மிகப்பெரும் கிரிக்கெட் மைதானங்கள்
மிகப்பெரும் கிரிக்கெட் மைதானங்கள் என்எம் கிரிக்கெட் மைதானம் அகமதாபாத், இந்தியா 1982ஆம்ஆண்டு திறக்கப்பட்டது. ஒரு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் பேர் அமர்ந்து விளையாட்டைக் காணலாம். தொடக்கத்தில் இதன் பெயர், மோட்டெரா என பெயர் வைக்கப்பட்டது. பிறகு வாழும் பரமாத்மாவான அரசியல்வாதி பெயருக்கு மாற்றப்பட்ட பெருமைக்குரிய மைதானம். 2023ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி, இந்த மைதானத்தில் நடைபெற்றது. ஈடன் கார்டன் கோல்கத்தா, இந்தியா 1864ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கொலோசியத்திற்கு சவால்விடும் அளவுக்கு பெரியது. ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியைப் பார்க்கலாம். 1987ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டி, 2016ஆம்ஆண்டு டி20 இறுதிப்போட்டி ஆகியவை நடைபெற்றன. எஸ்விஎன் சர்வதேச மைதானம் ராய்ப்பூர், இ்ந்தியா 2008ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. சத்தீஸ்கரில் உள்ள இம்மைதானத்தில் அறுபத்தைந்தாயிரம் பேர் உட்காரலாம். 2023ஆம் ஆண்டு இந்தியாவின் ஐம்பது கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக இடம்பிடித்தது. க்ரீன்ஃபீல்ட் மைதானம் திருவனந்தபுரம், இந்தியா 2015ஆம்...