"நீதிமன்றத்தின் கதவு மக்களுக்காக திறந்தேதான் இருக்கிறது"
முத்தாரம் Mini
பயமற்ற இந்தியாவைப் பற்றி பேசுகிறீர்கள். கௌரிலங்கேஷ், எம்.எம்.கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர
தபோல்கர் உள்ளிட்ட எழுத்தாளர்களின் படுகொலைகள் அச்சுறுத்தலாக உள்ளதே?
கர்நாடகாவில் பத்திரிகையாளர் கௌரிலங்கேஷ் கொல்லப்பட்டது
ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் அரசு. இதுபோல நிறைய
சம்பவங்கள் முன்பும் நடந்துள்ளது. மாநில அரசுக்கு நாங்கள் அறிவுறுத்தல்களையும்
உதவிகளையும் தரமுடியும்.
ஆனால் அனைத்து விஷயங்களுக்கும் இந்திய அரசை குறைசொல்வது அழகல்ல.
கூட்டாட்சியைப் பற்றி நீங்கள் பேசினாலும் ஜிஎஸ்டி, பணமதிப்புநீக்கம் அரசுக்கு புகழ்தரவில்லையே?
ஜிஎஸ்டி காங்கிரஸ் ஆட்சியில் தயாரானது. அதை நாங்கள் எளிமைப்படுத்தி அமுல்படுத்தினோம். ஜிஎஸ்டிக்காக
இந்திய அரசை மட்டும் வசைபாடினால் எப்படி? காங்கிரஸ், பிஜூ ஜனதாதளம், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில
அரசுகளுக்கும் இதில் பங்கில்லையா?
என்ஐஏ மீது விமர்சனங்கள் கிளம்புகிறதே?
அது தன்னாட்சி அமைப்பு. அதன் மீது நம்பிக்கை இல்லையென்றால் நீங்கள் நீதிமன்றத்தை அணுகலாம்.
நீதிமன்றத்தின் கதவு மக்களுக்காக திறந்தேதான் இருக்கிறது. அரசியல்ரீதியாக குறிப்பிட்ட அமைப்பை குறைகூறி விமர்சிப்பது சரியானதல்ல.
-ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர்