சென்னையின் முதல் மருத்துவமனை எப்போது தொடங்கியது?..
சென்னை
சீக்ரெட்ஸ்! -பிகே
முதல் மருத்துவமனை!
கோட்டை
மருத்துவமனையின் முதல் சர்ஜன் ஜான் கிளார்க். மெட்ராஸ் ஜெனரல் ஹாஸ்பிடலான இங்கு
எட்டு முதல் பத்து ராணுவ வீரர்கள் தங்கி சிகிச்சை பெறும் வசதி இருந்தது. 1680ல்
கோட்டையில் புனித மேரி சர்ச் கட்டப்பட்டதும் மருத்துவமனையை விரிவுபடுத்த பேசி,
838 பகோடாகள்(ரூ.3,000)
நிதி திரட்டி சர்ச் அருகேயே இரண்டு மாடிக் கட்டிடம் கட்டப்பட்டது. கோட்டைக்குள் ஆட்கள் பெருக இடத்தேவையும் அதிகரித்தது.
மருத்துவமனையின்
கட்டுமானத் தொகையைத் திருப்பி தந்து கம்பெனியே அக்கட்டிடத்தை வாங்கிக் கொள்ள கோட்டைக்கு
உள்ளே ஒரு வாடகைக் கட்டிடத்திற்கு மாறியது மருத்துவமனை. புதிய கவர்னராக வந்த சர்
எலிஹு யேல்,
கோட்டையின் வடபகுதியில்(நாமக்கல் கவிஞர் மாளிகை) புதிய மருத்துவமனைக் கட்டிடத்தை கட்டினார். ஏறத்தாழ
60 ஆண்டுகள் மருத்துவமனை அதேயிடத்தில் செயல்பட்டது.
18ம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த போர்களால் கோட்டையில் வீரர்கள் குவிந்ததாலும்,
ஆயுதங்களின் சேமிப்பாலும் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதன்விளைவாக மருத்துவமனைக்
கட்டிடம் ராணுவ முகாமாக மாறியது.
1753ல்
மருத்துவமனை கோட்டையை விட்டு வெளியேறி கருப்பர் நகரின் ஒரு பகுதியான பெத்தநாயக்கன்
பேட்டையில் அமைந்தது. அன்றைய மருத்துவமனை அடிக்கல்லை பொது மருத்துவமனை வளாகத்தில் இன்றும்
காணலாம். இதை 1953ல் பார்த்தவர்கள் மருத்துவமனைக்கு 200 ஆண்டு
என தவறுதலாக கொண்டாடிய ஆவணங்களும் உள்ளன.
நிறைவில், 1758ல் மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்கள் தேவை என
அன்றைய கவர்னர் ஜார்ஜ் பிகாட்க்கு கடிதம் எழுதப்பட்டுக் கட்டுமான பிளானும்
கொடுக்கப்பட்டது. போர்களால் திட்டம் கிடப்புக்குச் சென்றது.
1771ல் ராணுவ வாரியம்
அங்கீகாரம் கொடுக்க, டபுள் பிளாக் எனப்படும் கட்டுமானம்
அமைக்கபட்டது. 1772ம் ஆண்டிலிருந்து இன்றைய சென்ட்ரல் ரயில்நிலையம் எதிரில் அரசு மருத்துவமனை
செயல்பட்டு வருகிறது.
சென்னை
சீக்ரெட்ஸ்!- பிகே
மருத்துவமனையின்
கதை...
மெட்ராஸில்
ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு பாரம்பரிய வைத்தியசாலைகளே இருந்தன. 1640ல் புனித
ஜார்ஜ் கோட்டை எழும்பியபோதுதான் மேலை நாட்டு மருத்துவமுறை மக்களுக்கு அறிமுகமானது. கிழக்கிந்தியக்
கம்பெனி வாணிபத்திற்காகக் கிழக்கு நோக்கி கிளம்பும்போது, கப்பலில்
பணிபுரிய மருத்துவரையும் அழைத்து வருவது வழக்கம்.
கம்பெனி குடியிருப்புவாசிகளுக்கும்
மருத்துவர்களின் உதவி தேவைப்பட்டது. மெட்ராஸுக்கு இப்படி வந்த
முதல் மருத்துவர் எட்வர்ட் ஒயிட்டிங். வெப்பமண்டலச்சூழலால் ஆங்கிலேயர்கள்
நோயில் வீழ்ந்தனர். உடனே கம்பெனி அதிகாரிகளான வில்லியம்
கிஃபர்ட்டும், ஜெரமி சாம்ப்ரூக்கும்,
கவர்னர் சர் எட்வர்ட் வின்டருக்கு மருத்துவமனை அவசியத்தை வலியுறுத்தி கடிதம்
எழுதினர்.
உடனே, கோட்டையில்
இருந்த ஆண்ட்ரூ கோகனின் இல்லத்தை மாதம் இரண்டு பகோடாகளுக்கு (சுமார் 5 ரூபாய்)
வாடகைக்கு எடுத்து மருத்துவமனையாக்கினார் கவர்னர் வின்டர். 1664ம் ஆண்டு நவம்பர்
16ம் தேதி வாடகை இல்லத்தில் துவங்கியது வெற்றிகரமாக தொடங்கியது அரசு மருத்துவமனை!
காப்புரிமை: பேராச்சி கண்ணன்