ரயிலில் ராமாயண டூர்!
ராமாயணா டூர்!
ஆன்மிகச்சுற்றுலாவுக்கு
மக்களை ஈர்க்க இந்திய ரயில்வே அதிரடியாக முடிவு
செய்து ராமாயணா எக்ஸ்பிரஸ் என்ற ரயிலை வரும் நவம்பர் மாதத்திலிருந்து இயக்கவுள்ளது.
பதினாறு நாட்கள்
கொண்ட ஆன்மிக பயணத்தில் செழிப்பான மக்கள் பங்கேற்று பயணிக்கலாம். டெல்லியின்
சஃப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து அயோத்தியா, ஹனுமான் கார்கி,
ராம்கோட், கனக் பவான் கோவில், நந்திகிராம், சீதாமர்கி, ஜானக்பூர்,
நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம்
வரை செல்லவிருக்கிறது. 800 பேர் பயணிக்கும் இந்த ரயிலில் நபர்
ஒருவருக்கு தலா ரூ. 15,ஆயிரத்து 120 கட்டணம்
வசூலிக்கப்படும். இலங்கையில் ராமன் தொடர்பான இடங்களை பயணிகள்
சுற்றிப்பார்க்கவும் இந்திய ரயில்வே 47 ஆயிரத்து 600 விலையில்(5 இரவு/6 பகல்) சுற்றுலா பேக்கேஜூகளை வைத்துள்ளது.