இடுகைகள்

நேர்காணல்-அரசியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாஜகவின் வெறுப்பு அரசியல் நாட்டையே அழித்துவிடும்!- மம்தா பானர்ஜி

படம்
பாஜகவிற்கு மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் உறுதியாக இருப்பவர் மேற்குவங்க முதல்வரான மம்தா பானர்ஜி. எதிர்க்கட்சிகளை சமாளிப்பதோடு சவாலான மத்திய அரசையும் அரும்பாடுபட்டு சமாளித்து வருகிறார். உங்கள் வாழ்க்கையில் ஏராளமான  சவால்களை சந்தித்திருக்கிறீர்கள். அதுவும் சிறுவயதிலேயே. இதுவரை சந்தித்ததில் மிக கடினமான சவால் என்று எதனைக் குறிப்பிடுவீர்கள்? என் வாழ்க்கையில் போராட்டம் என்பதும் ஒரு பகுதி. எனது தந்தை இறந்தபோதுகூட  நான் யாரிடமும் உதவி கோரி நிற்கவில்லை. கல்லூரியில் படித்துவந்த காலகட்டம் தொடங்கி இடதுசாரிகளின் ஆட்சியின் சிரமங்களை அனுபவித்து வந்தோம். மொத்தம் 34 ஆண்டுகள். இவை தவிர  உடல்ரீதியிலான  சிரமங்கள். தலைமுதல் வயிறு வரைக்கும் ஆறுக்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சைகள் செய்யப்பட்டு உயிர்பிழைத்துள்ளேன். இக்காலகட்டங்களில் எங்கும் அணுவளவும் பயப்பட்டதில்லை.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடிப்பது மிகச்சிரமமான போராட்டங்களில் ஒன்று என கூறலாமா? நாங்கள் மாணவப்பருவத்திலிருந்து இன்றுவரை 34 ஆண்டுகளாக அவர்களோடு போராடி வருகிறோம். மோசமான இடதுசாரிகளின் ஆட்சியால் மாநிலத்தில் எந்த

"இந்தியாவும் சீனாவும் மனிதவளத்தை அடகு வைத்துள்ளன" - சமீர் அமின்

படம்
முத்தாரம் நேர்காணல் "முதலாளித்துவத்துவ உலகில் இந்தியாவும் சீனாவும் மனிதவளத்தை அடகு வைத்துள்ளன" பேராசிரியர் சமீர் அமின் தமிழில் : ச . அன்பரசு 1931 ஆம் ஆண்டு எகிப்தின் கெய்ரோவில் பிறந்த சமீர் அமின் Institut d’Etudes Politiques de Paris பல்கலையில் 1952 ஆம் ஆண்டு டிப்ளமோ பெற்றார் . கணிதப்புள்ளியியலில் தேர்ந்தவர் எகிப்தின் திட்ட ஏஜன்சியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார் . மூன்றாம் உலக நாடுகள் அமைப்பின் இயக்குநராக பணியாற்றியவர் , முதலாளித்துவ விளைவுகள் குறித்த பல்வேறு ஆய்வுகளை செய்துள்ள அறிஞர் . முதலாளித்துவத்தின் வழியாக திரும்பும் பாசிஸம் என்று கட்டுரை எழுதியுள்ளீர்கள் . வலதுசாரிகள் உலகில் பல்வேறு இடங்களிலும் எழுச்சி பெறும் நிலையில் பாசிஸத்தின் மறுமலர்ச்சி எனலாமா ? நவதாராளமயம் என்பது நிலையான சூழல் அல்ல ; எதிர்ப்புகளுக்கிடையேயும் இதனை அனுமதித்த அமெரிக்கா , ஜப்பான , ஐரோப்பா ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன . ஆனால் சீனா இதனுடன் விளையாடிவருகிறது . நவதாராளமயம் உடன்விளைவாக பாசிஸ சூழலையும் மேற்குலகில் ஏற்படுத்தி வருகிறது . இஸ்லாம் தீவிரவாதம் , இ