டிஎன்ஏ சோதனையை மேற்கொள்ளும் ஐரோப்பா நாடு!









டிஎன்ஏ சேகரிக்கும் நாடு!

இங்கிலாந்து தன் நாட்டிற்குள் வரும் மக்கள் குறித்து தகவல்களை டிஎன்ஏ மற்றும் கைரேகை மூலம் சேகரிக்க முடிவு செய்துள்ளதுஏறத்தாழ இங்கிலாந்து உள்துறை இதுகுறித்த கொள்கை முடிவை நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே சமர்ப்பித்தாலும் தற்போதுதான் அரசு இதுகுறித்த நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.


பல்வேறு அரசு அமைப்புகள் சேகரித்துள்ள கைரேகை தகவல்களை உள்துறை அமைச்சகம் பெற்று அதனை மத்திய தகவல்தளத்தில் சேமிக்கவிருக்கிறது. இதில் இங்கிலாந்து குடிமகன்கள் குறித்த முகம், கைரேகை ஆகியவற்றை பாஸ்போர்ட் ஏஜன்சி மூலமும், கைரேகை தகவல்களை சட்டத்துறை ஏஜன்சிகள் மூலமும் குரல் பதிவுகளை வருவாய்த்துறை மற்றும் சுங்கத்துறை மூலமும் அரசு பெறவுள்ளது. நிறைவாக தேசிய தகவல்தளத்திடமிருந்து  டிஎன்ஏ தகவல்களை பெறவிருக்கிறது. "அரசு சேகரிக்கும் பயோமெட்ரிக் தகவல்கள் மூலம் குடிமக்கள் பற்றிய தகவல்களை எளிதாக வேகமாகவும் அறியமுடியும்" என்கிறார் அரசு வட்டார அதிகாரி ஒருவர். சிறு குற்றங்களை செய்பவர்களையும் குற்றவாளிகளாக கருதும் அல்காரிதம், தகவல்களின் திருட்டு ஆகியவையும் எதிர்காலத்தில் ஆபத்துகளாக மாறக்கூடும். ஓராண்டுக்குள் தகவல்தளத்தை உருவாக்கும் முயற்சியில் இங்கிலாந்து அரசு இறங்கியுள்ளது.