குப்பைகளால் ஒரு பூங்கா!- டெல்லியில் சாதனை

ரீசைக்கிள் பூங்கா!

டெல்லியில் தேங்கும் அபரிமித கழிவுகளை என்ன செய்வதென குழப்பத்தில் கார்ப்பரேஷன் நிர்வாகம் தடுமாறி வருகிறது. டெல்லியில் தினசரி உருவாகும் திடக்கழிவு 10 ஆயிரம் டன்கள், எலக்ட்ரானிக் கழிவுகள் 30 டன்கள், உயிரியல் கழிவுகள் 70 டன்கள், கட்டிடக்கழிவுகள் 4 ஆயிரம் டன்கள், பிளாஸ்டிக் கழிவுகள் 800 டன்கள் என குவிந்து வருகிறது. இவை அனைத்தையும் மறுசுழற்சி செய்வது மிக கடினமான ஒன்று.

டெல்லி மெட்ரோரயில் நிர்வாகம் இதற்கு வழி கண்டுபிடித்துள்ளது. கிழக்கு டெல்லியில் மெட்ரோ ஸ்டேஷன் அருகில் சாஸ்திரி பார்க் என்ற பெயரில் ரீசைக்கிள் பூங்காவை நிர்மாணித்துள்ளது. திறந்தவெளி அரங்கு, யோகா ஸ்பாட் உள்ளிட்டவற்றை கழிவுப்பொருட்களை மறுசுழற்சி செய்து உருவாக்கியுள்ளது பசுமை டச்.


42 ஆயிரம் ச.அடி கொண்ட இந்த பூங்காவில் செயற்கை ஏரி, பனிரெண்டு இரும்பிலான சிற்பங்கள், மருத்துவ தாவரங்கள்,சோலார் விளக்குகள் ஆகியவையோடு இப்பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட வசதிகளும் உண்டு



பிரபலமான இடுகைகள்