உளவியல் மருந்து ஆராய்ச்சியாளர்!







உளவியலுக்கான முன்முயற்சி!

"நான் அமேசான் காடுகளின் மீது பறந்து எனது பதற்றம் மற்றும் கற்பனையை ஜெயிக்கப்போகிறேன்" என தோழி கூறியதை உளவியல் வல்லுநரான ரோஸலிந்த் வாட்ஸ் மறுத்துவிட்டார். மரபான உளவியல் சிகிச்சைகள் இதற்கு எவ்வித பயனையும் தராது என்பது வாட்ஸ் அறிவார்.


இங்கிலாந்திலுள்ள நேஷ்னல் ஹெல்த் சர்வீஸில் பணிபுரியும் வாட்ஸ் நவீன உளவியலாளர்களின் முக்கியமானவர். மனஅழுத்தப் பிரச்னைகளில் சிக்கிய நோயாளிகளுக்கு நிவாரணி மருந்துகளைப் பெற்றுதர முயற்சித்துவருகிறார். psilocybin எனும் போதைமருந்தை மனஅழுத்த மருந்தாக பயன்படுத்த முடியுமா? என்று ஒன்றரை ஆண்டுகளாக ஆராய்ந்து வருகிறார் வாட்ஸ். "மக்கள் தம் மனங்களை சிறையில் அடைத்து வைத்திருப்பதன் வெளிப்பாடே மாயத்தோற்றங்கள்" என்கிறார் வாட்ஸ். வழக்குரைஞரின் உதவியாளராக பணியாற்றியவர் அங்கு சந்தித்த மக்களின் உளவியல் பிரச்னைகளால் ஈர்க்கப்பட்டு உளவியல் மருத்துவரானார். "எதிர்காலத்தில் உளவியல் தெரபி தேவைப்படுபவர்களு சட்டப்பூர்வமாக நிம்மதி கிடைக்கச்செய்யும் மருத்துவமனையை உருவாக்குவதே லட்சியம்" என்று தீர்க்கமாக சொல்லி புன்னகைக்கிறார் உளவியல் மருத்துவர் ரோலிந்த் வாட்ஸ்