ஊட்டச்சத்துக்குறைவால் தவிக்கும் ஹைதராபாத்!







ஊட்டச்சத்து குறைந்த ஹைதராபாத்!

ஹைதராபாத்திலுள்ள அரசு பள்ளி மாணவர்கள் 763 பேர்களிடம்(13-16 வயது) செய்த ஆய்வில் நானூறுக்கும் மேற்பட்டோர் தீவிரமான ஊட்டச்சத்து பற்றாக்குறையால் தவிப்பது தெரியவந்துள்ளது. மாணவர்களின் வயதுக்கேற்ற உடல் எடை விகிதமும் 18.5 சதவிகிதத்திற்கு கீழே உள்ளது ஆந்திரா அரசின் மக்கள்நல திட்டங்களின் செயல்திறன் வீழ்ச்சிக்கு அலாரம் அடிப்பதாக உள்ளது.

அடிப்படை வசதிகள் குறைவு, குடிநீர் போதாமை மற்றும் கழிவறை சுகாதாரமின்மை ஆகியவை மாணவர்களின் கல்வித்தரத்திலும் பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எடைகுறைவு பிரச்னை மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு 2.75 சதவிகிதம் என்றால் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இது மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவுகள். இதில் சைவ உணவு சாப்பிடும் 151மாணவர்களில் 102 பேர் ஊட்டச்சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் மதிய உணவுத்திட்டம் கடந்து மாணவர்களின் வீட்டிலுள்ள பொருளாதார நிலையும் ஊட்டச்சத்து குறைவுக்கு முக்கிய காரணியாக உள்ளது


நிபா ஒழிப்புக்கு இசை வீடியோ!

கேரளாவை கடந்த சில மாதங்களாக பீதிக்குள்ளாக்கிய நிபா வைரஸால் 17 பேர் இறந்துள்ளனர் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது."ஜூன் 1 ஆம் தேதிக்குப் பிறகு கேரளாவில் நிபா வைரஸால் தாக்கப்பட்ட நோயாளிகள் யாரும் கண்டறியப்படவில்லை" என்று சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா பெருமையுடன் பேட்டியளித்துள்ளார்.

நிபா நோயாளிகளுக்கென தனி வார்டு அமைத்து அவர்களைக் காப்பாற்ற போராடிய மருத்துவர் அனூப் குமார், தளர்வறியாமல் சிகிச்சையளித்து நோய் தொற்றி இறந்த சஜீஸ் என்ற செவிலி ஆகியோர் நிபா ஒழிப்பு பணியில் மறக்கமுடியாத மனிதர்கள். தற்போது நிபா ஒழிப்பைக் கொண்டாடும் வகையில் 'Bye nipah' என்ற பெயரில் இசைவீடியோவை தன்னார்வலர்கள் சிலர் தயாரித்து வெளியிட்டுள்ளனர். கோழிக்கோட்டில் உருவான இந்த இசைவீடியோவில் நிபா ஒழிப்புக்கு பாடுபட்ட பேபி மெமோரியல் மருத்துவமனை ஊழியர்கள் உற்சாகமாக ஆடிப்பாடி நடித்துள்ளனர். தியேட்டரில் போடுவாங்களோ?