இடுகைகள்

ரத்தசோகை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரத்தசோகையைப் போக்கும் பிஸ்கெட்!

படம்
பெரு நாட்டைச் சேர்ந்த பொறியியலாளர் 30 நாட்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகையை போக்கும் ஊட்டச்சத்து பிஸ்கெட்டை உருவாக்கி உள்ளார். அமெரிக்காவில் உள்ள ஹிஸ்டரி டிவி சேனலில் ஜனவரி மாதம் 29ஆம் தேதி, உலகை மாற்றிய ஐடியா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அதில் நியூட்ரி ஹெச் என்ற பிஸ்கெட்டை தயாரித்த விவசாய பொறியியலாளருக்கு விருது அறிவிக்கப்பட்டது. அது ரத்தசோகையை போக்கும் என்பதுதான் பிஸ்கெட்டின் விசேஷம். இதைக் கண்டுபிடித்தவர் ஜூலியோ கேரி பாரியோஸ். ”’மூன்று வயது முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகள் இந்த பிஸ்கெட்டை சாப்பிடலாம். முப்பது நாட்களில் இதிலுள்ள புரத சத்தும மூலம் அவர்களின் ரத்தசோகை பிரச்னை தீர்ந்துவிடும் ’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெரு நாட்டில் பாரியோஸின் நியூட்ரி ஹெச் பிஸ்கெட் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இருந்து குழந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள 50 சதவீத குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது. ரத்தசோகையை போக்கும் இந்த பிஸ்கெட்டில் அப்படி என்ன விஷயம் உள்ளது. கீன்வா எனும் தானியம், கோகோ, பொவைன் ஹீமோகுளோபின் ஆகிய மூன்று சேர்மானங்களே இந்த பிஸ்கெட்டை உ

இந்தியாவை உருக்குலைக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு!

படம்
healthline ஊட்டச்சத்து பற்றாக்குறையால் தடுமாறும் இந்தியா! தேர்தல் வந்தவுடன் இந்தியர்களை வேலையின்மை , பசி ,பட்டினி அனைத்தையும் மறக்கடிக்க பணத்தை வாரிறைக்க தொடங்குகின்றனர். இதெல்லாம் ஆட்சியைப் பெறும்வரையில்தான். அப்புறம்... இதுவரை நீங்கள் என்ன பார்த்தீர்களோ அதுவேதான் தொடரும். வீடு, உணவு, உடை என அடிப்படை ஆதாரங்களுக்கே நாம் இன்னும் அரசை நம்பியுள்ள நிலையில், தற்சார்பை அதிகரிக்கும் திட்டங்கள் கண்ணுக்கு எட்டியுள்ள தூரம் வரை  காணோம். தற்போது குழந்தைகளை பாதுக்கும் ஊட்டச்சத்துக்குறைவு எனும் பாதிப்பு மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளது. 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் செய்த ஆய்வுகளில் 20 சதவீத அளவுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை மேலோங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. ரத்தசோகை, குறைந்த எடை, வளர்ச்சிக் குறைவு ஆகியவை இதன் முக்கிய பாதிப்புகள். ஜார்க்கண்டில் பத்து தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 19 தொகுதிகள், கர்நாடகத்தில் பத்து தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் பத்து தொகுதிகள், ராஜஸ்தானில் ஆறு தொகுதிகள் இவ்வகையில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆதார அறிக்கை எகனா

ரத்தசோகையால் வீழும் பெண்கள்

படம்
pinterest ரத்தசோகையில் தவிக்கும் பெண்கள்! ஐந்தில் இரு பெண்கள் ரத்தசோகையில் தவிப்பதாக ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. ரத்தசோகை என்றால் உடலிலுள்ள ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவது ஆகும். இதிலுள்ள ஹீமோகுளோபின் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் உடலில் பரவ முக்கியக்காரணம். இப்பாதிப்பை முதலிலேயே கண்டறியாவிட்டால், பிரசவகால மரணங்களை தடுக்க முடியாது. அதோடு இதய நோய்கள் , நீரிழிவு பிரச்னைகளும் ஏற்படும். தமிழக அரசு மருத்துவமனையில் பதிவு செய்த கர்ப்பிணிகளுக்கு ரூ. 2ஆயிரம் வழங்குகிறது. அதோடு ஊட்டச்சத்து கிட்டும் உண்டு. நான்காவது மாதத்தில்  அடுத்த தவணை ரூ.2 ஆயிரம் தருவதோடு, ஊட்டச்சத்து கிட்டும் வழங்குகிறது. குழந்தை பிறக்கும்போதும் ரூ.4 ஆயிரம் தொகையோடு குழந்தைக்கான உதவி கிட்டும் வழங்கப்படுகிறது. நன்றி: டைம்ஸ்