சிந்தஸைசர் இசைப்புரட்சி!



Image result for rahman



சிந்தஸைசர் இசைப்புரட்சி!-.அன்பரசு


Image result for synthesizer




தொண்ணூறுகளில் திரையுலகில் புயலென நுழைந்த ரஹ்மான் இந்தியாவை சின்ன சின்ன ஆசை பாட வைத்ததை யாரும் மறந்திருக்க முடியாது. பெரும் ஆர்க்கெஸ்ட்ரா உழைத்திருக்கிறதோ பலரும் ஆச்சரியப்பட தேசியவிருது வாங்கிய பாட்டு அது.
பல்லாயிரம் இதயங்களையும் கொள்ளைகொண்ட இசையை வழங்க ரஹ்மானுக்கு உதவியது சிந்தஸைசர் எனும் எலக்ட்ரிகல் கருவிதான். கீபோர்டு மூலம் சிந்தஸைசரை இயக்கினால் பியானோ, புல்லாங்குழல், இசைக்கருவிகளின் ஒலியை பாடலில் கொண்டு வரமுடியும். 1960 ஆண்டு பாப் இசைவழியே பிரபலம் பெற்று பாப், ராக், மெட்டல் என பலவகையிலும் விரிவான சிந்தஸைசர் பின்னாளில் மெல்ல புகழை இழந்தது. தற்போது பல்வேறு இசை ஆல்பக்கலைஞர்கள் மூலம் மீண்டும் சிந்தஸைசர் இசை உலகில் ரீஎன்ட்ரியாகியுள்ளது.
Image result for united machines himanshu pandey

"அப்பாவிடம் கார் வாங்கித்தர கடன் கேட்டு அடம்பிடித்தேன். அதில் சிந்தஸைசரின் ட்ரம்ஸ் இசையைக் கேட்கவே அவ்வளவு பிடிவாதம்" எனும் ஹிமான்சு பாண்டே யுனைடெட்மெஷின்ஸ் என்ற பெயரில் சிந்தஸைசரில் இசைக்குறிப்புகளை எழுதி டிஜேவாக மும்பையில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். நாட்டில் முக்கியமான பல்வேறு சிந்தஸைசர்களை பெரும் கலெக்ஷனாக சொத்தாக சேர்த்துவைத்துள்ளார். படுக்கையறை, சுவர், பெட்டின் கீழ் என அனைத்து இடங்களிலும் சிந்தஸைசர் மட்டுமே.
Image result for synthesizer



 "பழைய சிந்தஸைசர்களை இபே தளங்களில் அலசி ஆராய்ந்து வாங்குவதே என் வேலை. அப்பா எனக்கு தரும் பணத்தை சேமித்து டிரெஸ், சினிமா என செலவழிக்காமல் ஒவ்வொரு ரூபாயையும் சிந்தஸைசர் வாங்கவே செலவழித்தேன். எனது நண்பர்கள் கார், வீடு என செலவழித்தால் சிந்தஸைசர்களே நான் சேர்த்த சொத்து" என புன்சிரிப்போடு பேசுகிறார் பாண்டே. புகழ் மங்கிப்போன அனலாக் சிந்தஸைசர் மீது இப்படியொரு பித்து? பல்வேறு இசைக்கருவிகளை இதில் சோதனைமுறையில் நினைத்தபடி இசைக்கலாம் என்பதே காரணம். கொல்கத்தாவைச் சேர்ந்த ஆதித்யா நந்தவனா, சிந்தஸைசர்ஃபார்ம் நடத்திவரும் வருண் தேசாய் ஆகியோர் சிந்தஸைர்களை புதிதாகவும் உருவாக்கி வருவது இதில் முக்கியமானது. "காரின் எஞ்சினை கழற்றி மாற்றி விமானமாக மாற்றுவது போன்ற முயற்சி இது" என்று புன்னகைக்கிறார் ஆதித்யா. மென்பொருள் மற்றும் இணையதள நிறுவனம் நடத்திவரும் ரிச்சர்ட் ப்ரூக்ஸ் மற்றும் வானித் பொதுவல் ஆகியோரின் முக்கிய அடையாளம் மாடுலர் சிந்தஸைசர்களை உருவாக்கி வரும் நிறுவனத்தையும் தொடங்கியிருப்பதும்தான்.

".ஆர். ரஹ்மான் போன்ற இசைக்கலைஞர்கள் அல்லது யுனைடெட் மெஷின்ஸின் நிகழ்ச்சி பெருமளவு மக்கள் பார்வைக்கு வந்தாலே மாடுலர் சிந்தஸைசர்களைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்வார்கள்" என்கிறார் இசைக்கலைஞர் ரிச்சர்ட் ப்ரூக்ஸ்.

இவர்களில் ஆதித்யா, பாண்டே இருவரும் சிந்தஸைசர் ஆர்வலர்களுக்கான சந்திப்புகளை நகரங்களில் உருவாக்கி வருகின்றனர். இதில் வருண்தேசாய் நடத்தும் சிந்த்ஃபார்ம் என்பது பல்வேறு துறையிலுள்ளவர்களுக்கு சிந்தஸைசர் உருவாக்கம் மற்றும் பயிற்சிகளை இத்துறையிலுள்ள முன்னணி கலைஞர்கள் வழிகாட்டுதலில் ஆண்டுதோறும் வழங்கிவருகிறது. சிந்தஸைசரை இசைக்க என்ன தேவை? "இசைக்கலைஞரின் இசையைக் கேட்பதோடு அவர் என்ன செய்கிறார் என்பதை அறியும் ஆர்வம் இருந்தால் போதும். பாடுபட்டு சேர்ந்த தொன்மையான சிந்தஸைசர்களை தொழில் முதலீட்டுக்காக பலர் விற்றும்விடும் அவலமும் நடைபெறுகிறது" என்கிறார் ஆதித்யா. உயிரிவேதியியல் பொறியாளரான இவர் தன் குடும்பத்தொழிலைக் கவனித்தபடி கிடைக்கும் ஓய்வு நேரங்களில் சிந்தஸைசர் இசைக்கிற இசைஞன். இந்தியாவில் மட்டுமல்ல சிந்தஸைசர்களை சேமிக்கும் கலாசாரம் அமெரிக்கா, ஐரோப்பாவிலும் தற்போது பரவிவருகிறது.
Image result for united machines himanshu pandey
ஹிமான்சு பாண்டே




சிந்தஸைசர் வரலாறு!

கீபோர்டு மூலம் இயக்கப்படும் எலக்ட்ரிக் இசைக்கருவி சிந்தஸைசர். 1876 ஆம் ஆண்டு எலிசாகிரே என்பவர் முதல் எலக்ட்ரிகல் சிந்தஸைசரை உருவாக்கினார். புரோகிராம் முறையிலான சிந்தஸைசரை(RCA Mark2) கொலம்பியா பிரின்ஸ்டன் இசை மையம் இதனை உருவாக்கியது. இதில் உருவாக்கப்படும் சிக்னல்கள் ஆம்ப்ளிஃபையர், ஸ்பீக்கர்களில் இசையாக வெளிவருகிறது. பல்வேறு இசைக்கருவிகளின் ஒலியைக் கலவையாக சிந்தஸைசரில் உருவாக்கலாம். 1960ஆம் ஆண்டு தொடங்கி, பாப், ராக், கிளாசிக்கல் தளங்களில் பரவலான சிந்தஸைசர், 21 ஆம் நூற்றாண்டில் பெரும் புகழ்பெற்றது. 1980 ஆம் ஆண்டு  Yamaha DX7  எனும் டிஜிட்டல் சிந்தஸைசர் பரவலாக வெற்றிபெற்ற கண்டுபிடிப்பு. EMS VCS3,
APR 2600, Doefer A-100, Roland TB-303  உலகளவில் புகழ்பெற்ற கிளாசிக் சிந்தஸைசர்கள்.  

நன்றி: குங்குமம்