ரத்தம் போதாது!- இழப்புகளும் விளைவுகளும்


Related image



ரத்ததான பற்றாக்குறை!

இந்தியாவில் ரத்ததான தேவை 1.9 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 3 லட்சத்து 20 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகள், 49 ஆயிரம் உறுப்புமாற்று சிகிச்சைகளை செய்ய முடியும். 2015-16 காலகட்டத்தில் பற்றாக்குறையின் அளவு 1.1 மில்லியனாக இருந்தது. கடந்தாண்டில் 13 மில்லியன் யூனிட் அளவில் 11.1 மில்லியன் மட்டுமே பெற முடிந்தது என்ற தகவலை சுகாதாரத்துறையின் துணை அமைச்சரான அனுபிரியா படேல் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் 112 மில்லியன் யூனிட்(1 யூனிட்=350 மி.லி) ரத்தம் தானமாக பெறப்படுகிறது. இதில் 80 சதவிகித மக்கள் வாழும் வறுமை, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு 50 சதவிகித ரத்தம் அளிக்கப்படுவதை ஆய்வு மூலம் உறுதிபடுத்தியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.


இந்திய மாநிலங்களில் சண்டிகர்(74,408 யூனிட்)  அதிகளவு ரத்தம் சேகரித்தும், பீகார்(9,85,015), உத்தரப்பிரதேசம்(61% பற்றாக்குறை) ஆகியவை இலக்கில் சறுக்கியுமுள்ளன. "சண்டிகர் மாநிலம் தன்னார்வமாக முன்வந்து ரத்த தானம் அளித்ததால்தான் தேவையையும் மிஞ்சி சாதித்துள்ளது. தன்னார்வ ரத்ததான முயற்சியை அரசு முன்னெடுக்கவேண்டும்" என்கிறார்  ரத்ததான சங்கத்தைச் சேர்ந்த யுத்பீர்சிங் கியாலியா. இந்தியாவில் தற்போது 2,903 ரத்தவங்கிகள் செயல்பாட்டிலுள்ளன. இதில் 1,043 ரத்தவங்கிகளை அரசும், 1,860 ரத்தவங்கிகளை தனியாரும் நடத்திவருகின்றன. பதினேழு மாநிலங்களின் 74 மாவட்டங்களில் ரத்தவங்கியே அமைக்கப்படவேயில்லை என்பது வேதனை