ஸபைடர்மேனுக்கு சூப்பர் ஜாப்!
பிட்ஸ்!
பெண்ணை காப்பாற்றிய
நாய்!
அமெரிக்காவின்
அரிசோனாவைச் சேர்ந்த பாலா காட்வின் தனது இரண்டு ரெட்ரீவர் நாய்களுடன் காலை வாக்கிங்
கிளம்பினார்.
சாலையில் திடீரென காட்வினின் காலருகே வந்த பாம்பை கவனித்து கடித்து குதறிய
டாட் நாய், எஜமானியை காப்பாற்றி காயம்பட்டது. முகம் பாம்பு கடியால் பணியாரமாய் வீங்கி, கால் பெண்ட்
ஆனாலும் எஜமானியை காத்த விசுவாசம் டாட் என்ற நாய்க்கு இணையத்தில் 'விசுவாசம்னா இதுதான்' என லைக்ஸ்களை குவித்துவருகிறது.
ஸ்பைடர்மேனுக்கு
வேலை!
பிரான்சில் குழந்தையை
நான்கு மாடி ஏறி காப்பாற்றிய அகதி இளைஞர் மாமோடோ கசாமாவுக்கு புதிய வேலை ரெடி. குடியுரிமை,
துணிச்சலுக்கான தங்க மெடல் ஆகியவற்றை அளித்த பிரான்ஸ் அரசு, கசாமாவே எதிர்பார்க்காத புதிய பரிசாக
அவருக்கு பாரிசிலுள்ள தீயணைப்புத்துறையில் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ளது.
நான்காவது மாடியில் சிக்கிய குழந்தையை மீட்க கயிறு உட்பட எந்த உபகரணங்களும்
இல்லாமல் ஏறிய கசாமாவுக்கு இதைவிட சிறந்த பணியை தரமுடியாது என பிரான்ஸ் அரசு கூறியுள்ளது.
சாக்கடை அரசியல்!
கராச்சியைச் சேர்ந்த
அயாஸ் மேமோம் மோடிவாலா ஓட்டுவாங்க செய்த காரியம் மக்களை உவ்வே சொல்ல வைத்துள்ளது. சாலையில்
தேங்கிய கழிவுநீரில் படுத்துக்கொண்டு அயாஸ் வாக்கு சேகரித்ததுதான் இணைய வைரல் மேட்டர்.
கராச்சியில் சுயேச்சையாக போட்டியிடும் அயாஸ், கழிவுநீரில்
படுத்தபடியும், அதனை குடிப்பது போலவும் போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில்
பதிந்து பிரபலமாகிவிட்டார். கராச்சியில் குடிநீர் தட்டுப்பாடு
அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மீல்ஸ் ரேட்டைக்
குறைக்க பளார்!
மும்பையிலுள்ள
செனபதி பாபத் சாலையில் பிரபல மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர் இயங்கிவருகிறது. தியேட்டரில் வழங்கும் உணவுப்பொருட்களின் விலையை குறைக்காததால் நவநிர்மாண் சேனா
தொண்டர்கள் உதவி மேனேஜரை சுற்றி நின்று சரமாரியாக தாக்கிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியினர் செய்த பப்ளிசிட்டி நடவடிக்கை, இது சரியானதுதான்
என கோஷ்டிகள் பிரிந்து வீடியோ குறித்து பட்டிமன்றம் நடத்திவருகின்றனர்.