வீக்எண்ட் கொண்டாட்டம்! -உள்ளாடையில் காதல் செய்தி!




Image result for message at panties






கோவில் கட்ட உதவிய பாகிஸ்தான்!

பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் அரசு ராவல்பிண்டி நகரில் கோவில் கட்ட 2 கோடி ரூபாய் நிதியுதவி அளித்து ஆனந்த அதிர்ச்சி தந்துள்ளது.

ராவல்பிண்டி மற்றும் இஸ்லமாபாத் ஆகிய இருநகரங்களுக்கும் பொதுவான கிருஷ்ணர் கோவில் இது. இருவேளை பூஜை நடைபெறும் இக்கோவிலுக்கு வரும் பக்தர் கூட்டத்தை சமாளிக்க அதனை விரிவுபடுத்திக் கட்ட பாகிஸ்தான் அரசு இந்நிதியை வழங்கியுள்ளது.  "மறுபுனரமைத்து கட்டப்படும் பணி நிறைவுபெறும் வரையில் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட ஏற்பாடு செய்துள்ளோம். புனரமைக்கப்பட்ட கோயிலில் இனி அதிக பக்தர்கள் இறைவனை தரிசிப்பதோடு அங்கு தங்கமுடியும்" என கோயில் அறக்கட்டளை வாரிய(ETPB) அதிகாரி முகமது ஆசிஃப் கூறியுள்ளார். 1970 ஆம் ஆண்டிலிருந்து இக்கோயிலை இவ்வாரியம் பராமரித்து வருகிறது.


2

பிச்சையெடுக்க விடுங்கள்!

சம்பளம் மாதம் ஐந்தாம் தேதிக்குள் வரவில்லையென்றால் அதையே செலவுகளுக்கு நம்பியுள்ள குடும்பஸ்தர்களின் நிலை என்னவாகும்? மும்பை கான்ஸ்டபிள் கடிதத்தில் எழுதிய சிச்சுவேஷன்தான் ஏற்படும்.

மும்பையைச் சேர்ந்த கான்ஸடபிள் தியானேஸ்வர் அகிராவ் சின்சியராக வேலை பார்ப்பவர்தான். அதற்காக இரண்டு மாதங்கள் சம்பளம் வாங்காமலா பணியாற்ற முடியும்? சம்பளம் போடாததால் தியானேஸ்வர்,  மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் தன் உயரதிகாரிகளுக்கு "யூனிபார்மில் பிச்சை எடுக்க அனுமதிக்க வேண்டும்" என கடிதம் எழுதியுள்ள செய்தி கசிந்து பலரையும் உச்சு கொட்ட வைத்துள்ளது. கால் உடைந்து சிகிச்சை பெறும் மனைவியைப் பார்த்துக்கொள்ள மார்ச் 20 -28 வரை லீவ் எடுத்துகொண்டார். டூட்டி பற்றி ஆபீசில் சொல்லாததால் சம்பளத்தை நிறுத்திவைத்ததுதான் தியானேஸ்வரின் கோபத்துக்கு காரணம். "என் சம்பளத்தை நிறுத்தி வைத்ததால் மனைவியின் சிகிச்சை, பெற்றோர், குழந்தைகளுக்கான செலவுகளோடு கடன்களை எப்படி சமாளிப்பது என்பதால் முதல்வருக்கு கடிதம் எழுதினேன்" என்கிறார் கான்ஸ்டபிள் தியானேஸ்வரர்

3
உள்ளாடையில் காதல் செய்தி!

மகாராஷ்டிராவின் பிவாண்டி பகுதியில் துவைத்து காயப்போடும் பெண்களின் உள்ளாடைகள் மின்னல் வேகத்தில் களவு போய்க்கொண்டிருந்தன. அண்மையில் அதற்கான காரணத்தை போலீஸ் கண்டுபிடித்துள்ளது.

திருடுபோன உள்ளாடை பெண்ணுக்கு திரும்ப கிடைத்தபோது அதில் எழுதியிருந்த காதல் மெசேஜை வைத்து திருடரை பிடித்துவிட்டனர். மாயுரேஷ் பாட்டீல் என்பவர்தான் அந்த அதிநுட்ப திருடர். உள்ளாடை திருடுபோன பெண் ஒருவர் கொடுத்த வாய்மொழி புகாரின் அடிப்படையில் காதல் மன்னர் மாயுரேஷை கைது செய்த நாரிபோலி போலீஸ் அவரை பரிபக்குவமாக என்கொயரி செய்துவருகிறது. அதே ஏரியாவில் திருடுபோன பிற உள்ளாடைகளின் கதி என்ன, அதிலும் காதல் மெசேஜ்கள் எழுதப்பட்டிருந்ததா என்பதையும் போலீஸ்படை ஆராய்ந்து வருகிறது. படிச்ச மெசேஜை சொல்லலியே சார்?

4


 கோபத்தில் அனுமன்!

கார், பைக் என பல்வேறு இடங்களிலும் ஆரஞ்சு நிறத்தில் கண்கள் சுருக்கி ஆக்ரோஷமாக இருக்கும் அனுமனை பார்த்திருப்பீர்கள். இதனை வரைந்தவர் பற்றி தெரியுமா?

கேரளாவின் காசர்கோடைச் சேர்ந்த கரன் ஆச்சார்யா, ஆங்க்ரி அனுமனின் பிரம்மாதற்போது மங்களூரிலுள்ளவரை பிரதமர் மோடி தேர்தல் பேச்சில் பாராட்டி பிரபலப்படுத்தியுள்ளார். "நண்பர்களுக்காக ஜாலியாக வரைந்து கொடுத்த ஓவியம் அது. பிரதமர் மோடி என்னை பாராட்டியது நண்பர்கள் சொல்லித்தான் தெரியும்" என நெகிழ்கிறார் கரன். 2015 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி சமயம் கோயில் திருவிழாவுக்காக  கரன் அரைமணிநேரத்தில் வரைந்த ஓவியமே கோப அனுமன். இணையத்தில் இப்படம் வைரலாக, ஸ்டிக்கர்களாக அச்சிட்டும் சேல்சில் சாதனை படைத்துள்ளது. "பிரதமர் குறிப்பிடாததற்கு முன்பு எனக்கு அனுமன் வரைந்ததற்கான அங்கீகாரமே கிடைக்கவில்லை. இதில் பணத்தையும் நான் எதிர்பார்க்கவில்லை. அனுமனின் படத்தை கலைவடிவமாகவே கருதுகிறேன். இதில் அரசியலுக்கு இடமில்லை" என கவனமாக பேசுகிறார் கரன் ஆச்சார்யா.

5

பிளாஸ்டிக் பர்கர்!

பர்கா, பீட்ஸா எல்லாம் எதற்கு? இட்லி, தோசை, சப்பாத்தி என தின்றவர்களுக்கு வாழ்க்கை சலிக்காமலிருக்கத்தானே. ஒரே ஒரு பர்கரைத் தின்ற டெல்லி மனிதர் வாழ்க்கை தாறுமாறாகிவிட்டது.

டெல்லியைச் சேர்ந்த ராகேஷ்குமார், ராஜ்சௌக் மெட்ரோ ஸ்டேஷன் அருகிலிருந்த பர்கர்கிங் கடையில் ஆசையும் ஆர்வமுமாக சீஸ் வெஜ்பர்கரை வாங்கினார். வாய் கொள்ளாத பர்கரை பசியும் ஆர்வமுமாக குதப்பித் தின்றவருக்கு அடுத்த சோதனை விரைவிலேயே தொடங்கியது. வேகமாக தின்றவருக்கு தொண்டையில் ஏதோ குத்தியதுபோல எரிச்சல் தோன்ற கடை மேலாளரிடம் முறையிட்டார். எரிச்சலும் வலியும் அன்லிமிடட்டாக பெருக உடனே கன்னாட் பிளேசிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனையில் பர்கரிலிருந்த பிளாஸ்டிக்தான் பிரச்னைக்கு காரணம் எனத் தெரிந்து புகார் செய்ய,  பர்கர்கடை மேலாளர் தற்போது லாக்அப்பில் சொகுசாக உள்ளார்.