சிரியாவில் அதிகரிக்கும் வல்லுறவு கொடூரம்!


Image result for syria rape



வல்லுறவு வன்மம்!

சிரியாவின் அரசு ராணுவம் போராளிகளை ஒடுக்க அவர்களின் குடும்பத்தினர் மீது பயன்படுத்தும் பிரம்மாஸ்திரம், வல்லுறவு. "ஆன்மா இல்லாத உடலாகவே என்னைக் கருதுகிறேன். வலியிலும் அவமானத்திலும் என் உடலுக்கு நேருவதை என்னால் உணரவே முடியவில்லை" என கதறுகிறார் சிரியாவில் வல்லுறவுக்கு உட்பட்ட பெண் ஒருவர்.

அரசு ராணுவம், அரசுக்கு எதிரான போராளிகளை வழிக்கு கொண்டுவர சத்தமின்றி நடத்தும் யுத்தம்தான் வல்லுறவு. கணவர், தந்தை, சகோதரர் ஆகியோரை காணவில்லை என்று கூறி அமைதிபோராட்டம் நடத்தும் பெண்களும் அவர்களின் வீட்டிலேயே சிறைவைக்கப்பட்டு தொடர்ச்சியாக ராணுவத்தினரால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவது சிரியாவின் தினசரி அநீதி. "நீங்கள் சரணடையவேண்டும் அல்லது உங்கள் மனைவி அல்லது மகள் எங்களின் இச்சைக்கு இசையவேண்டும் என்பதுதான் இரக்கமற்ற அரசின் செய்தியாக செயலாக வல்லுறவு வழியாக போராளிகளுக்கு கூறப்படுகிறது" என்கிறார் பஷார் அல் ஆசாத்தின் ராணுவத்தில் பணிபுரிந்த முன்னாள் பெண் வீரர். வல்லுறவுக் காட்சிகளை கணவர், பிள்ளைகள் முன் அரங்கேற்றி அதனை படம்பிடித்து வீரர்களுக்கு அனுப்பும் அவலமும் நடைபெறுகிறது. கலாசாரரீதியாகவும், நிலப்பரப்புரீதியாகவும் பிளவுபட்ட தேசத்தில் எலிப்பொறியில் சிக்கிய எலிபோல தவிக்கும் பெண்களைப் பற்றிய திடுக் உண்மையை இயக்குநர் மனோன் லொய்ஸியூ தன் படங்களின் மூலம் உலகிற்கு சொல்லியுள்ளார்.