"தேசபக்தியும் ஆபத்துதான்"
முத்தாரம்
Mini
கிராமத்து சூழல், நகர குடியேற்றம் என இரண்டையும் பேசும் நூலில் இடம்பெயர்வை சிபாரிசுசெய்கிறீர்களா?
நான்
எனது பூர்வீக கிராமத்தை விட்டு நகருக்கு சென்று இருபதாண்டுகள் ஆகின்றன.
திரும்பிச்செல்ல ஆசைதான். ஆனால் எனது கிராமத்தில் என்ன மிச்சமிருக்கிறது? அடிப்படை கட்டமைப்புகளே இல்லை. வாழ்க்கைக்கு வழியில்லாத கிராமத்தில் வயதானவர்கள் மட்டுமே வாழ்கிறார்கள். இனி கிராமங்கள் நூல்களிலும், கனவுகளிலும் மட்டுமே வாழும்.
உலகில் ஒருவர் தனக்கான இடத்தை தேடுவது பிரச்னையாகிவருகிறது என்கிறீர்கள். இது நவீன இந்தியாவின் பிரச்னையா?
இனக்குழுக்களுக்கிடையே உள்ள எல்லைகள் இந்தியாவில் அதிகம்.
ஜனநாயக தலைவர்களும் இதனை தங்கள் ஆதாயங்களுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். வரலாறு எங்கும் இனங்களை பிரித்தாளுவதைக் காணலாம்.
அமெரிக்காவில் புஷ் முதல் ட்ரம்ப் வரை தேர்தலில் வென்றதே இப்படித்தான்.
நூலில் வலம்வரும் கோபமான முஸ்லீம் என்பது நீங்கள்தானா?
வாசிக்கும் வாசகர்கள் தங்களையே அதில் உணர்வார்கள். எழுதப்பட்டிருப்பது அந்நோக்கத்தில்தான்.
தேசபக்தி என்பதைப் பற்றிய தங்கள் கருத்து?
எல்லா
இசங்களுமே தீவிரமாகும்போது மக்களுக்கு ஆபத்தானவைதான்.
-நியாஸ் ஃபாரூக், எழுத்தாளர்.