டான்ஸூக்கு ஜெயில்!- இப்படியும் ஒரு நாடா?





பிட்ஸ்!

அன்புத்தொல்லை!

அரசியல் திறனாய்வாளரான பேராசிரியர் ஜெர்சி தர்கால்ஸ்கி தன் வீட்டில் போலந்தின் அரசியல் சீர்குலைவுகளை அடித்து உடைத்து டிவியில் பேசிக்கொண்டிருந்தார். அனைவரும் சீரியசாக பார்த்த அந்த லைவ் ஷோவில் திடீரென பேராசிரியரின் பூனை லிசியோ அவரின் தலைமீது குதித்து என்ட்ரி கொடுக்க, உலகமே வயிறு குலுங்கச்சிரித்து ரிலாக்ஸானது.

டான்ஸூக்கு சிறை!

இரானைச் சேர்ந்த  டீன்ஏஜ் பெண் மேடெஹ் ஹோஜப்ரி டான்ஸ் ஆடி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவிற்காக அரசு அவரைக் கைதுசெய்துள்ளது. மேலும் அரசு டிவியில் அவரது குற்றத்தை ஹோஜப்ரி வாயாலே ஒத்துக்கொள்ள நிர்பந்தித்தது.இதற்கு எதிராக உலகமெங்கும் திரண்ட நெட்டிசன்கள் டான்ஸ் ஆடியதற்கு எதற்கு சிறை? என அரசைக் கண்டித்து பல்வேறு டான்ஸ் வீடியோக்களை அப்லோடு செய்து வருகின்றனர்.

காலை மீட்கும் போராட்டம்!

அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் அவென்யூ ஸ்டேஷனின் மின்ரயிலிலிருந்து பெண் ஒருவர் இறங்கினார். ஆபீஸ் அவசரத்தில் கால் ட்ரெயினுக்கும் பிளாட்பாரத்திற்கும் மாட்டிக்கொண்டது. கால் அடிபட்டு வலியில் அலறிய பெண்மணியை ட்ரெயினை ஐலசா சொல்லித் தள்ளி காப்பாற்றியுள்ளது சக பயணிகள் என்பதுதான் நெகிழ்ச்சி. விரைவில் அப்பெண்மணிக்கு காலில் ஆபரேஷன் நடைபெறவிருக்கிறது.

பிரதமருக்கு கேக் ரெடி!


பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அண்மையில் ஊழல் குற்றச்சாட்டில் 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதனை தன் தீமாக எடுத்த துபாயைச் சேர்ந்த கதீஜா அம்மத், நவாஸ் சிறைக்குள் இருப்பதுபோல வரைந்து 3 கி.கி கேக் ரெடி செய்து பிரபலமாகியுள்ளார். வெனிலா ஃப்ளேவரில் தயாரான கேக்கின் விலை ரூ. 5 ஆயிரத்து 616.