இந்தியாவின் அணுசக்தி பயணம்!



Image result for india nuclear test


அணுசக்தி பயணம்!

இந்தியாவின் அணுசக்தி பயணம் தொடங்கிய ஆண்டு 1944. டாடா ஆராய்ச்சி நிலையத்தில் இதனை தொடங்கியவர் இயற்பியலாளரான ஹோமி ஜே. பாபா.

ஆராய்ச்சிகள் தொடங்கிய நான்காவது ஆண்டில் 1948 ஆண்டு, ஆக்கப்பூர்வமான பணிகளுக்கான அணுசக்தி ஆற்றல் சட்டம் இயற்றப்பட்டது.

Image result for india nuclear test





1968 ஆம் ஆண்டு இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய அணு ஆயுதப்பரவல் ஒப்பந்தத்தில்(NPT) இந்தியா கையெழுத்திட மறுத்தது.

இந்த ஒப்பந்தம் 1970 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வந்தது. 1974 ஆம் ஆண்டு பிரதமர் இந்திராகாந்தி தலைமையிலான அரசு முதல் அணு ஆயுத சோதனையை நடத்தியது.

1998 ஆம் ஆண்டு பாஜக பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு, ஐந்து அணு ஆயுதச்சோதனைகளை நடத்தியது. இதன் விளைவாக உலகநாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிட்டது.

 2001 ஆம் ஆண்டு இந்தியா மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விலக்கிக்கொண்டது.

2005 ஆம் ஆண்டு அமெரிக்கா- இந்தியா அணு ஆயுத ஒப்பந்தம் கையெழுத்தானது. 2016 ஆம் ஆண்டு ஏவுகணைத் தொழில்நுட்ப நாடானது. அணு ஆயுதங்களை ஏற்றுமதி இறக்குமதி(NSG) செய்வதற்கான முயற்சியில் உறுப்பினராவதற்கு முயற்சித்தது