குழந்தை கடத்தல் படுகொலைகள்!
குழந்தை கடத்தல்
படுகொலைகள்!
அசாமின் திமா ஹசாவோ, கர்நாடகாவின்
மங்களூருவில் நடந்த படுகொலை தாக்குதல்கள் ஆகியவை சேர்ந்து இந்த ஆண்டில் 61 போலி குழந்தை கடத்தல் தாக்குதல்களாக பதிவாகியுள்ளன.
இவ்வகையில் 24 பேர்
படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்தாண்டோடு(2017 7 கொலைகள்) ஒப்பிடும்போது வன்முறை 4.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2017 ஜன.1 - 2018
ஜூலை 5 காலகட்டத்தில் மட்டும் 69 நிகழ்வுகளில் 33 பேர் கொல்லப்பட்டும் 99 பேர் படுகாயமுற்றும் உள்ளனர். இவ்வாண்டின் ஜூலை மாதத்தில்
மட்டும் போலி குழந்தை கடத்தல் தொடர்பாக ஒன்பது தாக்குதல்கள் நடந்துள்ளதாக காவல்துறை
அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. வாட்ஸ்அப் வதந்திகள் இதற்கு முக்கியக்காரணம்.
இந்தியாவிலுள்ள
பல்வேறு மாநிலங்களில்
21 வழக்குகளில் 181 பேர் மீது காவல்துறை வழக்கு
பதிவு செய்து விசாரித்து வருகிறது.