போராட்டத்தை ஒடுககும் சீனாவின் ஆயுதம்!




அப்டேட் லேசர் துப்பாக்கி!

சீனா புதியரக லேசர் துப்பாக்கியைக் கண்டுபிடித்துள்ளது. எரிபொருள் வண்டிகளை தீப்பற்றச்செய்யும், மனிதர்களின் முடி, தோலை எரிச்சலுறச்செய்யும் தன்மை கொண்ட இந்த லேசர் துப்பாக்கியின் எடை 3 கி.கி, ரேஞ்ச் 800 மீ.


ZKZM லேசர் கம்பெனியின் தயாரிப்பான இத்துப்பாக்கி, ஏகே-47 துப்பாக்கியின் சைஸை ஒத்தது.  ZKZM -500 துப்பாக்கியின் லேசர் கதிர்கள் ஒருவர் மீது குவிந்தால் உடையே தீப்பற்றும் அபாயம் உண்டு. துப்பாக்கியிலுள்ள லித்தியம் பேட்டரி மூலம் ஆயிரம் முறை கதிர்களை பீய்ச்சியடிக்க முடியும். 15 ஆயிரம் டாலர்கள் விலைகொண்ட இத்துப்பாக்கி சீன ஆயுதப்படைக்கு முதல்கட்டமாக விற்கப்படவிருக்கிறது. லேசர்கதிர்களை பாய்ச்ச லித்தியம் பேட்டரியைவிட நைட்ரோகிளிசரின் போன்ற பொருட்களின் தேவை இதற்கு உதவும்