிறது . ஆண்களுக்கு வண்ணங்களை அறியும் மூன்று உணர்விகளும் பெண்களுக்கு நான்கும் உள்ளன . இதில் மாற்றம் ஏற்படுத்தினால் நிறைய வண்ணங்களை காண முடியுமா என ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகின்றனர் . ஓடு ராஜா ஓடு உசேன் போல்டாய் மாறி ஓட அனைவருக்கும் ஆசைதான் . முடியுமா ? ACTN3 மரபணுவைத் தூண்டினால் சாத்தியம் . 2008 ஆம் ஆண்டு ஆராய்ச்சி இதனை உறுதிப்படுத்தியுள்ளது . 

காதுகளுக்கு உப்பு தேவை!

படம்
காதுகளுக்கு உப்பு தேவை ! திரைப்படங்களில் யாரேனும் காமெடியனை அறைந்து காதில் ஒலி கேட்காமல் காது செவிடு ஆவதைப் பார்த்து ரசித்திருப்பீர்கள் . ஆனால் ஒலிமாசினால் அமெரிக்காவில் 15 சதவிகிதப்பேருக்கு செவித்திறன் குறைபாடு (NIHL) உள்ளதை ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன . இதற்கு சர்க்கரை மற்றும் உப்புக்கரைசல் உதவுகிறது என தெற்கு கலிஃபோர்னியா மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் .  காதின் உள்ளே உள்ள கோக்லியா எனும் உட்புறப்பகுதி ஒலியை மூளைக்கு அனுப்புகிறது . எலியிடம் இதுகுறித்த ஆராய்ச்சி நடைபெற்றது . ஒலி எழுப்பும் முன்பும் பின்பும் கோக்லியா பகுதியை புகைப்படம் எடுத்தனர் . இப்பகுதியிலுள்ள சிறு ரோமங்கள் இறந்துபோகின்றன . அடுத்து சுரக்கும் திரவத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது . நியூரானை அழிக்கும் இந்த திரவத்தை உப்பு மற்றும் சர்க்கரை நீர்க்க வைத்து நியூரான் பாதிப்புகளை 64% தடுக்கிறது . ராணுவத்தில் அல்லது அதிக ஒலி கொண்ட சூழலில் வேலை செய்பவர்கள் செவித்திறன் இழப்பைத் தடுக்க உப்புக்கரைசல் பயன்படக்கூடும் .