பழங்குடி மக்களின் அரசியல் எழுச்சி!




Image result for tribe rise in india


பழங்குடிகளின் எழுச்சி!

மகாராஷ்டிரா

பழங்குடிகளின் எண்ணிக்கை 9 சதவிகிதம்சர்வஹாரா ஜன் அந்தோலன் கிராம சபைகளை கட்டுப்படுத்தி வளர்ச்சிப்பணிக்கான அரசின் நில ஆக்கிரமிப்பை தடுக்கிறது.
மேற்குவங்கம்

பழங்குடிகளின் எண்ணிக்கை 6 சதவிகிதம். இங்கு ஆதிக்கம் செலுத்துவது பாரத் ஜகத் மஜ்ஹி பர்கானா மஹால் எனும் அரசியல் இயக்கம். திரிணாமூல் காங்கிரஸை அதிதீவிரமாக எதிர்க்கும் இவ்வமைப்பு 60 சந்தாலி மொழிப்  பள்ளிகளைத் தொடங்கி நடத்தி வருகிறது.

சத்தீஸ்கர்

இந்தியாவிலேயே உச்சமாக 31% பழங்குடிகள் வாழும் மாநிலம் இது. பதல்கடி பழங்குடிகள் சூரஜ்பூர் மற்றும் ஜஸ்பூரில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அண்மையில் ஜஸ்பூர் அரசு அதிகாரிகளையே கலியா கிராமத்தில் நுழையாமல் தடுக்கும் அளவு துணிச்சலானவர்கள்.

ஜார்க்கண்ட்

26 சதவிகித பழங்குடிகள் வாழும் இங்கு பதல்கடி ஆதிக்கம் அதிகம். 3 மாவட்டங்களில் 100 கிராமங்களில் அரசின் நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராக புரட்சிக்குரல்கள் எழுந்துள்ளன.

மத்தியப்பிரதேசம்

ஜெய் ஆதிவாசி யுவசக்தி என்ற அரசியல் இயக்கம் தீவிர இயக்கத்திலுள்ளது. இங்குள்ள பழங்குடி மக்களின் எண்ணிக்கை 21%.