"இந்தியாவும் சீனாவும் மனிதவளத்தை அடகு வைத்துள்ளன" - சமீர் அமின்
முத்தாரம் நேர்காணல்
"முதலாளித்துவத்துவ உலகில் இந்தியாவும் சீனாவும் மனிதவளத்தை அடகு வைத்துள்ளன"
பேராசிரியர் சமீர்
அமின்
தமிழில்: ச.அன்பரசு
1931 ஆம்
ஆண்டு எகிப்தின் கெய்ரோவில் பிறந்த சமீர் அமின் Institut d’Etudes
Politiques de Paris பல்கலையில் 1952 ஆம் ஆண்டு
டிப்ளமோ பெற்றார். கணிதப்புள்ளியியலில் தேர்ந்தவர் எகிப்தின்
திட்ட ஏஜன்சியில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். மூன்றாம் உலக
நாடுகள் அமைப்பின் இயக்குநராக பணியாற்றியவர், முதலாளித்துவ விளைவுகள்
குறித்த பல்வேறு ஆய்வுகளை செய்துள்ள அறிஞர்.
முதலாளித்துவத்தின்
வழியாக திரும்பும் பாசிஸம் என்று கட்டுரை எழுதியுள்ளீர்கள். வலதுசாரிகள்
உலகில் பல்வேறு இடங்களிலும் எழுச்சி பெறும் நிலையில் பாசிஸத்தின் மறுமலர்ச்சி எனலாமா?
நவதாராளமயம் என்பது
நிலையான சூழல் அல்ல;
எதிர்ப்புகளுக்கிடையேயும் இதனை அனுமதித்த அமெரிக்கா, ஜப்பான, ஐரோப்பா ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சீனா இதனுடன் விளையாடிவருகிறது. நவதாராளமயம் உடன்விளைவாக
பாசிஸ சூழலையும் மேற்குலகில் ஏற்படுத்தி வருகிறது. இஸ்லாம் தீவிரவாதம்,
இந்துத்துவ தாக்குதல்கள் ஆகியவற்றையும் பாசிஸப்பிரிவில் கூறலாம்.
இந்தியாவில் நிலவிவருவது மென்மையான பாசிஸம். இது
அனைத்து பிரிவு மக்களுக்கும் இத்தன்மையில் தொடராது. ஐஎஸ் தீவிரவாதம்
பாகிஸ்தானில் தொடங்கி இராக், சிரியா, அல்ஜீரியா,
மொராக்கோ, எகிப்து என பிறநாடுகளுக்கும் பரவி வருகிறது
இப்போக்கின் தொடர்ச்சிதான்.
உலகமயமாக்கத்தின்
வரலாற்றை எப்படி புரிந்துகொள்கிறீர்கள்?
முதலாளித்துவத்தின்
முக்கிய பரிமாணமான உலகமயமாக்கம் என்பது உலகிற்கு புதிதல்ல. ஆங்கிலேயர்களின்
ஆட்சியில் வாழ்ந்த இந்தியர்களுக்கு இக்கருத்து பதினெட்டில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டில்
அனுபவமாகியிருக்கும். உலகமயமாக்கலின் வடிவமான காலனியாதிக்கத்திலிருந்து
இந்தியாவை காந்தி மற்றும் நேரு மீட்டனர்.
பாகிஸ்தான், வங்கதேசம்
தனிநாடு, கிழக்குப்பகுதி இந்தியாவிலிருந்து பிரிந்தது,
காங்கிரசின் தலைமையில் சுதந்திரம் ஆகிய விஷயங்களை இந்தியர்கள் ஏற்கவேண்டியிருந்தது.
உலகப்போரில் அமெரிக்கா, இங்கிலாந்து ஒருபுறமும்,
ரஷ்யா அதன் நேசநாடுகளும், மூன்றாவதாக சீனாவும்
நின்றன. இக்கூட்டணியில் இடம்பெறாமல் ஆப்பிரிக்கா போன்ற சுதந்திரம்
பெற்ற நாடுகளும் இருந்தன. மாவோவுக்குப்பிறகு உலகமயமாக்கலை நோக்கி
நகர்ந்த சீனாவில் புதிய புரட்சிகள் நிகழ்ந்தன. இவை இந்தியாவில்
இன்றுவரையிலும் நிகழவில்லை. 19 ஆம் நூற்றாண்டிலேயே ஏகபோக முதலாளித்துவம்
அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பானில் வளரத்தொடங்கிவிட்டது.
வியட்நாம், கியூபா, ரஷ்யாவில்
சோசலிச கிளர்ச்சி போன்றவை மேற்கத்திய நாடுகளில் ஏற்படவேயில்லை.
உலகமயமாக்கத்தின்
விளைவுகள் என்ன?
இதிலிருந்து மாற்று
கண்டுபிடிக்க முடியாது பெரிய சவால். இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் காலனியாதிக்கதிலிருந்து மீண்டாலும் உலகமயமாக்கலை எதிர்க்கும்
மாற்றை இன்னும் உருவாக்கவில்லை. உலகமயமாக்கலின் விளைவாக ஆப்பிரிக்கா
தன் நிலங்களிலுள்ள எண்ணெய், கனிமங்கள் ஆகியவற்றை இழந்தது.
இந்தியா, சீனா போன்றவை மனித வளத்தை அடகுவைத்துள்ளன.
இது முதலாளித்துவத்திற்கு நாம் தரும் வாடகை போல. கண்முன்னே உள்ள சவாலும் இதுதான்.
முதலாளித்துவத்தின்
முடிவில் சோசலிசம் அல்லது தீவிரவாதம் என வாய்ப்புகள்தான் உண்டு என்கிறார் ஜான் பெல்லமி
ஃபாஸ்டர்.
உங்கள் கருத்தென்ன?
முதலாளித்துவத்தின்
கட்டமைப்பு சிதையத்தொடங்கியுள்ளது. 1970 ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா,
ஐரோப்பா, ஜப்பான் ஆகிய நாடுகள் கடந்த முப்பது ஆண்டுகளாக
எதனை உருவாக்கினார்களோ அந்த அமைப்பு நொறுங்கிவிழத் தொடங்கிவிட்டது. இதிலிருந்து மீண்டுவிட்டோம் என கூறும் புள்ளிவிவரம்தான் சிரிப்பை வரவழைக்கிறது.
பிரெக்ஸிட், ஸ்பெயினின் கடலோனியா இதுபோன்ற நிகழ்வுகளை
இனி அதிகம் எதிர்பார்க்கலாம். போரை தடுக்க நாம் நினைக்கலாம்;
ஆனால் அதனைத் தடுப்பதில் நிறைய குழப்பம் உள்ளது.
நன்றி:JIPSON JOHN and
JITHEESH P.M., frontline.in