இந்தியாவின் தொழில்துறை ஹாட்ஸ்பாட்கள் எவை?
மேட்
இன் இந்தியா!
பாரூச், குஜராத்
குஜராத்தின் பாரூச் நகரில் பெட்ரோலியம், பெட்ரோகெமிக்கல், மருந்துப்பொருட்கள், வேதிப்பொருட்கள், உரங்கள் தயாரிக்கப்படுகின்றன. 6 ஆயிரம் தொழிலாளர்கள் வீடியோகான்,
ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். அதிகரிக்கும் மாசு பிரச்னை.
லூதியானா, பஞ்சாப்
உடைகள், சைக்கிள் தொழிற்துறையின் மையமான லூதியானா பஞ்சாபின் தொழில் நகரம். இங்கு 12 ஆயிரம் சிறுகுறு தொழில்கள் நடைபெற்றுவருகின்றன. கம்பளி ஆடைகள் தொழில்மூலம் ஆண்டுதோறும் 15 ஆயிரம் கோடி வருமானத்தை அள்ளுகிறது இந்நகரம்.
தொழிலில் செலவு அதிகரிப்பதும், விலை குறைந்த இறக்குமதி பொருட்களும் குவிவது சவாலாக மாறிவருகிறது.
மோரதாபாத், உத்தரப்பிரதேசம்
பித்தளைப் பொருட்களுக்கு புகழ்பெற்ற ஸ்பாட்.
பத்து லட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரியும் தொழில்துறையில் 5 ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன. ஆண்டுக்கு வருமானம் 9,700 கோடி. ஏற்றுமதி வருமானம் 5,400 கோடி. காலத்திற்கேற்ப தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தாதது சிக்கலாக மாறிவருகிறது.
ஃபிரோஷாபாத்,
உத்தரப்பிரதேசம்
பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து கண்ணாடிப்பொருட்கள், கலைப்பொருட்களுக்கான சந்தை. 4,222 தொழிலகங்கள் இயங்குகின்றன. ஆண்டுவருமானம் 4 ஆயிரம் கோடி.
33,700 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அரசு தொழில்துறை உதவியின்மை,
முதலீடு இல்லாதது சவால்களாக உள்ளன.
கான்பூர்
தோல்பொருட்கள் மற்றும் ஜவுளித்துறை ஆகியவை பிரபலம்.
சுதந்திரத்திற்கு முன்பிருந்த துணி நிறுவனங்கள் மூடப்பட,
தோல்பொருட்கள், வாகன உதிரிபாகங்கள் விற்பனை நடைபெறுகிறது. தொண்ணூறுகளிலிருந்த ஒரு லட்சம் தொழிலாளர்களின் எண்ணிக்கை தோல்பொருட்களின் மூலப்பொருட்களின் தட்டுப்பாடால் குறைந்துவருகிறது. மாசுபாடு தீர்க்கவேண்டிய சிக்கலாக மாறியுள்ளது.
வாரணாசி
கைத்தறி
மற்றும் கைவினைப்பொருட்களுக்கு பிரசித்தி பெற்ற இடம்.
17 லட்சம் மின்தறிகளில் 80 லட்சம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். நெசவாளர்களின் எண்ணிகை 1.5 லட்சம். தேவை குறைவதும்,
ஜிஎஸ்டி வரியும் தொழில்துறையை சரித்து வருகிறது.
சூரத்
வைரத்தை
அறுத்து பாலீஸ் செய்வதில் வித்தகர்கள் நிறைந்த இடம்.
5 ஆயிரம் தொழிலகங்கள் மூலம் ஏற்றுமதி லாபம்
20 பில்லியன் டாலர்கள். ஒரு லட்சம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
கொச்சி
எண்ணெய்
சுத்திகரிப்பு, மீன் உணவுகள்,
மசாலா பொருட்களுக்கு பிரபலம். ஏற்றுமதி மதிப்பு 1 லட்சத்து 76 ஆயிரத்து 642 கோடி. 2016-2017 மசாலா பொருட்கள் தயாரிப்பு
1 லட்சத்து 39 ஆயிரத்து 865 டன்கள். சரியான முதலீடு,
மிக அதிக தயாரிப்பு செலவு இத்துறையின் சவால்கள்.