அதிகரிக்கும் சுதந்திரப்பெண்கள்!


Image result for lebanon: single by choice




லெபனானில் சிங்கிள்!

லெபனான் நாட்டில் பெண்கள் பெருமளவு திருமணம் செய்யாமல் வாழும் விகிதம் அதிகரித்து வருகிறது. என்ன காரணம்? என்னைப் பார்த்து உறவினர்கள் கேட்கும் முதல்கேள்வி, திருமணமாகிவிட்டதா? என்பதுதான். இல்லை என்றதும் என்னை ஏதோ பிரச்னை என்பதுபோல ஸ்கேன் செய்வார்கள்" என புன்னகையுடன் பேசுகிறார் பெய்ரூட்டில் நகை டிசைனரான டர்ஃபா இடானி.

திருமணத்தை அன்பு, நினைவுகள் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்துவது சரியல்ல என்கிறார் இவர். இதுபோல முப்பது பிளஸ் பெண்களை பேட்டி கண்டு ஆவணப்படமெடுத்துள்ளார் எல் ஹாப்ரே. இவரும் நாற்பதில் சிங்கிள்தான். லெபனானின் 6 மில்லியன் மக்கள்தொகையில் 2 சதவிகிதம் பெண்கள். தொண்ணூறுகளில் உள்நாட்டுப்போர் முடிவுற்றபின், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்க, தொழில்திறன் கொண்ட ஆண்கள் வெளிநாட்டிற்கு படிக்கச்சென்று அங்கேயே திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்கள். ஆனால் பெண்கள் கல்வி முடிந்தும் லெபனானில் வாழ பெற்றோரால் நிர்பந்திக்கப்பட்டனர். தனியாக வாழ்வதன் பிரச்னைகள், உறவுகள் பற்றி கிராஃபிக் டிசைனரான அட்ரியனா பிளாக்கில் எழுதிவருகிறார். மரபுகளின் பிடியில் பெண்களிலிருந்து விலகி தன் வழியில் வாழ்க்கையை சந்திப்பது சந்தோஷம்தானே!

பிரபலமான இடுகைகள்