மகப்பேறு விடுமுறையால் பெண்களை தவிர்க்கும் நிறுவனங்கள்!








பெண்களைத் தவிர்க்கும் நிறுவனங்கள்!






கடந்தாண்டு மார்ச் 9 அன்று அமுலுக்கு வந்துள்ள கர்ப்பிணி பெண்களுக்கான பிரசவகால விடுமுறை சட்டத்தால் பெண்கள் வேலையிழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


 12 வாரங்களாக இருந்த பிரசவகால விடுமுறை அரசின் புதிய சட்டத்தால் 26 வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறுவகை தொழில்பிரிவுகளில் பணியாற்றும் 12 கோடிக்கும் மேற்பட்ட பெண்களில் 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு விடுமுறைக்கு பின் வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளின் பிறப்புக்கு மட்டுமே அரசின் பிரசவ விடுப்பு ரூல்ஸ் பொருந்தும். சுற்றுலா, சூப்பர்மார்க்கெட், வணிகம், உற்பத்திதுறை சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் பிரசவவிடுப்பு முடிந்தாலும் பெண்களை திரும்ப பணிக்கு சேர்க்க தயங்குகிறார்கள். இவ்வாண்டில் மட்டும்(2018-19), பதினெட்டு லட்சம் பெண்கள் இவ்வகையில் வேலையிழக்க வாய்ப்புள்ளதாக துறை வல்லுநர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். பெண்களுக்கான சம்பள விகித வேறுபாடு, புரமோஷன் உள்ளிட்ட பிரச்னைகளும் பன்னாட்டு நிறுவனங்களை கதிகலங்கவைத்துள்ளன


2

குழந்தை ராணுவ வீரர்கள்!

சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் பகுதிகளில் நக்சலைட் படையணிகளில் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படுவதை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

"ஜம்மு காஷ்மீரின் ஜெய்ஸ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதின் உள்ளிட்ட அமைப்புகள் லாட்டரி மூலம் சிறுவர்களை தங்கள் அமைப்புக்கு தேர்ந்தெடுத்து படைவீரர்களை உளவறியவும், தாக்கவும் பயன்படுத்துகிறார்கள்" என்று தகவல் தெரிவித்துள்ளார் ஐ.நா செயலரான அன்டானியோ குட்டெரஸ்.

"நக்சலைட்டுகள், இஸ்லாமிய தீவிரவாதிகள் நிறைந்த பகுதிகளில் பதினாறு வயதான சிறுவர்களின் பெயர்களை எழுதி குலுக்கிப்போட்டு ராண்டமாக தேர்ந்தெடுத்த அரசுக்கு எதிரான அமைப்புகளில் சேர்க்கின்றனர். போலீசில் புகார் செய்யவும் பழங்குடிகள், மக்கள் அஞ்சுகின்றனர்" என குற்றம் சாட்டுகிறார் தேசியபாதுகாப்பு படைத்தலைவர் ராஜீவ்ராய் பட்நாகர். இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட மாநிலங்கள் மட்டுல்லாது சிரியா, ஏமன், நைஜீரியா, சூடான் ஆகிய நாடுகளிலும் சிறுவர்களை ஆயுதக்குழுக்களில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது

3


குழந்தை கடத்தலை தடுக்க நீச்சல்!

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளிப் பெண் லியா சௌத்ரி, ஆங்கில கால்வாயை நீச்சலடித்து கடந்து சாதனை செய்துள்ளார். எதற்கு திடீரென நீச்சல் சாதனை? பாப் அப் பிளே எனும் குழந்தைக் கடத்தல்களை தடுக்கும் செயல்பாட்டிற்கான நிதிக்காகவே இந்த நீச்சல் முயற்சி.

 ஆங்கில கால்வாயில் தொடங்கி பிரான்ஸ் வரை இரவும் பகலுமாக பதிமூன்று மணிநேரம் நீந்திசென்றுள்ளார் லியா. இம்முயற்சிக்கு இளவரசர் பிரின்ஸின் பிரிட்டிஷ் ஆசியன் அறக்கட்டளை ஆதரவளித்துள்ளது. "நீச்சல் முயற்சியில் இது எனக்கு பெருமையான நிகழ்வு. இம்முயற்சியை இதுவரை 1,500 பேர் மட்டுமே செய்துள்ளனர்" என மகிழ்கிறார் லியா சௌத்ரி. தற்போது குழந்தை கடத்தலை தடுக்கும் லியா சௌத்ரியின் முயற்சிக்கான நிதியாக 35 ஆயிரம் பவுண்டுகள் திரட்டப்பட்டுள்ளன.

4

பாகிஸ்தான் சிறையில் இந்தியர்கள்!

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள  471 இந்தியர்களின் பெயர் பட்டியலை அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு அளித்துள்ளது. இந்த லிஸ்ட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குல்புஷன் யாதவ், அன்சாரி ஆகியோர் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் 418 மீனவர்களும், 53 மக்களையும் கைது செய்து சிறையிலடைத்துள்ளது. இந்தியா தரப்பில் 249 பாகிஸ்தான் மக்களையும், 108 மீனவர்களையும் பட்டியலிட்டு விரைவில் ஒப்படைக்கவுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கிடையே 2008 ஆம் ஆண்டு மே மாதம் அன்று கையெழுத்தான ஒப்பந்தப்படி இருநாட்டு கைதிகளையும் ஆண்டுக்கு இருமுறை(ஜனவரி 1,ஜூலை 1) அன்று விடுதலை செய்து பரிமாற்றம் செய்துகொள்வது வழக்கம். மார்ச் 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கைதுசெய்யப்பட்ட இந்தியரான குல்புஷன் யாதவுக்கு ராணுவ நீதிமன்றத்தில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. இந்தியா உடனடியாக உலக நீதிமன்றத்திற்கு செல்ல இத்தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  



பிரபலமான இடுகைகள்