பாண்டா பிட்ஸ்!
ஆல் இன் ஆல் பாண்டா!
உலகில் அதிக வயதான
பாண்டா கரடியின் வயது
37. ஒரு நாளுக்கு 40 பவுண்டு மூங்கில்களை(17%
மட்டுமே செரிமானம் ஆகிறது) சாப்பிடுகிறது பாண்டா.
உலகிலுள்ள பாண்டா
கரடிகளில் பெரும்பாலானவை சீனாவுக்கே சொந்தமானவை. பாண்டாக்களை வாடகைக்கு பல்வேறு
நாடுகளுக்கு கொடுத்து ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கிறது.
தான் வாழும் இடத்தில்
தன் உடல் மூலம் குறிப்பிட்ட வாசனையை ஏற்படுத்தி எல்லையை வரையறுக்கிறது. வாசனை
மூலம் பாண்டாவின் வயது, பாலினம் ஆகியவற்றை பிற பாண்டாக்கள் அறிந்துகொள்கின்றன.
அபார நோய் எதிர்ப்பு
சக்தி கொண்ட பாண்டா,
பாக்டீரியாக்களை கண்டறிந்த ஒரு மணிநேரத்தில் கொன்றுவிடுகிறது.
பாண்டாக்கரடி குழுக்களுக்கு
embarresment என்று பெயர்.