எஸ்கேப் அனிமல்ஸ்!
அண்மையில் ஜெர்மனியைச் சேர்ந்த வனவிலங்கு காப்பகத்திலிருந்து
இரண்டு சிங்கம், ஒரு கரடி, ஒரு ஜாகுவார்
தப்பித்து சென்று பின்னர் பிடிபட்டன. இதுபோல வரலாற்றில் முன்னர்
ஏதேனும் நடந்துள்ளதா?
தப்பிய குரங்குகள்!
1935 ஆம் ஆண்டு 170 குரங்குகள்(rhesus) லாங் ஐலேண்ட் தீவிலுள்ள விலங்கு பூங்காவிலிருந்து திடீரென தப்பின. ஊழியரின் கவனக்குறைவே இதற்கு காரணம். கூட்டமாக சென்ற
குரங்குகள் மனிதர்களைப் போலவே ரயிலை நிறுத்தச் சொல்லி மறியல் செய்தன. தடுமாறிய போலீஸ், உள்ளூர் மக்களின் உதவியைக் கோரியது.
சுதந்திர நீச்சல்!
2012 ஆம் ஆண்டு ஜப்பானின் அக்வாரியம் ஒன்றிலிருந்து
தப்பிய பென்குயினை 82 நாட்களாக அக்வாரிய ஊழியர்கள் தேடியும் கிடைக்கவேயில்லை.
பின்னர் டோக்கியோ கடற்புரத்தில் பிடிபட்ட பென்குயின் நன்றாக மீன் உணவுகளை
தின்று ஜம்மென்று இருந்தது கண்டு பலரும் ஷாக்காகி போனார்கள்.
இறைச்சியாவேனா நான்?
அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரிலிருந்த இறைச்சிக்கடையில்
காளை ஒன்று தில்லாக தப்பித்து ஓடிவிட்டது. உள்ளூர் பூங்கா
ஒன்றில் ஜாலியாக புல்மேய்ந்து ரெஸ்ட் எடுத்த காளையை பின்னர் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அதனை நியூஜெர்சியிலுள்ள வனவிலங்கு காப்பகத்திற்கு அனுப்பி உயிரைக்
காத்தனர்.