காதுகளுக்கு உப்பு தேவை!
காதுகளுக்கு உப்பு
தேவை!
திரைப்படங்களில்
யாரேனும் காமெடியனை அறைந்து காதில் ஒலி கேட்காமல் காது செவிடு ஆவதைப் பார்த்து ரசித்திருப்பீர்கள். ஆனால்
ஒலிமாசினால் அமெரிக்காவில் 15 சதவிகிதப்பேருக்கு செவித்திறன்
குறைபாடு(NIHL) உள்ளதை ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன. இதற்கு சர்க்கரை மற்றும் உப்புக்கரைசல் உதவுகிறது என தெற்கு கலிஃபோர்னியா மருத்துவ
பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
காதின் உள்ளே உள்ள கோக்லியா எனும் உட்புறப்பகுதி
ஒலியை மூளைக்கு அனுப்புகிறது. எலியிடம் இதுகுறித்த ஆராய்ச்சி நடைபெற்றது.
ஒலி எழுப்பும் முன்பும் பின்பும் கோக்லியா பகுதியை புகைப்படம் எடுத்தனர்.
இப்பகுதியிலுள்ள சிறு ரோமங்கள் இறந்துபோகின்றன. அடுத்து சுரக்கும் திரவத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. நியூரானை அழிக்கும் இந்த திரவத்தை உப்பு மற்றும் சர்க்கரை நீர்க்க வைத்து நியூரான்
பாதிப்புகளை 64% தடுக்கிறது. ராணுவத்தில்
அல்லது அதிக ஒலி கொண்ட சூழலில் வேலை செய்பவர்கள் செவித்திறன் இழப்பைத் தடுக்க உப்புக்கரைசல்
பயன்படக்கூடும்.