செல்ஃபி ஏற்படுத்திய ஆபத்து!
பிட்ஸ்!
மலைபாம்புடன் செல்ஃபி!
மேற்கு வங்காளத்தைச்
சேர்ந்த வனத்துறை அலுவலர் சஞ்சய் தத்தா, மக்களை அச்சுறுத்திய பாம்பை பிடித்தார்.
பில்டப்புக்காக பாம்பை கழுத்தில்
மாலையாக்கி சக ஆபீசர்களை செல்ஃபி எடுக்க சொன்னார். டென்ஷனான பாம்பு
மெல்ல சஞ்சயின் கழுத்தை இறுக்கத்தொடங்க வலியில் ஆபீசர் அலறினார். கூடியிருந்த மக்களும் ஆபீசரும் போராடி பாம்பிடமிருந்து ஆபீசரை மீட்ட வீடியோ
இணையத்தில் ஹைப்பர் காமெடி ஹிட்.
குதிரையில் பிரசாரம்!
பெங்களூருவைச்
சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் ரூபேஷ்குமார், தன் கடைசி வேலைநாளை மறக்கமுடியாததாக
மாற்ற குதிரையில் சவாரி செய்து ஆபீஸ் சென்று பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.
எனது கடைசிவேலைநாள் என்ற போர்டுடன் ஆபீஸ் சென்றவர், வீகன் உணவுமுறைக்காக இப்பயணம் என்று சொன்னதை நெட்டிசன்கள் குதிரையை கொடுமைப்படுத்தி
வீகனிசம் பிரசாரமா? என விமர்சித்து வருகின்றனர்.
கால்பந்தில் சர்க்கஸ்!
ஃபிபா கால்பந்து
போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் பிரான்சில் வாலிபர் ஒருவரின் கால்பந்து சர்க்கஸ் வித்தைகள்
பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது. பாரீசில் மக்கள் கூடும் இடத்தில் கால்பந்தை உடல்
மூலம் பேலன்ஸ் செய்து வாலிபர் ஒருவர் செய்யும் சாகச வீடியோவை ஆனந்த் மஹிந்திரா ஷேர்
செய்ய, இணையத்தில் செம வைரல் ஆகியுள்ளது.
ஸ்டேடியம் கட்டிய
கால்பந்து வெறியர்!
அசாமைச் சேர்ந்த
புதுல் போரா என்ற கால்பந்து வெறியர், வங்கியில் 15 லட்சம் கடன்வாங்கி கால்பந்துபோட்டியைப் பார்க்க தியேட்டரே கட்டிவிட்டார்.
1800 ச.அடியில் 500 பேர்
உட்கார்ந்து பார்க்கலாம். "56 இன்ச் எல்சிடி டிவியில் மேட்ச்சுகளை
பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறேன்" எனும் போரா,
1990 ஆம் ஆண்டிலிருந்து 200 ரசிகர்களுடன் மேட்ச்சுகளை
ரசித்து வருகிறார்.