அண்ட்ராயர்தான் மாஸ்க்! - காமெடி திருடர்











பிட்ஸ்!

அமைதிக்கான சந்திப்பு!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் புடின் சந்திப்பு  பின்லாந்தின் ஹெலின்ஸ்கி நகரில் நடைபெற்றது. இச்சந்திப்பையொட்டி ஆம்னெஸ்டி, க்ரீன்பீஸ், பத்திரிகைகள் உள்ளிட்ட அமைப்புகள் நகரெங்கும்  வைத்துள்ள பில்போர்டுகள் உலகை வசீகரித்துள்ளன. ட்ரம்பின் பத்திரிகையாளர் எதிர்ப்பு குணத்தை கிண்டல் செய்யும் ஹெல்சிங்கின் சனோமட் என்ற பத்திரிகையின் பில்போர்டுகள் ஸ்பெஷல்.

விளம்பர மோகம்!

பெங்களூரு மார்க்க விரைவு ரயில் அது. ரயிலின் ஜன்னல் கம்பியில் தோளில் பேக் சகிதமாக தொங்கியபடி பயணிக்கும் இளைஞர் திடீரென பிடிமானம் தவறி அலறியபடி கீழே விழும் வீடியோ இணையத்தில் திகுதிகு ஹிட். படம் பிடிப்பதை விட்டு இளைஞரை காப்பாற்றியிருக்கலாமே என பரஸ்பர விவாதங்கள் கிளம்பியுள்ளன. கடந்தாண்டு மும்பையிலும், சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்திலும் இப்படி விபரீத வீரச்செயலில் இறங்கிய இளைஞர்கள் இறந்துபோனது குறிப்பிடத்தக்கது.

உள்ளாடை முகமூடி!

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரிலுள்ள ஆபீசில் திருடர் ஒருவர் நுட்பமாக நுழைந்தார். நிதானமே பிரதானமாக திருடியவர் கேமராவின் பக்கம் யூடர்ன்போட்டு திரும்பியபோது அவர்  உள்ளாடையை முகமூடியாக்கியிருப்பது  தெரியவந்தது. மாஸ்க் வாங்கக்கூட காசு இல்லாத கஞ்சபிரபு திருடரை பிடிக்க லியாண்டர் பகுதி போலீஸ் மக்களின் உதவியை நாடியுள்ளது.

ஆட்டோகிராஃப் காயம்!

மேற்குவங்காளத்தின் மிட்நாபூரில் பிரதமர் மோடியின் அரசியல் கூட்டம் நடைபெற்றது. துரதிர்ஷ்டவசமாக விழா மேடை கூடாரம் மழைகாரணமாக சரிந்து விழுந்ததில்  44 பேர் படுகாயமுற்றனர். பாதுகாப்பு படை மூலம் மக்களை மீட்க உத்தரவிட்ட பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் விருப்பத்தை ஆட்டோகிராஃப் போட்டது நெகிழ்ச்சி மொமண்ட்டாக இணையத்தில் சூப்பர் வைரலாகிவருகிறது.   



  




பிரபலமான இடுகைகள்