மடகாஸ்கரில் அரசியல் குழப்பம்!







மடகாஸ்கர் தேர்தலுக்கு ரெடி!




மக்கள் போராட்டங்களால் ஏற்பட்டுவரும் அரசியல் சமநிலையின்மையைப் போக்க, இவ்வாண்டின் அக்டோபர் மாதம் மடகாஸ்கரில் தேர்தல் நடத்த மடகாஸ்கர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில்  ஏப்.15லிருந்து 27 வரை அரசுக்கு எதிராக  தலைநகரான அன்டானநரிவோவில் மக்கள் போராட்டம் நடத்தியது உலகளவில் கவனிக்கப்பட்டது. இதற்கான தீர்வாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட தற்காலிக அரசை உருவாக்கும்விதமாக நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. புதிய தற்காலிக அரசு  ஜூன் 12 முதலாக ஆட்சிக்கு வரும். உலக தொழிலாளர் சங்கத்தின் தலைவரான கிறிஸ்டியன் என்சே நாட்டின் அதிபராக தேர்தல் அறிவிப்பு வரை செயல்படுவார் என்றும் அமைச்சரவையில் எதிர்கட்சியைச் சேர்ந்த பத்துபேர் இடம்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஊழல் கறைகளை கொண்ட முன்னாள் அதிபர்களான மார்க் ராவலோமனானா, ஆண்ட்ரி ரஜோலினா ஆகியோரை எதிர்த்து வெல்ல கிறிஸ்டியனுக்கு வாய்ப்புள்ளது.