இந்தியாவின் பசுமைப்போராளிகள்!



Image result for composer abhishek ray







இந்தியாவின் பசுமை போராளிகள்!




Image result for sameer majli



நகரமயமாதலின் விளைவாக தொடர்ச்சியாக மரங்கள் வெட்டப்பட்டு நிலங்கள் அரசு அல்லது தனியாரால் ஆக்கிரமிக்கப்படுவது ஊடகங்களில் நியாயப்படுத்தப்பட்டு வருகிறது. தொழில்வளர்ச்சி நாட்டிற்கும் மனிதர்களுக்கும் தரும் வளத்தை யாரும் அலட்சியப்படுத்த முடியாது. அதேசமயம் நிலம்,நீர்,காற்று என நாம் வாழ்வதற்கான அனைத்து ஆதாரங்களும் மாசுபட்டால், நாம் நிலத்தில் கால்பதிக்காமல் பிராணவாயு சிலிண்டர்களோடு விண்வெளியில்தான் வசிக்கவேண்டியிருக்கும். பசுமையை பாதுகாக்க போராடும் தன்னார்வ மனிதர்களில் சிலர் பூமிக்கு நம்பிக்கை அளித்து வருகின்றனர்.

அபிஷேக்ராய்

உத்தர்காண்ட் மாநிலத்தில் சிதாபனி என்ற காட்டினை உருவாக்கியுள்ள அபிஷேக்ராய், பாலிவுட் இசையமைப்பாளரும்கூட. 350 க்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வாழிடமாக இக்காட்டினை தன் சொந்த சேமிப்பை கரைத்து உருவாக்கியுள்ளார் அபிஷேக். "கார்பெட் தேசியப்பூங்காவில் விவசாயத்திற்காக வனப்பரப்பு அழிந்துவருவதும், புலிகளின் எண்ணிக்கை இதனால் குறைந்ததும் என்னை காடு வளர்ப்புக்கு தூண்டிய முக்கிய காரணிகள்" மலர்ச்சி பெருக பேசுகிறார் அபிஷேக். இந்தியாவுக்கான மரவகைகளான ஆலமரம், மாமரம் ஆகியவற்றை விதைத்தவர், புலிகளின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார். இரைச்சல், ஒளி, ஆகியவற்றை அனுமதிக்காமல் தன் உழைப்பிலான வனப்பரப்பை காத்துவருகிறார் அபிஷேக்.

சமீர் மஜ்லி
கர்நாடகாவின் பெல்காமைச் சேர்ந்த சமீர் மஜ்லி, தொழில்ரீதியாக வேலைவாய்ப்பு ஆலோசகர் மற்றும் கல்வியாளர் என்றாலும் கிரீன் சேவியர்ஸ் அமைப்பு அவரை சூழல் வட்டாரத்தில் பிரபலபடுத்தியது."கடந்தாண்டு ஏப்ரல் 10 அன்று நாங்கள் நட்ட 10 ஆயிரம் மரக்கன்றுகளில் 75 சதவிகித மரக்கன்றுகள் பிழைத்துள்ளன. ஆறு இடங்களில் சிறுகாடுகளை உருவாக்கியுள்ள எங்கள் அமைப்பு, மரக்கன்றுகளை பராமரிப்பது மட்டுமல்லாது விதைக்காத மரக்கன்றுகளுக்கு மாற்றாக புதிய மரக்கன்றுகளை விதைத்து வருகிறோம்" என்கிறார் கானுயிராளர் சமீர் மஜ்லி.
 18 அடி இடைவெளியில் 10 ஆயிரம் ச.அடியில் 300 மரங்களை ஜப்பானிய மியாவகி முறையில் விதைத்துள்ளனர். "பெல்காமில் 2015 ஆம் ஆண்டு பஞ்சம் வந்தபோது மரங்களுக்கான பாதுகாப்பு இரண்டாமிடத்திற்கு சென்றுவிட்டது. அப்போது நாங்கள் பல்வேறு தொழிற்சாலைகள், பள்ளிகளுக்கு உள்ளேயே மரக்கன்றுகளை பயிரிடுவதை ஊக்குவித்தோம்" என்பவர் இந்தியரக பழமரங்களையும் அதிகம் விதைத்து வருகிறார்.


Image result for abdul kareem kerala

அப்துல் கரீம்

1977 ஆம் ஆண்டு கேரளாவின் காசர்கோடு அருகே நீலேஸ்வரத்தைச் சேர்ந்த அப்துல் கரீம் பரப்பா அருகிலுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை ரூ.3,750 க்கு வாங்கினார். அப்போது அங்கு நீர்,மரம்,பறவை என ஏதுமில்லை. ஆனால் 41 ஆண்டுகளுக்கு பிறகு 32 ஏக்கரில் அங்கு மக்களே பிரமிக்கும்படி வனத்தை உருவாக்கியுள்ளார் அப்துல் கரீம். இருநாட்கள் தன் மரங்களைவிட்டு பிரிந்தால் முகம்வாடிவிடும் அன்புமனம் அப்துல் கரீமுக்கு.

சுபேந்து சர்மா

உத்தர்காண்ட் மாநிலத்தில் 700 .அடியில் 234 மரங்களை விதைத்து பராமரித்து வரும் பொறியாளர் சுபேந்து சர்மாவுக்கு இன்ஸ்பிரேஷன் ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவகி. "200 .அடியில் கூட காடுகளை வளர்க்கமுடியும். இதற்கான ஆலோசனைகளை குறைந்தவிலையில் நாங்கள் வழங்குகிறோம்." என்கிறார் சுபேந்து சர்மா.


Image result for shyamsundar paliwal,rajasthan




ஷியாம்சுந்தர் பலிவால்        

ராஜஸ்தானின் பில்பாந்திரி கிராமத்தைச் சேர்ந்த ஷியாம், கிராமத்தில் பிறக்கும் ஒரு பெண்குழந்தைக்கு 111 மரக்கன்றுகளை நட்டு வருகிறார். இதோடு கேரளாவின் கல்லன் பூக்குடன், ஜெய்ப்பூர் ஷியாம் சுந்தர் ஜியானி, மங்களூர் ராஜேஷ் நாயக், சென்னை லோகநாதன், ஆந்திராவின் பப்லு கங்குலி, மேரி வட்டம்தனம் மற்றும் ஜான் டி சூசா ஆகியோர் இந்தியாவின் பசுமைக்கு துணை நிற்கின்றனர்.  


விக்டர் காமெஸி