இடுகைகள்

கல்விக்கொள்கை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லாக்டௌன் காலத்தில் சென்னைவாசியின் நிலை!

படம்
  லாக்டௌன் 4.1.2022   அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஜனவரி, பிப்ரவரி என இரண்டு மாதங்களுக்கு கட்டுரைகள் எழுதி மென்பொருளில் பதிந்துவிட்டேன். ஆனால், பத்திரிகை அச்சுக்கு செல்லவில்லை. இதுவரை செய்த வேலைகள் எல்லாம் வீணா இல்லையா என்று தெரியவில்லை. இப்போது உள்ள நிலைமையில் லாக்டௌன் அறிவிப்பார்கள் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை வந்தால் எங்களுக்கு சம்பள வெட்டு நிச்சயம். இம்முறை வேலையில் பிழைத்திருப்போமா என்று தெரியவில்லை. இந்த பத்தியை எழுதுகிற சமயம்,   அலுவல வேலைகளை வீட்டில் இருந்து செய்யும்படி அனுமதி கொடுத்துவிட்டார்கள். நான் வீட்டில் இருந்து வேலை செய்வதை விரும்பவில்லை. அலுவலகத்திற்கு எப்போதும் போல வரப்போகிறேன். சக பணியாளர்கள் இல்லையென்றால் வேலை செய்வது உன்னதமான அனுபவம். என்னால் அறையில் உட்கார்ந்து வேலை செய்ய முடியவில்லை. புத்தக காட்சி வேறு தள்ளிப்போகிறது. தற்போது எழுதி வரும் அறிவியல் பகுதிகள் சார்ந்து சில நூல்களை வாங்கும் தேவை உள்ளது. கல்விக்கொள்கை பற்றி வினி கிர்பால் இந்து ஆங்கிலத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந

வரலாற்றை மாற்றும் ஆட்சியதிகாரம்!

படம்
  அதிகாரம் எந்த இடத்தில் பொய் சொல்லும்?  செல்வம், அரசியல்கட்சி அலுவலகம், காவல்துறை, ராணுவம்? இதில் எந்த பதிலைத் தேர்ந்தெடுத்தாலும் தவறுதான். ஏனெனில் அதிகாரம் என்பது அறிவை உருவாக்கும் இடத்தில் தான் பொய்களை ஏராளமாக கூறும். ஏன், அறிவை அதிகாரம் தேர்ந்தெடுக்கிறது? அதுதான் மக்களை உஷார் படுத்துகிறது. அவர்களை உயர்ந்தவர்களாக்குகிறது. எச்சரிக்கை செய்கிறது.  இங்கு அறிவு என்பது கருவிதான். அதை யார், எப்படி, என்ன பயன்பாட்டிற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியம். ரஷ்யா, தனது பள்ளி பாடப்புத்தகங்களில் உக்ரைன் மீது எதற்கு போர் தொடுக்கிறோம் என்பதற்கான காரணங்களை கூறியிருக்கிறது என கார்டியன் பத்திரிகை கூறியிருக்கிறது. பிரிட்டிஷார் இந்தியாவில் ஆட்சி செய்தபோது, அவர்களின் தேவைக்கேற்ப பாடங்களை மாற்றியமைத்தனர். மக்கள்தொகை கணக்கெடுப்பு, சர்வே அறிக்கைகள், என நிறைய விஷயங்களை மாற்றியமைத்தனர். இப்படித்தான் இந்தியர்களின் மூளையை மாற்றியமைத்து தங்களுக்கு ஆட்சிக்கு சாதகமாக மாற்றினர். நாம் இன்றுவரையில் கூட அவர்கள் உருவாக்கிய பல்வேறு விஷயங்களிலிருந்து முழுமையாக மாறவில்லை.  சுதந்திரம் பெற்றபிறகு, காங்கிரஸ் கட்சி நீண்ட

கல்வித்துறையில் வகுப்பறை, ஆன்லைன் என ஹைபிரிட் முறையே வழக்கத்திற்கு வரும்! சுமித் மேத்தா, லீட் நிறுவனம்

படம்
        சுமித் மேத்தா       சுமித் மேத்தா லீட் ஸ்கூல் இயக்குநர் கல்வித்துறை தொழில்நுட்பத்தின் எதிர்காலம் என்ன ? அடுத்த இருபது ஆண்டுகளுக்கு கல்வி வழங்கப்படும் பள்ளி வகுப்புறைகளை மாற்ற முடியாது . ஆனால் கல்வியை வழங்குவதில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஆசிரியர்களின் திறனை கூட்டும் . ஆசிரியர்களின் பங்கு உயர்கல்வியில் அதிகம் உள்ளது . ஆனால் இதில் தொழில்நுட்பத்தின் பங்கு கூடும் . கல்வி என்பது தனிப்பட்ட அளவில் அதிகம் கவனம் செலுத்துவதாக மாறும் . மொழி , பாடங்கள் , தனிப்பட்ட விருப்பங்கள் சார்ந்தவையாக இருக்கும் . புதிய கல்வியாண்டு எப்படியிருக்கும் என நினைக்கிறீர்கள் ? ஏப்ரல் மாதம் முதல் சிபிஎஸ்சி பள்ளிகள் செயல்படவிருக்கின்றன . மேற்கு மற்றும் தெற்குப்பகுதியில் பள்ளிகள் விரைவில் திறக்கப்படவிருக்கின்றன . பள்ளிகள் திறக்கப்பட்டாலும் கூட இனிமேல் ஹைபிரிட் முறையில் பள்ளி , வீட்டில் இணையம் வழியில் கற்றல் என்றே கல்விமுறை தொடர வாய்ப்புள்ளது .    சுமித் மேத்தா தேசியக்கல்விக் கொள்கைப்படி கல்வி முறை எப்படியிருக்கும் என நினைக்கிறீர்கள் ? பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் க