வீக்எண்ட் பிட்ஸ்! - ஹஸ்பெண்ட் தேவை!
பிட்ஸ்!
சைனீஸ் சங்கராபரணம்!
டுவிட்டரில் வெளியான
இசை வீடியோ பலரையும் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. மலேசியாவில் பிறந்த சீனரான
சோங் சியு சென் சங்கராபரணம் ராகத்தில் அவிழ்த்து விட்ட பாட்டில்தான் உலகமே சொக்கிப்போயுள்ளது.
துல்லியமான குரலில் வெளிநாட்டுக்காரர் சங்கதிகள் குறையாமல் பாடுவதை இணைய உலகம் ஆச்சர்யத்துடன் ரசித்துக்கேட்டு
மகிழ்ந்து வருகிறது.
டால்பின் கொடூரம்!
சீனாவின் குவாங்டாங்
பகுதியிலுள்ள பீச்சில்,
சுற்றுலா பயணி ஒருவர் தோளில் டால்பின் மீனை தூக்கிப்போட்டுக்கொண்டு காருக்கு
கொண்டு செல்லும் வீடியோ, ஷாக் வைரலாகி வருகிறது. விலங்கை கொன்று தோளில் தூக்கிச் செல்கிறார் என விலங்கு ஆர்வலர்கள் கொந்தளித்ததால்
போலீஸ் இதுகுறித்து என்கொயரியில் இறங்கியுள்ளது.
நாய்க்கு ட்ரோன்!
லக்னோவைச் சேர்ந்த
ராஜ், சாக்கடைகளில் சிக்கிக்கொள்ளும் வளர்ப்பு பிராணிகளை காப்பாற்ற எட்டு கிலோவில்
ட்ரோன் விமானத்தை தயாரித்துள்ளார். இதில் பொருத்தப்பட்ட நகம்
போன்ற கருவிகளின் மூலம் இக்கட்டான இடங்களில் மாட்டிக்கொண்டு முனகும் விலங்குகளை மீட்கலாம்
என தன்னம்பிக்கை தருகிறார் ராஜ்.
ஹஸ்பெண்ட் தேவை!
தலைப்பில் உள்ளதைத்தான்
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கிடம் கேட்டுள்ளார் 28 வயசு கேரளப்பெண் ஜோதி.
மலப்புரத்தைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனிங் பட்டதாரியான ஜோதி, மார்க்குக்கு கல்யாண கோரிக்கையை பீடிஎஃப்
வடிவிலும், பதிவுகள் வழியாகவும் அனுப்பி ஹஸ்பெண்டைத் தேடித்தர
கேட்டுள்ளார். இந்த விநோத பதிவை உடனே 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஷேர் செய்து வைரலாக்கியுள்ளனர்.
கணக்குப் பிரச்னை!
அமெரிக்காவில்
மன்ஹாட்டன் டூ ப்ரூக்ளின் செல்லும் ட்ரெயினில் கோரி சைமன்ஸ் குழப்பத்துடன் பயணித்தார். மூன்றாவது
படிக்கும் தன் மகனின் பாடநூலிலுள்ள கணக்கை எப்படி போடுவதுதான் பிர்சனை. அருகிலிருந்த இளைஞரிடம் உதவிகேட்க, அவரும் உதவினார். ஆனால் பரவசத்தில் உதவியவரின் பெயரைக்
கேட்க மறந்துவிட்டார் சைமன்ஸ். இச்செய்தியும் படமும் ஃபேஸ்புக்கில்
பதிவிடப்பட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறது.