ஜனநாயக படுகொலை!
ஜனநாயக படுகொலை!
இவ்வாண்டு வெளியான
பிரஸ் ஃப்ரீடம் இன்டெக்ஸ் அறிக்கையில் நார்வே பத்திரிகையாளர்களுக்கான சிறந்த நாடு என
கூறப்பட்டுள்ளது.
இதில் மிக ஆபத்தான நாடுகளாக வட கொரியா(180), இராக்(160)
ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியாவின் இடம்
138(1990-2018-108 இறப்பு).
அண்மையில் ஆஃப்கானிஸ்தானில்
ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலில் பத்து பேர் பலியாயினர். 2009 ஆம்
ஆண்டு பிலிப்பைன்ஸில் 31 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு
பிறகு நடைபெறும் கொடூரத்தாக்குதல் நிகழ்வு இதுவே.
உலகளாவிய பத்திரிகையாளர்
ஃபெடரேஷன்
1990-2015 ஆம் ஆண்டுவரை செய்த ஆய்வில் உலகெங்கும் பத்திரிகையாளர்கள்
மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களின் எண்ணிக்கை 2, 297.
2016 ஆம்
ஆண்டு 122, 2017 ஆம் ஆண்டு 82, 2018 ஆம்
ஆண்டு(மே வரை) 32 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சமூகரீதியிலான
பாதுகாப்பிற்கு விழிப்புணர்வு பிரசாரமும், ஊடக அமைப்பில் இணைவதும்,
காப்பீடுகளும் ஊடகவியலாளர்களுக்கு உதவும்.
பதட்டம் நிரம்பிய
பகுதிகளில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் தம் உயிருக்கான பாதுகாப்பை தாமே தேடிக்கொள்வதே
சாத்தியம்.
முதலுதவி பொருட்கள், தகவல்தொடர்பு
சாதனங்கள், உடைகள் வைத்திருப்பது ஆபத்தான நிலையை சமாளிக்க உதவக்கூடும்.