அலர்ஜி ஏற்படுத்து பாதிப்புகள் என்ன?


Image result for allergy


அலறவைக்கும் அலர்ஜி!


கத்தரிக்காய், உருளைக்கிழங்கு சாப்பிட்டால் தோல் வீங்கும். இறைச்சி சாப்பிடால் பேதி என அலர்ஜி சிம்பிள் பிரச்னையல்ல; இதற்கு மருந்தும் கிடையாது. "ரத்தசோதனையில் வரும் முடிவுகளை வைத்து அலர்ஜியை மதிப்பிடவே முடியாது. பெரும்பாலும் மனிதர்களுக்கு தற்போது ஏற்படும் அலர்ஜிக்கு உணவுப்பொருட்களே காரணம்" என்கிறார் மருத்துவர் பிரசாத்.
பெரும்பாலும் அலர்ஜிக்கு 8 சதவிகிதம் இலக்காவது குழந்தைகளே. பெரியவர்கள் 1-2% பாதிக்கப்படுகிறார்கள். தொடர்ச்சியாக அலர்ஜி பிரச்னைகளை அதிகரிப்பதற்கு நோய் எதிர்ப்புசக்தி குறைவதோடு காற்றும், நம் சுற்றுப்புறமும் மாசடைவதும், வாழ்க்கைத்தரமும் முக்கிய பங்காற்றுகிறது.
2011 ஆம் ஆண்டு உலக அலர்ஜி பவுண்டேஷன், இந்தியாவிலுள்ள 30 சதவிகித மக்கள் அலர்ஜியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு எண்ணிக்கை அதிகரிப்பதையும் ஆய்வு மூலம் சுட்டிக்காட்டியுள்ளது. 2050 ஆம் ஆண்டில் 50 சதவிகித குழந்தைகள் ஏதாவதொரு அலர்ஜி பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்கிறது இந்த ஆய்வு.